Thursday, 27 September 2018

வக்பு சபையின் மன்னார் பள்ளிவாசல் கட்டிட ஊழல் பற்றிய விசாரணை. நடந்தது என்ன?

மன்னார் டவுன் ஜும்மாஹ் பள்ளிவாசல் மூன்றுமாடி கட்டிட நிர்மனப்பனியில் இடம்பெற்ற ஊழல் பற்றிய விசாரணை நேற்று வக்பு சபையில் நடைபெற்றது.

இந்த விசாரனைக்காக குறித்த பள்ளிவாசல் நிர்மாண பணியின்போது இருந்த நிருவாகத்தினர்களும், இன்றைய நிருவாகத்தினர்களும், முறைப்பாட்டாளரான குவைதிர்கான் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். 

விசாரணைக்காக இரண்டு மணிக்கு வருமாறு இரு தரப்பினர்கள் மற்றும் வேறு பலரும் வருகைதந்து நீண்ட நேரமாக காத்திருகையில், வக்பு சபை தவிசாளர் யாசீன் அவர்கள் 3.3௦ மணிக்கு பின்பே வருகை தந்திருந்தார்.

முதலில் வக்பு சபை தவிசாளர் யாசீன் என்பவர் யார் என்று அறிந்துகொள்ள வேண்டும். இவர் முன்னாள் அரசியல்வாதியாவார். அதாவது முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்களின் குடும்ப உறுப்பினர். மேலும் பேரியல் அமைச்சராக இருந்தபோதும், வேறு பல சந்தர்பங்களிலும் அரசியலில் பலவிதமான பதவிகளை வகித்தவராவர். முஸ்லிம் அரசியலில் இவரது பெயர் மிகவும் பிரபலமானது.

இவ்வாரானவரிடமிருந்து அரசியல் சாராத எந்தவித நியாயத்தினையும் எதிர்பார்க்கலாமா ? 

இந்த முறைப்பாடானது ஒரு வருடத்துக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. உரிய ஆதாராம் இல்லாத எந்தவித முறைப்பாடுகளையும் வக்பு சபை ஏற்றுக்கொள்வதில்லை. உரிய ஆதாராத்தின் அடிப்படையிலேயே முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதனாலேயே இந்த முறைப்பாட்டினை வக்பு சபை ஏற்றுக்கொண்டு விசாரணைக்காக அழைத்திருந்தார்கள்.

குறித்த பள்ளிவாசலை கட்டுவதற்காக எங்கிருந்து பணம் வந்தது என்றும், எவ்வளவு வந்தது என்றும், யாருடைய பேருக்கு வந்தது என்றும், கேட்கப்பட்ட எந்தவிதமான கேள்விகளுக்கும் பள்ளிவாசல் நிருவாகத்தினர்களிடம் பதில் கிடைக்கவில்லை.

சுருக்கமாக கூறப்போனால் அதுபற்றிய எந்தவித அறிவுகளும் அவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன் பள்ளிவாசல் காட்டுமான பணிகள் பற்றி முஸ்லிம் கலாச்சார திணைக்களத்துக்கு இதுவரையில் அறிவிக்கப்படவுமில்லை. 
பள்ளிவாசல் நிருமானப்பணியில் “மெகா கண்ஸ்ரக்சன்” நிறுவனம்தான் ஈடுபட்டது என்ற பதிலை மட்டும் கூறியிருந்தார்கள். (இந்த மெகா கண்ஸ்ரக்சன் நிறுவனமானது அமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமானது) இதனால் வக்புசபை தவிசாளர் பதட்டமடைந்திருந்தார். தவிசாளர் தவிர்ந்த வேறு எந்த உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் வாயே திறக்கவில்லை.

இந்த நிருவாகசபையின் அப்பாவித்தனத்தினை உணர்ந்த தவிசாளர் யாசீன் அவர்கள் முறைப்பாட்டாளரான குவைதிர்கானை நோக்கி “நீங்கள் குறித்த பள்ளிவாசலின் ஜமாத்தில் அங்கம் வகிக்கிண்றீர்களா ? குறைந்தது ஏன் ஐந்து பேர்கள் சேர்ந்து முறைப்பாடு செய்யவில்லை ? ” என்று கேள்வி எழுப்பினார்.
அப்படியென்றால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கு முன்பு ஆகும். இப்போதுதான் இந்த முறைப்பாட்டை ஒருவர்தான் செய்துள்ளார் என்று புதிதாக கண்டுபிடித்ததன் மர்மம் என்ன ? ஐந்து பேர்கள் முறைப்பாடு செய்யாததாலும், குறித்த பள்ளிவாசலில் ஜமாஅத் இல்லாத காரணத்தாலும் குறித்த முறைப்பாட்டினை நிராகரித்திருக்கலாமே ! ஏன் நிராகரிக்க தவறினார்கள்?

விடயம் இதுதான் அதாவது இந்த முறைப்பாடு செய்யப்பட்டபோது வக்பு சபை தவிசாளராக இருந்தவர் வேறு ஒருவர். அப்போதே இந்த வழக்கு வக்பு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அவர் இல்லாத நிலையிலேயே புதிய தலைவர் யாசீன் அவர்களினால் விசாரணை செய்யப்பட்டது.

வக்பு சபையின் விசாரணை என்பது இழுத்தடிக்கும் ஓர் சாபக்கேடாகும். பத்து வருடங்களுக்கு மேலும் விசாரணைக்காக அலைந்தவர்கள் பலர் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

Loading...