Monday, 6 March 2017

காணமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களினால் வவுனியாவில் நடாத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக வவுனியாவில் பேரணி

தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று வவுனியாவில் பேரணியொன்றினை நடத்தியுள்ளது.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இப் பேரணி புகையிரத நிலைய வீதி வழியாக கடை வீதியை அடைந்து ஹொரவப்பத்தானை வீதி வழியாக ஏ9 வீதியில் இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்தளத்தினை அடைந்தது.

சுமார் 300 பேர் வரையில் கலந்து கொண்ட இப்பேரணியில் எமது பிள்ளைகள் எங்கே?, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய், எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்?, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந் நிலையில் 9 நாளாகவும் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தளத்தில் பேரணி அடைந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுது தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை பேரணியின் இறுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அவ் அமைப்பின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், செய்த படுகொலைகளை விசாரிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோருமா? –

Ahilan_Thiruchelvamவடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்ரவன் அவர்களை இணைத்தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் பணிகளில் முக்கியமான ஒன்று கடந்த காலத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதியாளர்களின் முன் நிறுத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் என பலரை சிறிலங்கா இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து தமிழ் இயக்கங்கள் படுகொலை செய்தன.

இதில் தமிழ் மக்கள் பேரவைக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. அதுவும் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் துணிச்சலுடனும் நேர்மையுடனும் செய்யப்பட வேண்டிய பொறுப்பு உண்டு.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் புளொட் இயக்கங்கள் செய்த படுகொலைகளை போர்க்குற்றங்களை விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு அதன் இணைத்தலைவராக இருக்கும் விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு உண்டு.

தங்களுக்கு உள்ளேயே கொலைகாரர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதி கோரி நிற்க முடியும்? எனவே தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பங்காளிகளாக இருக்கும் புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கங்கள் செய்த படுகொலைகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது தமிழ் மக்கள் பேரவையின் கடமையாகும்.

புளொட் இயக்கம் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும் வரை இராணுவத்தினருடன் நேரடியாக இணைந்து தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் என்பது வெளிப்படையான விடயம் என்றாலும் புளொட் இயக்கம் செய்த மிகக்கொடூரமான கொலைகள் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

யாழ். நகரில் புளொட் இயக்கம் செய்த கோரக்கொலைகளில் ஒன்று கரவெட்டி கன்பொல்லை வீதியை சேர்ந்த 23வயதுடைய இராசரத்தினம் இராஜேஸ்வரன் என்ற இளைஞரை 1999ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி கடத்தி சென்று அந்த இளைஞரை சித்திரவதை செய்து அவரின் தலையை வெட்டி யாழ். வைத்தியசாலை வீதியில் போட்ட சம்பவம் முக்கியமானதாகும்.

யாழ். நகரில் உள்ள புடவைக்கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த இராஜேஸ்வரன் என்ற இளைஞர் வேலை முடிந்து கரவெட்டிக்கு சென்று கொண்டிருந்த போது காணாமல் போனார்.

அந்த இளைஞரை கடத்தி சென்ற புளொட் இயக்கத்தினர் நெல்லியடியில் உள்ள புளொட் முகாமில் வைத்து சித்திரவதை செய்தனர். இரண்டு நாள்கள் வைத்து சித்திரவதை செய்த பின் அந்த இளைஞரின் தலையை வெட்டி எடுத்து சென்று யாழ். வைத்தியசாலை வீதியில் போட்டனர். 23ஆம் திகதி அதிகாலை உடல் இல்லாத தலை மீட்கப்பட்டது. சித்திரவதை செய்து படுகொலை செய்வதில் பிரசித்தி பெற்ற புளொட் இயக்கத்தினர் யாழ். நகர மக்களுக்கு அச்சத்தை உருவாக்கும் வகையிலேயே தலையை யாழ். நகரில் போட்டனர் என அக்காலப்பகுதியில் பலரும் பேசிக்கொண்டனர்.

பின்னர் அத்தலைக்கு உரிய உடல் புளொட் இயக்கத்தின் நெல்லியடி அலுவலக மலசல கூட குழியிலிருந்து மீட்கப்பட்டது. அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட போதிலும் புளொட் இயக்கம் அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய காரணத்தால் அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

இக்கொலையின் மூலம் யாழ். நகர மக்களை அச்சத்தில் வைத்திருக்கலாம், பயமுறுத்தி வைத்திருக்கலாம் என எண்ணிய புளொட் இயக்கத்திற்கு அது தோல்வியாகவே அமைந்தது. இக்கொலை உட்பட யாழ். நகரில் அக்காலப்பகுதியில் புளொட் இயக்கம் செய்த கொலைகளால் யாழ். குடாநாட்டில் புளொட் இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

யாழ். குடாநாட்டில் புளொட் இயக்கத்தை மக்கள் வெறுத்து ஒதுக்கியதால் யாழ். குடாநாட்டை விட்டு வெளியேறி வவுனியாவில் நிலை கொள்ள வேண்டி ஏற்பட்டது.

அதேபோன்று வவுனியாவில் மாணிக்கதாசன் தலைமையிலான புளொட் கொலைக்குழு கடத்தல் கப்பம் பெறுதல், பாலியல் பலாத்காரம், படுகொலை என அவர்கள் செய்த அட்டூழியங்களின் பட்டியல் மிக நீளமானது.

அது போன்று மட்டக்களப்பில் புளொட் இயக்கம் செய்த படுகொலைகள், அட்டூழியங்கள் எண்ணில் அடங்காதவை.

2004ஆம் ஆண்டு ஒகஸ்ட் முதலாம் திகதி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட புளொட் மோகன் செய்த படுகொலைகளின் பட்டியலை வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் பற்றி விசாரித்த நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் விபரமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.plot mohan

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி 158 பொதுமக்களை கடத்தி சென்று படுகொலை செய்த சம்பவத்தில் புளொட் மோகன் முக்கியமானவர் என நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1990ஆம் ஆண்டு யூன் மாதத்திற்கு பின்னர் அப்பாவி பொதுமக்களை பிடித்து மட்டக்களப்பில் வீதிகளில் உயிருடன் ரயர் போட்டு எரித்த சம்பவங்களை தினசரி காணமுடிந்தது. இக்கொலைகளை கப்டன் முனாசுடன் சேர்ந்து புளொட் மோகனும் ஏனைய புளொட் இயக்கத்தினருமே செய்தனர்.

இராணுவ கட்டுப்பாட்டில் இல்லாத வவுணதீவு பகுதியில் மறைந்திருந்து பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவங்கள் தினசரி இடம்பெற்றன.

1988ஆம் ஆண்டு புளொட் மோகன் தலைமையிலான புளொட் இயக்கத்தினர் கல்லடி பாலத்திற்கு அருகில் வைத்து வீரகேசரி மட்டக்களப்பு செய்தியாளர் ஆர்.நித்தியானந்தனை பிடித்து கழுத்தை அறுத்து விட்டு சென்றனர். நித்தியானந்தன் இறந்து விட்டார் என நினைத்தே புளொட் இயக்கத்தினர் சென்றனர். ஆனால் அவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் காப்பாற்றப்பட்டார்.

அதன் பின்னர் நித்தியானந்தன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். 1992ஆம் ஆண்டு புளொட் மோகன் மறைந்திருந்து நித்தியானந்தனை சுட்டுக்கொன்றான்.

புளொட் இயக்கத்தின் அலுவலகம் மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் இருந்தது. படுவான்கரை கிராமங்களிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு வரும் மக்கள் புளொட் அலுவலகம் இருக்கும் வீதியால் செல்லவே அச்சம் அடைவார்கள். படுவான்கரையில் இருந்து விறகு கொண்டு வந்து விற்று விட்டு 300ரூபா பணத்துடன் சென்ற ஒரு ஏழைத்தொழிலாளியை கூட புளொட் இயக்கத்தினர் 300ரூபாவுக்காக கடத்தி கொலை செய்த சம்பவமும் உண்டு.

தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் நடந்த கொடுமைகளுக்கு மனித உரிமை மீறல்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக நீதியரசர் விக்னேஸ்வரனை இணைத்தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை இந்த கொலைகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையில் புளொட் இயக்கம் ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதால் இக்கொலைகள் பற்றி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் பேரவையும் இக்கொலைகளின் பாவத்தை சுமக்க வேண்டி ஏற்படும்.

அதேபோன்று தமிழ் மக்கள் பேரவையில் பங்காளியாக இருக்கும் மற்றொரு இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எவ்.

thiruஇந்த இயக்கத்தின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கனடா செல்வதற்கு அந்நாடு தடை செய்திருக்கிறது. இதற்கு காரணம் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமும் படுகொலைகளில் ஈடுபட்டதாக கனடா அரசாங்கத்திற்கு ஆதாரம் கிடைத்ததால் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கனடா அரசாங்கம் இத்தடையை விதித்துள்ளது.

இதில் முக்கியமான சம்பவம் முரசொலி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த திருச்செல்வத்தின் மகன் அகிலன் என்ற மாணவனை சித்திரவதை செய்து கொன்றதாகும்.

அக்காலப்பகுதியில் நான் முரசொலி பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றி வந்தேன்.   அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தில் மண்டையன்குழு என்ற கொலைப்படை இயங்கி வந்தது.

யாழ்ப்பாணம், வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இடங்களில் மண்டையன் குழு இயங்கி வந்தது.

1989ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கொக்கோ கோலா போத்தல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.

அச்செய்தி முரசொலி பத்திரிகையில் மட்டுமே வெளியாகியது. இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கோலா போத்தல் மீட்கப்பட்டது. அந்த இளைஞர் சில தினங்களுக்கு முதல் சிலரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார் என இறுதியில் எழுதப்பட்டிருந்தது.

அந்த இளைஞரை கடத்தியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் என பின்னர் பலருக்கும் தெரியவந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை சுட்டுக்கொல்வதற்கு திட்டமிட்டனர்.

முரசொலி பத்திரிகை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்து வந்த படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி வந்தது.

அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய இராணுவத்துக்காகவும் தங்கள் மீது புலிகள் மேற்கொள்கின்ற தாக்குதலுக்காகவும் பழிக்குப் பழி வாங்குகின்ற படுகொலைகளை முன்னின்று நடத்தி வந்தார்.

புலி ஆதரவாளர்கள் புலிகளுக்கு உதவியவர்கள், புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எனப் பலர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.   திருச்செல்வத்தையும் கடத்தி கொலை செய்வதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் திட்டமிட்டது.

எஸ்.திருச்செல்வம் அவர்களைக் கடத்துவதற்காக அவருடைய வீட்டுக்கு மண்டையன் குழுவினர் சென்ற போது திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் தப்பியோடிவிட்டார். அதனால் அங்கிருந்த அவரது மகன் அகிலனை மண்டையன் குழுவினர் கடத்திச் சென்றனர். திருச்செல்வம் தங்களிடம் வந்தால் மகனை விடுவிப்போம் என்று எச்சரித்துச் சென்றனர். தான் அவர்களிடம் சென்றால் கொல்லப்படுவேன் என்பதை நன்கு அறிந்திருந்த திருச்செல்வம் தான் செல்லாவிட்டால் தன் மகனைக் கொல்வார்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்நிலையில் மண்டையன் குழு அகிலனை படுமோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கியது. அகிலனின் மலவாசலினூடாக சோடாப் போத்தலை செலுத்தினார்கள். அவருடைய நகங்களைப் பிடுங்கினார்கள். மறுநாள் அகிலன் பிணமாக வீதியில் வீசப்பட்டார்.

எஸ்.திருச்செல்வம் தம்பதிகளுக்கு கனடிய அரசு அரசியல் தஞ்சம் வழங்கி அவர்களை கனடாவுக்கு அழைத்தது. திருச்செல்வம் தனது மகனின் கொலை தொடர்பாக கனடிய அரசுக்கு வழங்கிய சாட்சியத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனைக் குற்றம்சாட்டி இருந்தார். அதனால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்கு விசா வழங்க கனடிய அரசு மறுத்து வருகின்றது.

இந்த இயக்கங்கள் மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளைத் திருப்பிய சம்பவங்கள் எண்ணிலடங்கா. அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் சித்திரவதைகளிலும் படுகொலைகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. ஒருவரைக் கொல்வதற்கு எவ்வித காரணங்களும் கொடுக்கப்பட வேண்டிய தேவையே இருக்கவில்லை.

திருச்செல்வத்தின் மகன் அகிலனை நான் நன்கு அறிந்திருந்தேன். அமைதியான சுபாவம் கொண்ட படிப்பு விளையாட்டு என சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவன்.

கல்லூரியின் மிகத் திறமையான மாணவனான அகிலன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் அகிலன் நான்கு பாடங்களிலும் 'ஏ' பெற்று மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தார்.  தான் கல்வி கற்ற கல்லூரியின் கிரிக்கட் குழுவின் தலைவனாகவும் அகிலன் விளங்கினான்.

மாணவன் அகிலன் திருச்செல்வனின் கொலை ஒரு போதுமே நியாயப்படுத்தப்பட முடியாத படுகொலை. தகப்பனுக்காக ஒருபோதுமே மகனைக் கடத்திப் படுகொலை செய்தது யாராகவிருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படுகொலை.

அதேபோன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராகவும் பிரஜைகள் குழு துணைத்தலைவராகவும் இருந்த வணசிங்க மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா சந்திரா பெர்ணாண்டோ ஆகியோரின் கொலைகளையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே செய்தது.

வந்தாறுமூலையில் பிறந்த வணசிங்க அவர்கள் 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்த வணசிங்க அவர்கள் இந்திய இராணுவ காலத்தில் தமிழ் மக்களின் பாகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார்.vanasinga

மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் உறுப்பினராகவும், பின்னர் அதன் துணைத்தலைவராகவும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்.
அநீதியும் உரிமை மீறலும் எங்கு நடக்கிறதோ அங்கு சென்று அவற்றைத் தட்டிக்கேட்டு நியாயம் தேடும் ஒரு தலைவனாக அவர் விளங்கினார்.  ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்த அட்டூழியங்கள் படுகொலைகளை தட்டிக்கேட்டார்.

இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இவரை படுகொலை செய்ய திட்டமிட்டது. 1989ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியில் அவர் வீட்டில் இருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த இருவர் அங்கு சென்றனர். அவருடன் பேச வேண்டும் என்றனர். வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒருவர் வணசிங்காவை சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் மட்டக்களப்பில் புரிந்த படுகொலைகளில் வணபிதா சந்திரா பெர்னாண்டோ அடிகளாரை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் முக்கியமானதாகும்.

1988ஆம் ஆண்டு யூன் 6ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவருமான வணபிதா சந்திரா பெர்னாண்டோ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேவாலயத்திற்குள் வைத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Rev. chandraவணபிதா சந்திரா அவர்கள் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் பல. ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தி வந்தார்.

அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முதல் மட்டக்களப்பு நகரில் வைத்து சுகுணா என்ற தமிழ் இளம் பெண்ணையும் ரிபாயா என்ற முஸ்லீம் இளம் பெண்ணையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் கடத்தி சென்றனர். இவர்களை வாவிக்கரை வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வைத்து கூட்டாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். வணபிதா சந்திரா இவர்களை மீட்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய இராணுவ கட்டளை தளபதி ஒருவருடன் தொடர்பு கொண்டதன் பின் சுகுணா என்ற தமிழ் பெண் மீட்கப்பட்டார். ஆனால் ரிபாயா என்ற முஸ்லீம் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து விட்டனர்.

இந்த விடயத்தை வணபிதா சந்திரா மனித உரிமைகள் அமைப்புக்கள் மட்டத்திற்கு கொண்டு சென்றார். இதற்கு பழிவாங்குவதற்காகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் வணபிதா சந்திரா அவர்களை படுகொலை செய்தது.

அதேபோன்றுதான் 1989ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவானந்தசுந்தரம்  அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுட்டுக்கொன்றது. யாழ்ப்பாணம் அரியாலையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு பருத்தித்துறை நோக்கி சென்ற போது அவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மக்களின் குரலாக ஒலித்த மக்கள் தலைவர்களை படுகொலை செய்த சம்பவங்கள் இலகுவில் மறந்து விடக் கூடியவை அல்ல. அந்த கொலைகளை புரிந்தவர்கள் அதற்கு உத்தரவிட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையும் அதன் இணைத்தலைவராக இருக்கும் நீதியரசர் விக்னேஸ்வரனும் இந்த கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்துவார்களா?
கொலையாளிகளை அருகில் வைத்துக்கொண்டு மனித உரிமை பற்றி எப்படி பேச முடியும்?

  • ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரைப்  பார்ப்பதற்காக வருகை தந்து பார்த்துவிட்டு பிரான்ஸ் சென்ற ரெலோ உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட உணவகத்தில் ஒரு ஒன்றுகூடலை இன்று மாலை ஒழுங்கு செய்யவிருந்ததாகவும் இக்கூட்டம் பற்றிய முன்னறிவித்தலை முன்னாள் புளொட் உறுப்பினரும் ஈ.என்.டி.எல். எப் இன் உறுப்பினருமான ஜெனி என்னும் பெண்மணி  எஸ் எம் எஸ் மூலம் பரிஸ் வாழ் மக்களுக்கு அறிவித்ததாகவும் இவ் அறிவித்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான மேற்குறிப்பிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து பரிஸ் லாச்சப்பல் பகுதிக்கு ஜனாவின் வருகையை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஜனாவினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்கள் ஜனாவின் வருகையை எதிர்ப்பதற்கு திட்டமிட்டிருந்தனர்.

    ஜனா, அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் ஆகியோர் மேற்குறிப்பிட்ட உணவகத்திற்கு வருகைதந்ததை தொடர்ந்து அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் உணவுச்சாலையிலிருந்து ஜனாவை வெளியே வருமாறும் கிழக்கு மாகாணத்தில் ஜனாவினால் செய்யப்பட்ட கொலைகள் பற்றிய சந்தேகங்களை தீர்க்க வேண்டும் எனவும்  மிகவும் ஆவேசத்துடன் குரலெழுப்பினர்.

    மேற்படி உணவுச்சாலையிலிருந்த ரெலோ உறுப்பினர்கள் இவற்றைச் செவிமெடுக்காதிருப்பதை அவதானித்த மக்கள் ஆவேசம்கொண்டு உணவுச் சாலைக்குள் நுழைய முற்பட்டபோது பிரெஞ்சுப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

    பிரெஞ்சுப் பொலிஸாரினால் ரெலோ உறுப்பினர்கள் மூவரும் இந்திரா உணவகத்தின் பின்கதவால் பாதுகாப்பாக லாச்சப்பல் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக பரிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது  தொடர்பாக கருத்துக்கூறிய அவதானிகள் –  ஐ.நா. கூட்டத்தொடர் முடிவுற்றத்தைத் தொடர்ந்து மாவை சேனாதிராஜா அணியினர் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் கூட்டம் நடத்தியதற்குப் போட்டியாக ரெலோ அமைப்பினர் கூட்டம் நடாத்த முற்பட்டு மூக்குடைக்கப்பட்டுள்ளதாக கூறும் பரிஸ் மக்கள் இக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமே எனவும் எஸ் எம் எஸ் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அதில் ரெலோ உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என விசனம் செய்தனர்..

    மேலும் ஜனாவினால் மிகவும் ஆழமாக பாதிக்கப்பட்ட பரிஸ் வாழ் கிழக்கு மாகாண நபர் ஒருவர் குறிப்பிடுகையில் , இந்திய அமைதிப்படை, இராசிக்குழு, அரசு ஒட்டுக்குழுக்கள் அனைத்திலும் பங்கெடுத்து 1983தொடக்கம் – 1999 வரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றொழித்து இளம்பெண்களின் கற்பைச் சூறையாடி தமிழ் இனத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய இந்த ஜனா  – ஐ.நா. சென்று இன அழிப்புக்கு எப்படி நீதி கோரமுடியும்?

    இவர் செய்த படுகொலையை சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் விசாரிப்பார்களா…? அயல் வீட்டுக்கு விரல் நீட்டும் கூட்டமைப்பு உள்வீட்டிலுள்ள போர்க்குற்றவாளிகளை எப்போது தண்டிப்பது???? என கிழக்கு மாகாண பரிஸ் வாழ் மக்கள் கோஷம் எழுப்பி உக்கிரம் கொண்டனர்.

    இதே நிலைதான் ஐ.நா.வில் வாய்கிழிய கத்தித் திரியும் மண்டையன் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கும் வருமெனவும் எச்சரித்தனர்.

    தகவல் லாச்சப்பல் வாழ் கிழக்கு மாகாண தமிழர்கள்
    இது தொடர்பு பட்ட முந்தய செய்திகள்,
    1,TELO ஜனாவின் இரகசியக் கொலைகள் அம்பலம்! செல்வம் MPயின் பதில் என்ன??

    யார் அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா? இப்போ எங்கே அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா? கள்ளு,சாராயம்,வடிசாராயம் கஞ்சா, வீடி, சுறுட்டு, இவை அனைத்திற்கும் அடிமையானவந்தான் இந்த மாமா! இவனின் சொந்த பெயர் கோவிந்தன் கருணாநிதி சொந்த ஊர்தான் செட்டிபாளையம் இவன் வேறு யாருமல்ல கோவிந்தன் கருணாகரன் (ஜனா) வின் சொந்த தம்பி!

    அணைத்து இயக்கங்களும் ஒன்றாக இருந்தபோது எல்லா இயக்கங்களிலும் மற்றும் பொதுமக்களிடமும் இவன் நன்றாக அடி வேண்டியுள்ளான் இதனை அறிந்து கொண்ட ஜனா தனது தம்பியையும் டெலோ அமைப்பில் சேர்த்துக்கொண்டார் இதில் நிறைய டெலோவின் பழைய உறுப்பினர்களுக்கு மாமாவின் வருகை விருப்பமில்லாமல் இருந்தது ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏன் என்றால் ஜனாவின் ஆதிக்கம் டேலோவில் அதிகமாக இருந்தது.

    TELOவில் சேர்ந்து கொண்ட மாமா தான் அடி வேண்டிய பொதுமக்களை பழிவேண்ட நினைத்தான் அதில் ஒரு குடும்ப கொலைதான் சினதம்பி கோபாலப்பிள்ளை சி . சாந்தலிங்கம் சி . தெய்வநாயகம் இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

    இவர்கள் செட்டிபாளையத்தின் அயல் கிராமமாகிய மாங்கட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்கள் இவர்கள் மீது மாமாவுக்கு அதிக கோபம் இருந்தது ஏன் என்றால் இவர்கள் மாமாவின் அராஜகத்தை தட்டி கேட்டவர்கள் அதனால் மாமா அவர்களை கொலை செய்வதற்கான சந்தர்பத்தை எதிர்பாத்து கொண்டிருந்தான் அதற்கான சந்தர்பமும் மாமாவிட்கு கிடைத்தது.

    இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது சி. தெய்வநாயகம் என்பவரை மாமா கொலை செய்தான் இவர் புலி என்று இந்திய இராணுவத்துக்கு அறிவிக்க பட்டது இதனால் மற்ற சகோதரர்கள் பயத்தினால் அச்சத்தோடு வாழ்ந்தார்கள் இதே காலகட்டத்தில் சாந்தலிங்கம் என்பவரும் கொலை செய்யப்பட்டார் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் மனைவி இப்போதும் விதவையாக வாழ்ந்து கொண்ட்டிருக்கின்றார்.

    அதன் பின்னர் சி . கோபாலப்பிள்ளை மாமாவினால் பிடிக்கபட்டு செட்டிபலயத்தில் அமைந்திருந்த இலங்கை இராணுவமுகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்படார் இவர்கள் எல்லோரும் புலிகள் என்றுதான் இலங்கை இந்திய இராணுவத்துக்கு அப்போது பாராளுமண்ற உறுப்பினராக இருந்த ஜனாவினால் கூறப்பட்டது. அதன் பின்னர் இவர்களின் மூத்த சகோதரராகிய சின்னதம்பி அழகையா என்பவரின் மூன்று பிள்ளைகளாகிய நடேசன்,கமலநாதன்,யோகநாதன் ஆகிய மூவரும் மாமாவின் தகவலின் பிரகாரம் இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்பட்டார்கள்.

    அதுமட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருக்கிலேசி குணம் திருகிலேசி பேரின்பம் இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்களும் மாமாவினால் கொலை செய்யப்பட்டார்கள் அது மட்டுமல்ல செட்டிபாளையத்தின் அயல் கிராமமாகிய குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் என்பவர் மாமாவினால் பிடிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு காத்தான்குடி வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிட்சை பலனின்றி மரணமானார் இதற்கான முழுப்பொறுப்பும் மாமாவையே சாரும் அதுமட்டுமல்ல நாகமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா (வாவு)என்கின்ற மாணவன் செட்டிபாளையத்தில் திரு அமலநாதன் அப்போது பிரதேச செயலாளராக இருந்தவரின் வீட்டில் நின்று செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று கொண்டிருந்தவரை இரவு நேரத்தில் மாமாவினால் சுட்டு கொலை செய்யப்பட்டான்.

    இதை ஜனாவினாலோ அல்லது மாமாவினாலோ மறுக்க முடியுமா? அது மட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி முத்துலிங்கம் என்பவர் கிரான்குளத்தில் வைத்து ஜனாவின் உத்தரவுக்கு அமைய வெட்டி கொலை செய்யப்பட்டார் இதை ஜனாவால் மறுக்க முடியுமா?

    அந்த வறுமையான குடும்பத்திற்கு இந்த ஜனாவால் என்ன ஆறுதல் கூறமுடியும்?அது மட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ரேகா என்கின்ற பெண் தேற்றாத்தீவை பிறப்பிடமாக கொண்ட தங்கவேல் என்பவரை திருமணம் செய்திருந்தார் இவரின் தம்பியை பிடிப்பதட்காக தங்கவேலை பிடித்து சென்று விட்டார்கள் மறுநாள் அவரின் தம்பியும் பிடிக்கப்புட்டு இருவரும் ஒன்றாக அடித்து கொலை செய்யப்பட்டார்கள் இதை ஜனாவினாலோ அல்லது மாமாவினாலோ மறுக்க முடியுமா?

    அந்த வறிய குடும்பத்தில் இப்போதும் விதவையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த விதவைக்கு இவர்களினால் என்ன ஆறுதல் கூறமுடியும்?இதே நிலைமை ஜனாவின் குடும்பத்திட்கு ஏற்பட்டால் தான் அதன் வலி என்னவென்று தெரியும்! அது மட்டுமல்ல மங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவவும் கொண்ட சீனித்தம்பி யோகராசா என்பவர் ஜனாவின் உத்தரவின் படி கொலை செய்யப்பட்டார் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு இப்போதும் அவரின் மனைவி விதவையாக வாழ்கின்றாள் இவர்களுக்கு இந்த ஜனாவினால் என்ன ஆறுதல் கூறமுடியும்?அது மட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாக கொண்ட ஏகாம்பரம் யோகராசா

    குமாரசாமி கிருபா என்கின்ற இருபரும் ஜனாவினால் கட்டாய இராணுவத்துக்கு சேர்க்கபட்டார்கள் அப்போது இருந்த (தமிழ் தேசிய இராணுவம்) அதிலிருந்து இருவரும் தப்பி சென்ற ஒரே காரனத்திற்காக இருவரும் பிடித்து கொலை செய்யபட்டார்கள் இந்த ஜனா நினைத்திருந்தால் அவர்களை நிச்சயமாக காப்பாத்தி இருக்க முடியும் ஆனால் கொலைக்கான உத்தரவே இந்த ஜனாவினால்தான் பிறப்பிக்க பட்டது என்பதுதான் உண்மை இதனால் பாதிக்க பட்ட அந்த கஸ்ரமான குடும்பங்களுக்கு இந்த ஜனாவினால் அவர்களின் பிள்ளைகளை திருப்பி கொடுக்க முடியுமா? இப்படி ஜனா மற்றும் மாமா ஆகியோரின் கொலைகள் கொள்ளைகள் பற்றி எழுதுவதற்கு நிறைய உண்டு.

    அந்த உணமைகளை தொடர்ந்தும் எழுதுவேன் மற்றும் ஜனா மாமாவின் நடவடிக்கைகளில் நிறைய டெலோ பழைய உறுப்பினர்களுக்கு உடன்பாடில்லை அதை சிலர் வெளிப்படையாக ஜனாவிடம் கூறியவர்கள் ஜனாவினால் பழிவாங்க பட்டர்கள் அதில் ஒருவர்தான் செட்டிபாளையத்தை சேர்ந்த கந்தையா குணம் (பலு)இவரும் டெலொவில் பழைய உறுப்பினர் இவருக்கு ஜனா மற்றும் மாமாவின் தன்னிச்சையான செயல் பாட்டினை வன்மையாக எதிர்த்தவர் அந்த ஒரே காரனத்திட்காக ஜனாவினால் பலுவை கொலை செய்வதட்கான திட்டம் தீட்டப்பட்டு அதை கட்சிதமாக செய்தும் முடித்தார்.

    இந்திய இராணுவம் மட்டக்களப்பிலிருந்து வெளியேறியவுடன் அப்போது இருந்த தமிழ் தேசிய இராணுவம் காட்டு பாதையினால் திருகோணமலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஜனாவின் விசுவாசிகளினால் பாலு சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பதுதான் உண்மை அனால் புலிகள் தான் பாலுவை கொண்றனர் என்று கூறப்பட்டாலும் அதுவல்ல உண்மை

    மாமாவின் செயல் பாட்டினில் இலங்கை இராணுவத்துக்கு கூட பிடிக்க வில்லை அப்படியான ஒருசில அதிகாரிகளும் இருந்தார்கள் அதை உண்மையாகும் வகையில் செட்டிபளையத்தின் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மாமாவின் பொதுமக்களின் மீதான அட்டகாசத்தை எதிர்த்து மாமாவை அடித்து இராணுவ முகாம் ஜெயிலில் அடைத்தார்.

    அதை அறிந்துகொண்ட ஜனா தனது பாராளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி தனது தம்பியை விடுதலை செய்தார் அத்தோடு இராணுவ உயர் அதிகாரிகளிடம் கதைத்து அந்த அதிகாரியையும் இடமாற்றம் செய்தான் அதன் பின்னர் ஜனாவின் பாராளுமண்ற அதிகாரம் பறிபோனது மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார்.

    மக்களினால் தூக்கி வீசப்பட்டார் பின்னர் கொள்ளை அடித்து சேர்த்த பணத்தோடு லண்டன் சென்றார் பின்னர் மாமா சவுதி அரேவியா சென்றான் அங்கு மாமாவினால் பாதிக்க பட்டவர்களினால் தாக்கப்பட்டு மீண்டும் நாடு திரும்பினான் அவனை பல லச்சங்கள் செலவுபண்ணி ஜனா தன்னோடு லண்டனுக்கு எடுத்து கொண்டான் இப்போது கொலைகாற மாமா லண்டன் ஜெயிலில் உள்ளதாக அறிகின்றேன் அனால் அதை உறுதியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

    அத்தோடு கொலைகார ஜனா கொள்ளை அடித்த பணத்தை வைத்து செல்வம் அடைக்கலனாதனுக்கு பணம் கொடுத்து கூட்டமைபினில் மாகாண சபையில் போட்டியிடுவதற்கான இடத்தை பெற்று கொண்டான் அதில் போட்டியிட்டு ஒரு கோடி பணத்திற்கு மேல் செலவு பண்ணி மாகாண சபை உறுப்பினர் பதவியையும் தனது கொள்ளை அடித்த பணத்தையும் வைத்து உல்லாசமாக!  இவை அணைத்தும் கூட்டமைப்பினரால் உருவாக்கி கொடுக்கப்பட்டவை.

    பொது மக்களின் காவலாளியாக நிக்க வேண்டிய கூட்டமைப்பு கொலையாளியின் பாதுகாவலராக இருப்பதன் மர்மம் என்ன?கூட்டமைப்பு ஜனாவின் கொள்ளை அடித்த பணத்திற்கு அடிபணிந்து விட்டார்களா? கூட்டமைப்பினர் தங்களின் மௌனத்தை கலைப்பார்களா?
    2.ஜனா, பிரசன்னா கொலைகள் நீரூபிக்கப்பட்டால் தண்டனை நிச்சயம் செல்வம் MP, சிவாஜிலிங்கம்
    யாழ் ஊடகவியலாளர் மகாநாட்டில் டெலோவில் உள்ளவர்கள் எல்லாம் பாவம் அறியாதவர்கள் அவர்கள் அப்பாவிகள் என அர்த்தம் பட கருத்துக் கூறிய சிவாஜலிங்கம் இந்திய இலங்கை இராணுத்துடன் இணைந்து இந்த தமிழ் மக்களுக்கு செய்த அராஜகத்தை மறந்து விட்டாரா வடக்கில் வகை தொகை அல்ல கிழக்கில் பட்டியலிட முடியாது

    கொலையாளிகள் எல்லாம் வேறு இடங்களில் இயங்குகிறார்கள் எனக் கூறியது சிறு பிள்ளைத் தனமானது பாதிக்கப் பட்ட தாய் நேரடியாக டெலோவை குற்றஞ் சாட்ட அதில் இருந்து தப்ப நினப்பது எவ்வளவு முட்டாள் தனம் அது மட்டுமா அப்படி நடந்தால் தண்டனை என்றால் ஓர் ஜனநாயக அமைப்பாக டெலோ இருக்குமாயின் ஓய்வுபெற்ற தமிழ் நீதியரசர்கள் முன் இவர்களுக்கு விசாரணை செய்வார்களா இப்படிப்பட்ட வீன் கதைகளை விட்டு விட்டு இதற்கு பதில் தேடுவார்களா

    சிவாஜலிங்கம் மற்றும் செல்வம் அடைக்கல நாதன் இவ் இருவரினதும் கொலைகள் உறுதிப்படுத்தப் பட்டால் தண்டனை நிச்சயம் என்றுள்ளமை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரவு நின்மதியை ஏற்படுத்தியுள்ளது விரைந்து பதில் சொல்லுமா டெலோ அல்லது மகிந்தரின் கதை போல் ஆகிவிடுமா தமிழருக்கு போராடுவது உண்மையானால் நிருபிக்கட்டும் பார்க்கலாம்.

    தமிழீழ விடுதலை இயக்கத்தினை சேர்ந்த எவராவது கடந்த காலங்களில் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டவர்களென விசாரணைகளில் உறுதிப் படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் நாம் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லையென அக்கட்சியின் பிரமுகரான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

    எனினும் கடந்த காலங்களில் எமது அமைப்பிலிருந்து விலகிய சிலர் வௌவேறு தரப்புக்களால் இயக்கப்பட்டனர். அவர்களே அத்தகைய குற்றசெயல்களில் ஈடுபட்டதாக தாம் நம்புவதாகவும், யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சிவாஜிலிங்கம் அங்கு தெரிவித்தார்.

    பத்திரிகையாளர் மகாநாடு மற்றும் செல்வம் அடைக்கலநாதனின் பா.உவின் கருத்துக்கள்

    எனினும் தற்போது மாகாணசபை உறுப்பினராகவுள்ள ஜனா கருணாகரன் மற்றும் பிரசன்னா ஆகியோர் தொடர்பிலும் குற்றஞ்சாட்டப்படுகின்றதே என பதில் கேள்வி எழுப்பப்பட்ட போது அத்தகைய குற்றச்சாட்டுக்கள் சிலரால் ஊக்குவிக்கப்பட்டே முன்வைக்கப்படுவதாக தெரிவித்த அவர் அவை விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் தாம் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.

    இதனிடையே தங்கள் கட்சிக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்.

    காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்றது. அதில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவுக்கு எதிராகவும் மக்கள் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.

    1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய ரெலோ அமைப்பினர் தமது பிள்ளைகளைக் கடத்திச் சுட்டுக் கொன்றது என்று 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    3,TELO படுகொலை செய்தது கலங்கிய பெண்! பிரசன்னா, ஜனா பதில் என்ன??
    ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெற்ற இந்த விசாரணைகளில் ரெலோ இயக்கமும், இராணுவத்தினரும் மேற்கொண்ட கடத்தல்கள் தொடர்பானதாகவே இருந்தது. அதேபோன்று சில முறைப்பாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவுமே இருந்தன.

    இவ்வாறாக கிழக்கு கொலைகளில் கருணா பிள்ளையான் இனியபாரதி PLOTE மாமா என பலர் ஈடுபட்டாலும் அவர்கள் அனைவரும் இன்று வரை அரச ஆதரவில் உள்ளனர் ரெலோ, EPRLF, PLOTE இவர்கள் தமிழ் ஈழம் கேட்பதற்கு தகுதியா? காரணம் இவர்கள் தமிழ் மக்களுக்காக அரசியலில் இன்றைய மட்டக்களப்பின் சாட்சியத்தில் ரெலோ இயக்கத்தை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் ஒரு தாயார் இதற்கு இவர்களின் பதில் என்ன?

    தாயகம் தேசியம் கூறும் இவர்களால் என்ன பதில் கூற முடியும்! மட்டக்களப்பின் ஜனா, பிரசன்னா கூறத் தவறின் உரியவர்களை வதைக்கும் புகைப்படக் காட்சி, குடும்பத்தினரின் வீடியோ ஆதாரம் விரைவில்…..

    ஆலயத்திற்கு போய் வந்துகொண்டிருந்த மகனை சுட்டுக் கொன்றார்கள். இன்னொரு மகன் பாடசாலையிலிருந்து வந்துகொண்டிருந்த போது கடத்தப்பட்டான் என்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பூபாலபிள்ளை நேசம்மா என்ற தாய், காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

    மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சாட்சிகளின் இறுதி சாட்சியப் பதிவின் போதே மேற்படி தாய் சாட்சியமளித்தார்.

    மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வில் தொடர்ந்து சாட்சியமளித்த நேசம்மா கூறியதாவது,

    'கடந்த 12.7.1989ஆம் ஆண்டு எனது மகன் பூபாலப்பிள்ளை திரேஸ்கான் ஆலயத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற தீப்பாய்வதில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும் வழியில் சுடப்பட்டார்.

    அப்போது, என் மகனுக்கு 22 வயதாகும். அவரை டெலோ இயக்கமும் விசேட அதிரடிப்படையினருமே சுட்டதாக அறிந்தேன். இப்படி சுட்டுக் கொல்லப்பட்டவர் எனது மூத்த மகன் என்று அழுதுகொண்டே சாட்சியமளித்தார்.

    அதேபோன்று, எனது இரண்டாவது மகன் பூபாலப்பிள்ளை சிறிகான், மட்டக்களப்பிலுள்ள பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தார். பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது அவரை கடத்தி விட்டார்கள். என் மகனை யார் கடத்தினார்கள் என்று தெரியாது. இரண்டு பிள்ளைகளை இழந்து தவிக்கின்றேன்' என அவர் கூறினார்.

    இதேவேளை, ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த கணபதிபிள்ளை நல்லதம்பி சாட்சியமளிக்கையில் கூறியதாவது,

    'கடந்த 11.6.1997 அன்று எனது மகன் தங்கவடிவேல், பாடசாலைக்குச் சென்றவர் வீடு வரவில்லை. இவரை இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என அறிந்தேன். யார் கடத்தினார்கள், எங்கு கொண்டு போனார்கள் என்பதுபற்றி தெரியாது.

    அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை தெரியாது. எனக்கு அவர் ஒரு ஆண் பிள்ளை. மற்றைய இருவரும் பெண் பிள்ளைகள்' என்றார்.

    ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி அருளய்யா என்பர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,

    'எனது மகன் சிவானந்தா வித்தியாலயத்திற்கு கல்வி கற்க செல்பவர். கடந்த 5.10.1995 அன்று பாடசாலையை முடித்துவிட்டு வந்து விளையாடுவதற்காக விளையாட்டு மைதானத்திற்கு சென்றவர் மீள வீடு வந்து சேரவில்லை.

    தினமும் மாலை 5 மணிக்கு வீடு வந்து விடுவார். அன்றைய தினம் அவர் வீடு வராததால் அவரை தேடிச் சென்றோம். பின்னர் அவர் கடத்தப்பட்டு விட்டதாக அறிந்தேன்' என்றார்.
    4,கிழக்கில் ஜனாவின் திடுக்கிடும் கொலைகள் அம்பலம்! கூட்டமைப்பின் பதில் என்ன??
    துரை,ஜனா,பிரசன்னா ஆகியோர்களின் கடந்தகால துரோக செயல்களை பற்றி செய்திகள் வந்தன குறிப்பாக,  வண பிதா சந்திரா அவர்களின் கொலை செய்யப்பட்ட விபரங்களை வாசித்து அறிந்து கொண்டேன் அதையிட்டு நான் அதிர்ச்சி அடையவில்லை ஏன் என்றால் இதை போல நூற்றுக்கணக்கான கொலைகளை இவர்கள் செய்துள்ளார்கள் இதற்க்கு பல உண்மை சம்பவங்களை உதாரனத்திட்கு உங்களின் கவனத்திற்கு என்னால் எழுத முடியும்.

    கோவிந்தன் கருணாகரன் (ஜனா) இவர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் செய்த அராஜகங்கள் அட்டுழியங்கள் கொலைகள் அனைத்தையும் எழுதி தீர்த்து விட முடியாது! ஜனா சொந்த ஊரான செட்டிபாளையத்தில் பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி பார்த்துக்கொண்டிருந்த புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைபரையும் ஜனாவின் தலைமையில் இந்தியன் இராணுவத்தின் உதவியோடு சுற்றி வளைக்கப்பட்டு அனைபரும் கைது செய்யப்பட்டு செட்டிபாளைய வாழை தோப்புக்குள் கொண்டு செல்லபட்டு ஜனாவின் தலைமையில் அனைபரும் அடித்தும் வெட்டியும் கொலை செய்யப்பட்டது மட்டுமல்லாது மனித இறைச்சியை ருசி பார்த்த பெருமையும் இந்த ஜனாவுக்கு உண்டு இதை ஜனவால் மறுக்க முடியுமா???

    இதை ஜனா மறந்தாலும் அந்த பிரதேச மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் அத்தோடு அந்த சம்பவத்தில் கொல்ல பட்ட அயல் கிராமமாகிய மாங்க்காட்டை சேர்ந்த அமிதலிங்கம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர்களின் குடும்பம் தான் மறக்குமா? இப்போதும் விதவையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தருமலிங்கத்தின் மனைவி மற்றும் அவரின் பிள்ளைகளுக்கு இப்போது நல்ல மனிதருக்கு வேஷம் போடும் இந்த ஜனவால் என்ன ஆறுதல் கூறமுடியும்?தங்களின் தந்தை ஏன் கொல்லப்பட்டார் என்கின்ற உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தர்மலிங்கத்தின் பிள்ளைகளுக்கு என்ன ஆறுதல் இந்த ஜனவால் கூற முடியும்?

    இதுமட்டுமா? சொந்த ஊரான செட்டிப்பாளையத்தில் வசித்து வந்த கோபாலன் மற்றும் கடுக்காமுனையை சேர்ந்தவரும் செட்டிபலயத்தில் திருமணம் செய்து செட்டிபாளையத்தினில் வாழ்ந்தவருமாகிய பெரியப்பா என்று அழைக்கப்படுபவர் (அவரின் உண்மையான பெயர் எனக்கு தெரியவில்லை) இவர்கள் இருபரையும் ஜனாவின் சொந்த தம்பியாகிய மாமா என்பவனால் இலங்கை இராணுவத்தின் உதவியோடு வீட்டில் தூங்கி கொண்டிருந்த இருபரையும் இரவு நேரத்தில் கைது செய்து செட்டிபாளைய இராணுவ முகாமுக்குள் கொண்டு செல்லபட்டு ஜனாவின் உத்தரவின் படி இருபரும் அடித்து கொலை செய்யபட்டார்கள் அவர்களோடு கைது செய்ய பட்ட பரமசிவம் (அலைக்ஸ்)என்பவர் பணம் வேண்ட்டி விடுதலை செய்யப்பட்டார் இதில் பாதிகபட்டவர்களுக்கு இந்த ஜனவால் என்ன அறுதல் கூறமுடியும்?

    இந்த உண்மையை ஜனாவல் மறுக்க முடியுமா? இதை போல் பல உண்மைகள், அத்தோடு இவைகளை எழுதி சரி பிழை என்று நான் விவாதிக்க எழுதவில்லை அனால் இவர்கள் காலத்துக்கு காலம் மக்கள் முன் போடும் வேசத்தைதான் விமர்சிக்கின்றேன் அன்று யாரை தேடி தேடி கொலை செய்தார்களோ இன்று அவர்களுக்காக மாறு வேஷம் போடுகின்றார்கள் பாவம் மக்கள் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதற்கு இந்த ஜனா பெரிய அறிக்கை கூட விட்டார் இந்த பாலச்சந்திரன் அப்போது இந்த ஜனாவின் கைகளில் கிடைத்திருந்தால் இந்த ஜனா என்ன செய்திருப்பார் ????

    இந்த கொலைகளுக்கு கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சிகளின் தலைவர்களின் பதில் என்ன? இன்றைய நிலையில் தமிழர்களின் தலைமைகள் கூட்டமைப்பினைத் தவிர வேறு இல்லை என வரிக்கு முழங்கும் மட்டக்களப்பின் கூட்டமைப்பின் பழுத்த அரசில் வாதிகள் உங்கள் பதிலை முன்வைப்பீர்களா? அல்லது இந்தக் கொலையாளிக்கு நீங்களும் உடந்தையா? நீங்கள் மக்களுக்கா? அல்லது இப்படிப்பட்ட கொலைகார அரசியல் வாதிகளுக்கா? விழக்குவீர்களா? அல்லது மக்களை விழுங்குவீர்களா? உங்கள் பதிலுக்காக….

    5,துரை, ஜனா, பிரசன்னா வண பிதா சந்திரா கொலையாளிகளா? நெஞ்சை வதைக்கும் நிமிடங்கள்
    எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம்,

    இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன.

    மட்டக்களப்பில் பாதர் சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்டமிட்டு அழித்தார்கள் என்பதை எமது இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பது இந்த நினைவு கட்டுரையின் நோக்கமாகும்.

    தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த பாதர் சந்திரா அவர்கள்தமிழ்தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டவராக காணப்பட்டார். அதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு பலம்பொருந்தியதாகவும், அனைத்து விடயங்களிலும் தகமைசார் செயற்பாட்டாளர்களை கொண்டிருந்ததற்கும் வணபிதா சந்திரா அதிபர் வணசிங்க போன்ற தனலம்ற உன்னத மனிதர்களின் செயற்பாடுகளே காரணமெனலாம்.

    1983ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் 1988ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த வேளையில் சிங்களப் பேரினவாதிகளின் குறி தமிழ்மக்களை அழிப்பதாக அமைந்திருந்தன. இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம் பொருந்திய நியாயம் கேட்கும் நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ராஜதந்திரிகள் உலகபொதுஅமைப்புக்கள் பிரதிநிதிகளைசந்தித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் அமைப்பாகச் செயல்பட்டதனால் எதிரிகளின் எண்ணங்களில் இடர்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன.

    பாதர் சந்திரா அவர்கள் எந்த விடுதலை அமைப்பையும் சேர்ந்தவரில்லை தமிழ்மக்களின் சுதந்திர வாழ்வை உண்மையாக நேசித்ததனால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தார். அக்காலத்தில் பல இயக்கங்கள் செயல்பட்ட போதும் இவருடைய சேவை மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமே இடம்பெற்றிருந்தன. மக்களுக்காக வாழ்ந்த மட்டக்களப்பு மக்கள் குழுத்தலைவர். மக்கள் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தில் மன்னிக்க முடியாத நிகழ்வாகவும், மறக்க முடியாத துயர சம்பவமாகவும் நடந்தேறியிருந்தன

    வணக்கத்துக்குரிய பாதர் சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 09.08.1948 அன்று மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும் , உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றார் .
    தனது குருக்கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்று

    1972. 09. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார் .

    உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்

    1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார் இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார் . 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார் .

    பாதர் சந்திரா அவர்களின் மக்கள் சார்ந்த பல நிகழ்வுகளில் இரு நிகழ்வை இங்கு குறிப்பிடலாம் .19.1.1986 அன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியில் அமைந்திருந்த இருதயபுரம் சிங்கள விசேட அதிரடிப் படையினரால் அதிகாலைவேளையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது .ஊரில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன நடந்தது ? மக்களின் நிலை என்ன ? என்பதை எவராலும் அறிய முடியாமல் இருந்த வேளையில் பாதர் சந்திரா அவர்கள் தனது மோட்டார் சைக்கிலில் உயிரைவிட மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டுமென்பதற்காக துணிந்து சிங்கள இராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே சென்று மக்களுக்கு பக்கபலமாக நின்றார். இச்சுற்றி வளைப்பில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சிங்கள அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் .

    இன்னுமொரு நிகழ்வாக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சுகுணா, இஸ்லாமியக் பெண்ணான ரிபாயா ஆகிய இருவரையும் EPRLF குழுவினர் பிடித்து சென்று தங்களது வாவிக்கரை தங்குமிடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இச்சம்பவத்தை அறிந்த மக்கள் குழுத்தலைவர் பாதர் சந்திரா அவர்கள் இந்தியப் படை அதிகாரிகலுடன் தொடர்பு கொண்டு இருவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் சுகுணாவை மாத்திரம்தான் அவரால் மீட்க முடிந்தது. மற்றைய பெண்ணான ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பதை அன்ரில் இருந்து இன்று வரையும் அறிய முடியவில்லை. இந்த சம்பவத்தில் நேரடியாக பங்குகொண்டவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற இரா. துரைரெட்ணம் என்பதை உறுதிப்படுத்தபட்ட பின்பும் அவராலும் இதற்குரிய பதில் இன்று வரையும் வழங்கப்படவில்லை. பாதர் சந்திரா அவர்களும் தான் இருக்கும் வரை ரிபாயாவை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

    மட்டக்களப்பு – அம்பாறையில் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டு இருதயபுரம், நற்பட்டிமுனை, உடும்பன்குளம், மண்முனை கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை , மயிலந்தனை புணணை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்கு கொண்டுவருவதில் பாதர் சந்திரா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்தன. இவ்வாறு மக்கள் நலன் பாதுகாப்பு என்பதில் தூய எண்ணத்துடன், செயல்பட்ட துறவியான இவர் இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் பல இடையூறுகளை மக்கள் சேவையில் சந்தித்திருந்தார்.

    தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப்பாதையில் இலக்குத் தவறிய பயணத்தில் செயல்பட்ட இயக்கங்கள் பாதையிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், இந்தியப்படையினரின் பிரசன்னம் எமது மண்ணில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தை ஆதரித்து நின்றமக்களையும் அழித்தொழிப்பதற்கு இந்திய படையினருடன், தமிழ் இயக்கங்களான, EPRLF, TELO, ENDLF போன்றவற்றின் உறுப்பினர்களும் துணைபோயினர்.

    இந்நாளில் தங்களைத் தமிழ்த் தேசிய வாதிகளாகக் காட்டி நிற்கின்ற இரா.துரைரெட்ணம், பிரசின்னா, ஜனா போன்ற வர்களின் தலைமையில் தமிழ்த்தேசவிரோதக் குழுக்கள் அந்நாளில் செயல்பட்டதை எவரும் மறுப்பதற்கில்லை, தமிழ்மக்களும் எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்களின் துரோகத்தனத்திற்கு அன்று இந்தியப் படையினர் துணைநின்றனர். இதற்கு பின்பு சிங்களப்படையினருக்கும் இவர்கள் துணைநின்றனர்.

    இவர்கள் இன்று பேசும், தாயகம், தேசியம் சுயநிர்னயத்தின் விலை தான் என்ன இதை கதைக்க இவர்கள் தகுதியானவர்களா இது பிழை என மறுக்க இவர்களிடம் திராணி உண்டா முடியுமானால் மறுக்கட்டும்

    இன்று மக்கள் உரிமை தனி நாடு கேட்கிறார்கள் அன்று செய்தது என்ன எத்தனை பெண்களை சீரளித்தார்கள் எத்தனை பெண்களை விதவை ஆக்கினார்கள் இவர்கள் இன்று செய்வது அரசியல் விபச்சாரம் இவர்களை அறியாத மட்டக்களப்பு மக்கள் இவர்களுக்கும் வாக்கிடும் துன்பியல் தமிழன் வாழா விட்டாலும் தமிழனை அழித்தவன் வாழக் கூடாது இதனை செய்வான மானமுள்ள தமிழன்

    மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பாதர் சந்திரா அவர்களை 06.06.1988 அன்று மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்து தமிழ்த் தேசிய விரோதிகளினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் .அன்று மறைக்கப்பட்ட கறுப்புத் திரையினுள் இவர்களாலும், இந்தியப் படையினராலும் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையும், அடக்கு முறைகளையும் வெளிக்கொண்டு வந்து நியாயம் கேட்ட மக்கள் சேவையாளனான கிறிஸ்துவத்துறவியின் குரல் ஒய்ந்து விட்டதை எண்ணி, அடுத்த குரல்களான வணசிங்கா அதிபர் அவர்களையும், ஆரையம்பதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அதிபர் அவர்களையும் அழித்தனர். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட மக்கள் சேவையில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு எதிரான படுகொலைகளில் மிகப் பெரிய நீதியற்ற படுகொலைகளாகக் இக்கொலைகளைக் குறிப்பிடமுடியும்.

    இன்று தமிழ் தேசியத்தை ஊடகத்துறையில் வளர்த்த பிதாமகர்கள் தாங்களே என நீட்டி முழங்கும் பலர் இவ்வாறன மனிதர்களின் கொலைகளை வசதியாக மறந்துவிடுகின்றனர் . தங்களின் இருப்பையும் தாம் சார்ந்தவர்களின் இருப்பையும் பதவிகளையும் தக்கவைப்பதற்காக வரலாறுகளை கூட தமக்கு வசதியான காலத்தில் தொடங்க முற்படுகின்றனர். இந்த ஊடக வியாபரிகளினது நோக்கமும் , வணபிதா சந்திரா போன்றவர்களை கொலைசெய்த கொலயளிகளினது நோக்கமும் ஒன்றாகவே இருக்கமுடியும் .

    இக்கொலைகளை எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் பணியில் உள்ள எவரும் நியாயப்படுத்த முடியாது.

    அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அடிமை நிலையைத் திணிப்பதே ஆக்கிரமிப்பு வாதிகளின் கொள்கையாகும். இக்கொள்கைக்கு துணைபோயுள்ளதன்மூலம் மூன்று கல்விமான்களை மட்டக்களப்பில் அழித்து மக்கள் சார்பாக ஒலித்த குரலை அணைத்து மார்தட்டி எக்காளமிட்ட இக்குழுவினருக்கு தமிழ் மக்களின், உரிமைபற்றியோ, விடுதளைபற்றியோ, கதைப்பதற்கு எந்த அருகதையுமில்லை இவ்மூவரின் இழப்பு அன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகவிருந்தன

    இருபத்தைந்து வருடங்கள் கழிந்த நிலையில் பாதர் சந்திரா அவர்களை நாம் நினைவு கூருகின்றோம். இவரை நினைவில் கொள்வது தமிழ்மக்களின் தலையாய கடமையாகும் ,பாதர் சந்திரா அவர்கள் வாழ்ந்தகாலம் தமிழ்மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு துணிந்த ,துறவியொருவர் வாழ்ந்தகாலமாகும் .இக்காலத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் எவரும் ,சுயநலம் கருதி மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக தங்கள் பதவி ,அரசியல் வாழ்வு என்பனவற்றிக்காக தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்த வண்ணம் செயல்பட்டனர் .இன்று இவர்கள் போற்றப் பட்டாலும் உண்மையை ஒரு போதும் மறைக்கமுடியாது

    உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, பாதர் சந்திரா, வணசிங்கா ஐயா போன்றவர்களின் நினைவும், தன்னலம் கருதாத மக்கள் சேவையும் மறைக்கப்படமாட்டாது என்றும் பரம்பரைபரம்பரையாக நினைவில் நிலைத்து நிற்கும்.

    காலவோட்டத்தில் தமிழ்த் தேசியம் கரைந்துவிடாது காக்கப்பட புல்லுருவிகளும், துரோகிகளும், இனப்படுகொலையாளர்களும் தூக்கி வீசப்படவேண்டும். இதற்கு எமது மண்ணில் வாழும் தமிழ்மக்கள் உறுதியான பதிலை தேர்தல் காலங்களில் வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழினத்தின் விடிவுக்கு, விலைபோகாத தலைவர்களை நாம் உருவாக்க முடியும்.

     

    பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,

  • -இரா.துரைரத்தினம்.

Loading...