Wednesday, 31 May 2017

லைப் பார்ட்னர் ரொமான்சில் எப்படி? உடம்பின் மச்சத்தை வைத்து கூறிவிடலாம்

மச்ச ஜோதிடத்தில் ஒருவரின் உடலில் இருக்கும் மச்சத்தை வைத்து அவர் இல்லறத்தில் எப்படிப்பட்ட நபராக இருப்பார், அவரின் இல்வாழ்க்கை குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறிவிடலாம்.

நெற்றி

நெற்றி மீது மச்சம் உள்ளவர்கள் கடின சூழல்களை எதிர் கொள்பவர்கள். ஆனால் இது திருமண பந்தத்திலும் தொடரும் என்று சொல்ல முடியாது. ரொமான்ஸ், காதலை வெளிப்படுத்துவதில் சற்று பின்தங்கி இருப்பார்கள்.

தாடை

தாடையில் மச்சம் உள்ளவர்களுக்கு அவர்கள் துணை எதிர்பார்க்கும் அளவிற்கு பேரார்வம் இருக்காது. இதனால் இல்வாழ்க்கை அவ்வளவு பிரகாசமாக இருக்காது.

கன்னம்

வலது கன்னத்தில் மச்சம் இருக்கும் நபர்கள் மிக கடினமாக உழைப்பவர்களாகவும், அதிகமாக நேசிப்பார்களாகவும் இருப்பார்கள்.

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் தங்கள் துணையை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதாம்.

கை

வலது கையில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக திகழ்வார்கள். இவர்களது காதலை யாராலும் பிரதிபலிக்கவோ, அந்த அளவிற்கு காதலிக்கவோ முடியாது.

இடது புறம் மச்சம் இருந்தால், அவர்களுடைய இல்வாழ்க்கையில் தடங்கல்கள் கொஞ்சம் இருக்கும்.

கண்

வலது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் உண்மையாக, ஆழமாக காதலிப்பார்கள். இடது கண்ணில் மச்சம் இருந்தால், திருமண வாழ்வில் மோதல்கள் ஏற்படும்.

புருவம்

புருவத்தில் மச்சம் இருப்பவர்கள், எந்த உறவிலும் பிடிப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களால் இல்லறத்தில் சங்கடங்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

மூக்கு

மூக்கின் மீது மச்சம் இருந்தால், அவர்கள் தானாகவே ஒரு சிக்கலில் சென்று அமர்ந்துக் கொள்வார்கள். எனவே, இவர்கள் உற்று கவனிக்க வேண்டியது அவசியம்.

மூக்கு நுனியின் மீது மச்சம் இருந்தால், அவர்கள் இல்லற வாழ்வில் தாம்பத்தியம் போன்ற எண்ணிலடங்கா பிரச்சனைகள் ஏற்படும்.

கீழ் உதடு

கீழ் உதட்டில் மச்சம் இருந்தால், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் மேலோங்கி காணப்படுவார்கள். அதன் காரணமாகவே இவர்கள் வாழ்வில் அழுத்தம் அதிகரிக்கும்.

கழுத்து எலும்பு

கழுத்து எலும்பில் மச்சம் இருந்தால், அவர்கள் தங்கள் காதல் துணைக்கு மிகவும் உறுதுணையாக, அரவணைப்பாக இருப்பார்கள்.

இடுப்பு

இடுப்பு பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் தங்கள் துணைக்கு மிகவும் இனிமையான நபராக திகழ்வார்கள்.

Loading...