Monday, 20 February 2017

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் KPS ஹமீட் நியமனம்


கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக முன்னால் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் KPS ஹமீட் கெளரவ கிழக்கு மாகண முதலமைச்சர் செயினுலாப்பதீன் நசீர் அஹமட் அவர்களினால் நேற்று மாலை நியமிக்கப்பட்டுள்ளார். 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினராகவும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவருமான ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பரந்த சேவைகளினாலும், துடிப்பான சமூகத்துக்கான சிறந்த நடவடிக்கைகளாலும் கவரப்பட்டு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார். 

குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சின் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், வீடமைப்புத் அதிகாரசபை உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ பாயிஸ் மற்றும் உயர்பீட உறுப்பினர் எம்.எச்.கபூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Loading...