Friday, 28 September 2018

MEEDS இன் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு (VIDEO)

MEEDS இன் ‘மஸ்ஜித் முகாமைத்துவ வழிகாட்டி’ மற்றும் ‘மஸ்ஜித் மைய சமூக மேம்பாடு – மஸ்ஜிதை மையப்படுத்திய மஹல்லா அபிவிருத்தி திட்டங்களுக்கான கைநூல்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கடந்த புதன்கிழமை (26.09.2018) இடம்பெற்றது.
கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி, ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி உள்ளிட்ட ஆலிம்கள், புத்திஜீவிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
மஸ்ஜிதை மையப்படுத்தி ஒரு பிரதேசத்தை ஆன்மீக ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு MEEDS (Masjid Based Education and Economic Development Society) நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்தக்கது.
Loading...