Friday, 3 February 2017

பிரபஞ்ச அழகி போட்டியில் சுவிஸ் அழகியின் நிலை: வெளியான புகைப்படம்

பிலிப்பைன்சில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் சுவிஸ் அழகி கலந்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரபஞ்ச அழகி போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயதான Dijana Cvijetic கலந்துக்கொண்டார். இந்த அழகி போட்டியில் மொத்தம் 86 அழகிகள் பங்கேற்றனர்.

அதில், 2017ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஸ் மிட்டனேர் தெரிவு செய்யப்பட்டு மகுடம் முடிசூட்டப்பட்டார்.

இந்நிலையில் மகுடத்துடன் நாடு திரும்ப வேண்டும் என்ற கனவுடன் கலந்துக்கொண்ட Dijana Cvijetic வெறும் கையுடன் நாடு திரும்பவுள்ளார்.

அவர் போட்டியில் கலந்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

புகைப்படத்தின் மூலம் அவர் அழகி போட்டியில் அணிகலன்கள் ஏதும் அணியாமல் வெறுமென கலந்துக்கொண்டுள்ளார் என தெரிகிறது. அநேகமாக Dijana Cvijetic பங்கேற்கும் கடைசி அழகி போட்டியாக இதுவாக இருக்கும்.

ஏனெனில் நாடு திரும்புவுள்ள Dijana Cvijetic கூறியதாவது, இது மிகவும் வருத்தம் அளிக்கிறது, எனினும், இதில் பங்கேற்றது பெருமையாக உள்ளது.

நானும் என் நண்பரும் சந்தையில் மொடல் சேவை தொடங்க முடிவு செய்துள்ளளோம்.

இது விளையாட்டு கவர்ச்சியாக மற்றும் நேர்த்தியான ஒரு கலவையாக இருக்கும், மொடல் துறையே என்னை பிரதிபலிப்பதாகக் கருதுகிறேன் என கூறியுள்ளார்.

Loading...