Monday, 1 October 2018

இன்­று ­முதல் அதி­க­ரிக்கிறது ரயில் கட்­டணம்

2018 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட பிரே­ர­ணையின் அடிப்­ப­டையில் திறை­சே­ரியின் ஆலோ­ச­னையின் பிர­காரம் ரயில் கட்டணங்கள் இன்று முதல் 15 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக புகை­யி­ரத திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

அதன்படி ஆரம்பக் கட்­ட­ணத்தில் எந்த மாற்­றமும் இடம்­பெ­றாது. என்­றாலும் ஆரம்பக் கட்­ட­ணத்தில் பய­ணிக்கும் தூரத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன எனவும் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

ஏற்­க­னவே 3 ஆம் வகுப்­புக்­காக அற­வி­டப்­பட்ட ஆரம்­பக்­கட்­ட­ண­மான 10 ரூபா, 2 ஆம் வகுப்­புக்­காக அற­வி­டப்­பட்ட 20 ரூபா மற்றும் முதலாம் வகுப்­புக்­காக அற­வி­டப்­பட்ட 40 ரூபா ஆகி­ய­வற்றில் எந்த மாற்­றங்­களும் இடம்­பெ­றாது. என்­றாலும் அடிப்­ப­டைக்­கட்­ட­ணத்தில் இது­வரை பய­ணித்த தூரம்  தற்­போது குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அதன் பிர­காரம் 10 ரூபா­வுக்கு பய­ணிக்க முடி­யு­மா­கவிருந்த 9 கிலோ மீற்றர் தூரம் தற்­போது 7 கிலோ மீற்­ற­ராக குறைக்­கப்­பட்­டுள்­ளது. அனு­ம­திச்­சீட்டு கட்­ட­ணத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதன் மூலம் பரு­வச்­சீட்டு கட்­ட­ணத்­திலும் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­போதும் பரு­வச்­சீட்­டுக்­காக இது­வரை அற­வி­டப்­பட்டு வந்த வீதத்தில் எந்த மாற்றமும் இடம்­பெ­றாது.

அதன் பிர­காரம் அரச ஊழி­யர்­களின் பரு­வச்­சீட்­டுக்­காக அற­வி­டப்­படும் கட்­ட­ண­மா­னது ஒரு­முறை பய­ணிக்கும் பய­ணச்­சீட்­டின் பெறு­ம­தியில்  9 மடங்­காகும். தனியார் துறை ஊழி­யர்­களின் பரு­வச்­சீட்­டுக்­காக அற­வி­டப்­படும் கட்­ட­ண­மா­னது ஒரு­முறை பய­ணிக்கும் பய­ணச்­சீட்டின் பெறு­ம­தியில் 24 மடங்­காகும்.

அதா­வது 12 நாளுக்­கான கட்­ட­ண­மாகும். பாட­சாலை மாண­வர்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழகம், பிரி­வெனா கல்வி பயிலும் மாண­வர்­க­ளிடம் அற­வி­டப்­படும் கட்­ட­ண­மா­னது, ஒருமுறை பயணிக்கும் பயணச்சீட்டின் பெறுமதியில் 6 மடங்கு கட்டணமாகும். திறைசேரி மற்றும் போக்குவரத்து அமைச்சு அனுமதியுடன் இந்த கட்டண திருத்தம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.ஆர்.எம்.வஸீம்)
Loading...