Tuesday, 21 March 2017

பணிகளை பார்வையிட தேசிய தலைவர் களத்துக்கு விஜயம்.

தேசிய தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களது உத்தரவுக்கு அமைய கடந்த இரண்டு நாட்கள் (18,19/03/2017) கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பல குழுக்களாக பிரிந்து சென்று அங்கு டெங்கு நோயை ஏற்படுத்திய காரணிகளை கண்டறிந்து அவைகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் SLMC போராளிகள் குழுமத்தின், SLMC புதிய வெளிச்சம் மற்றும் SLMC வெளிச்சம் ஆகிய குழுமத்தினால் சிரமதானப்பணிகளை மேற்கொண்டோம்.


இரண்டாவது நாளான நேற்று தேசிய தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் எங்களது பணிகளை நேரில் களத்துக்கு வந்து பார்வையிட்டார். தலைவருடன் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், மாகான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், கிழக்கு மாகான முன்னாள் தவிசாளர் பாயிஸ் ஆகியோரும் வருகை தந்தார்கள்.   


Loading...