Monday, 1 October 2018

பிரதமரின் பணிப்புரைக்கமைய பொலிஸ்மா அதிபரின் ஸ்கொட்லாந்து விஜயம் நிறுத்தம்

பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய விஜயத்தை பிரதமரின் பணிப்புரைக்கமைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் ஸ்கொட்லான்ட் யாட் பொலிஸ் மேற்கொள்ளும் விசேட பயிற்சியில் கலந்துகொள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சர் நலின் பண்டார, அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, சிரேஷ்ட உதவி செயலாளர் மாலிகா சூரியபெரும, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன ஆகியோர் பிரித்தானிய செல்லவிருந்தனர்.
இந்த செயலமர்வு இன்று (01) முதல் எதிர்வரும் 07ம் திகதி வரை பிரித்தானியா, ஸ்கொட்லாந்தில் இடம்பெறவிருந்தது.
பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸார் தொடர்பில் தற்பொழுது காணப்படும் கருத்துக்களை கருத்தில் கொண்டு பிரதமர் இந்த விஜயத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

விளம்பரம்


விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் +94774111499

Loading...