Tuesday, 21 February 2017

புதிய அரசியலமைப்பு பற்றி தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம்

புதிய அரசியலமைப்பு பற்றி தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம்

                                                   லக்சிறி பெர்ணாண்டோ

நான் இந்த விண்ணப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் துணைக் கட்சிகளுக்கு மட்டுமல்லாது அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் முன் வைக்கிறேன். இது வடக்கு மறLaksiri-Fernando-்றும் கிழக்கிலுள்ள தலைவர்களை மட்டும் உட்படுத்தவில்லை ஆனால் நாட்டின் சகல பாகங்களிலுமுள்ளவர்களையும் உட்படுத்துகிறது, இருந்தபோதும் எனது சமர்ப்பிப்பு நேரடியாக முதல் தரப்பினருக்கே பொருந்தலாம். நான் இந்த விண்ணப்பத்தை ஒரு ஸ்ரீலங்கா பிரஜை என்கிற வகையில் எனது அனுபவங்களின் அடிப்படையில் நாடு மற்றும் அதன் எதிர்காலம் என்பனவற்றின் மீதான அக்கறை மற்றும் மரியாதை காரணமாக முன்வைக்கிறேன்.

ஒரு புதிய அரசியலமைப்புக்கான ஒருமித்த கருத்துடைய வரைவு ஒன்றைக் கொண்டு வருவதற்காகவும், அது முழு பாராளுமன்றத்திலும் மற்றும் அதன்பின் அதை ஒரு சர்வசன வாக்கெடுப்பு மூலமாக மக்கள் முன்பு சமர்ப்பிப்பதற்காகவும் அரசியலமைப்பு நிர்ணயசபையின் வழிகாட்டும் குழுவுக்குள் நடைபெற்றுவரும் பேச்சு வார்த்தைகளே, நான் இந்த வேண்டுகோளை விடுப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது. உங்களுக்கான எனது அடிப்படை முறையீடு, உங்கள் நிலைப்பாடுகளை, சில சர்ச்சையான விடயங்களுக்கு மத்தியில் ஒற்றையாட்சி, கூட்டாட்சி, வடக்கு - கிழக்கு இணைப்பு மற்றும் பௌத்தமதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்குவது போன்ற விடயங்களில் முடிந்தவரை மிதமான நிலையில் பேணுதல் என்பதாகும்.

உங்கள் தற்போதைய நிலைப்பாடு தீவிரமானது என்று நான் சுட்டிக்காட்டவில்லை, ஆனால் அவற்றில் பலவற்றை தேசிய பிரச்சினைக்கு பரந்த அளவில் ஏற்கத்தக்கதும் மற்றும் சாத்தியமான தீர்வினை ஏற்படுத்துவதற்காகவும் போதுமான அளவில் ஏற்புடையதாக மாற்ற இயலாது. எந்த ஒரு அரசியலமைப்பும் மிகச்சரியானது அல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அடையக்கூடியது என்னவென்றால் ஒரு சாத்தியமான பரந்த கட்டமைப்புக்குள் அதன் நெகிழ்வுத்தன்மை வழக்கமான - நடைமுறை முன்னேற்றமாக கொடுக்கப்படுவதையே. வழிகாட்டுக் குழு மற்றும் முடிவடைந்த உப குழுக்களில் உங்களின் தீவிரமான பங்களிப்பைக் கண்டு நான் ஆச்சரியப் படுவதுடன் அதைப் பாராட்டவும் செய்கிறேன். 1972 மற்றும் 1978 ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு அரசியலமைப்புகள் பிரகடனப் படுத்தப்பட்டன, அவற்றில் பங்களித்து பேசித் தீர்ப்பதற்கு ஒன்றில் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை அல்லது உங்களது முன்னோடிகளுக்கு அதில் பங்கேற்பதற்கு பொறுமை இருக்கவில்லை. அந்த நாட்கள்தான் தீவிர அரசியல் முனைவாக்கம் பெற்ற நாட்கள், ஒரு சாத்தியமான அரசியல் தீர்வை அடையும் முயற்சியில் அவற்றை நாங்கள் பின்னோக்கித் தள்ளவேண்டியது அவசியம்.

ஒற்றையாட்சி/கூட்டாட்சி

1949ல் பெடரல் கட்சி (தமிழரசுக் கட்சி) உருவாக்கப்பட்டது முதல் உங்கள் தலைவர்கள் ஒரு கூட்டாட்சி தீர்வுக்காக போராடி வருவதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆகவே உங்களது தற்போதைய நிலமைகள் சிலவற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த முயற்சி தோல்வி அடைந்ததின் பின்புதான் உங்கள் தலைவர்களில் சிலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு தனிநாட்டை தெரிவு செய்வதற்கு விரும்பினார்கள் என்று சொல்வது பாதியளவுக்கு சரியாக இருக்கலாம். எனினும், எரிக் ஹொப்ஸ்பவான் ( 1780 முதல் தேசம் மற்றும் தேசியவாதம்)  போன்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டுவதைப் போல ஆரம்பத்தில் அதில் சில தெளிவின்மைகள் இருந்தன. 1951ல் வெளியான "ஒரு கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கான காரணம்" என்கிற பெடரல் கட்சியின்  ஆவணங்களின் பத்தியை ஆய்வு செய்ததில் அவர் சொன்னது:

"இந்தப் பத்தியின் நோக்கம் தெளிவானது: தமிழ் தேசியவாதத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்காத் தீவின் மூன்றில் ஒரு பகுதி என விபரிக்கப்படும் ஒரு பகுதிக்கான சுதந்திரம் அல்லது தன்னாட்சியை அது கோருகிறது. அதுபற்றி வேறு எதுவும் தெரியவில்லை".

அத்தகைய தொடர்ச்சியான தெளிவின்மையே, உங்கள் அரசியலமப்பு முன்மொழிவுகள் ஃ முறைப்படுத்தல்கள் சர்ச்சைக்குரியனவாக மாறிவிட்டதுக்கான ஒரு காரணம்.

பல வடிவங்களிலான கூட்டாட்சி உள்ளது. அரசியலமைப்பில் கூட்டாட்சி என்கிற சொல் காணப்படாவிட்டாலும்கூட இந்தியா ஒரு அரைவாசி கூட்டாட்சி அமைப்பு உள்ள நாடாகக் கருதப்படுகிறது. அதில் உள்ளது "மாநிலங்களின் ஒன்றியம்"; என்று. சில சிங்களத் தலைவர்கள் இந்த சூத்திரத்துக்கு சமீபமான ஒரு தெரிவை (பிராந்தியங்களின் ஒன்றியம்) 1990ல் கவனத்தில் கொண்டபோதும் அது சர்ச்சைகள் காரணமாக விரைவிலேயே கைவிடப்பட்டது. அந்த சூத்திரம் ஒரு பெரிய நாட்டுக்கே அதிகம் பொருந்தும்.

நாங்கள் ஒரு பிரிவினைவாத போர் இல்லாமல் இருப்போமானால், அத்தகைய ஒரு சூத்திரத்தை (பெடரல், ஒற்றையாட்சி அல்லது ஒன்றியம்) 1947 அரசியலமைப்பில் உள்ளதுபோல முற்றாக கைவிட முடியும். தற்போதைய சூழ்நிலைகளின் கீழ், சிலர் பிரிவினைவாதம் புத்துயிர்ப்பு அடைவதற்கு இடமளிக்கும் சூத்திரம் கூடாது என்று விவாதிக்க முடியும் அல்லது எண்ண முடியும்.

ஆகையினால் ஒற்றையாட்சி என்ற சொல் பற்றிய உங்கள் ஆட்சேபணைகளை மிதப்படுத்துங்கள் என்று உங்களிடம் வேண்டுகிறேன். ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் அடையாளப் படுத்தியிருப்பது, ஒற்றiயாட்சியின் கருவை மக்கள் வித்தியாசமாக உணர்ந்திருக்கிறார்கள் என்று. பெரும்பான்மையினர் அதை ஒற்றுமை என சமன் செய்துள்ளார்கள். ஆகவே அதை நீக்குவதன் அர்த்தம் ஒற்றுமையின்மை அல்லது பிளவு என்றாகும். தமிழ் மக்கள் மத்தியில் இது வேறுபடலாம். எனவே சிறந்த ஒரு தெரிவாக அமைவது, அந்த சூத்திரத்துக்கான ஒரு தகமையை வேண்டுவதுதான். பொதுமக்கள் பிரதிநிதிகள் குழுவில் (பி.ஆர்.சி) நான் பரிந்துரைத்ததுபோல 'ஸ்ரீலங்கா அதன் அதிகாரத்தை தனது ஒன்பது மாகாணங்களுக்கும் பரவலாக்கம் செய்துள்ள ஒரு ஒற்றையாட்சி நாடு" என்று மீள் சூத்திரப்படுத்துவதுதான் சிறந்தது. இந்த ஒன்பதாம் இலக்கத்தைப் பற்றி உங்களுக்கு ஆட்சேபணை தோன்றும் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். அந்தக் கேள்விக்கான பதிலுக்கு நான் விரைவில் வருகிறேன்.

அதிகாரப் பரவலாக்கம் என்கிற அதிகரித்து வரும் பிரசித்தமான கருத்து, அதிகாரப் பகிர்வு, சமநிலையான பிராந்திய அபிவிருத்தி மற்றும் அரச கட்டமைப்புகளின் ஜனநாயகத்தன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பல நாடுகளும் பின்பற்றிவரும் ஒன்றாகும். சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் இப்போது அந்த தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளதை நீங்கள் பாராட்டவேண்டும். முன்பு அப்படியான ஒரு நிலை இருக்கவில்லை.

கூட்டாட்சி - ஒற்றையாட்சி பற்றிய விவாதங்கள் பழைய பாணியாக மாறி வருகிறது. எனினும் ஸ்ரீலங்காவின் குணாதிசயத்தை முற்று முழுதான ஒரு அதிகாரப் பகிர்வான நாடாக கூறுவது, சிறிது முதிராத ஒரு முயற்சியாகும். அத தவறாக வழி நடத்தப்படவும் கூடும். ஒற்றையாட்சி என்கிற சொல்லை தொடர்ந்து வைத்திருத்தல் ஒரு சம்பிரதாயமாகவும் மற்றும் ஒரு தொடர்ச்சியின் காரணமாகவும மேற்கொள்ளப்பட்டதாகவும் கருதலாம். கூட்டாட்சியாகத் தெரியாது போனாலும் அதிகாரப்பகிர்வு இயற்கையாகவே ஒற்றையாட்சி அரசுக்குள் உருவாகிறது.

வடக்கு கிழக்கு இணைப்பு

நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் மிதவாத போக்கை கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு விடயம், வடக்கு - கிழக்கு இணைப்பு என்று நான் எண்ணுகிறேன். 9 மாகாணங்கள் உடனான ஒரு தீர்வுதான் சிறந்தது. எல்லா மாகாண எல்லைகளும் இயல்பானதாக அல்லது ஏற்றதாக இருக்கும் என்று என்னால் கூறுவது கடினம். ஆனால் சாதாரணமாக நீங்கள் வரைபடத்தினூடாகப் பார்த்தால் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு அதிகாரப் பரவலாக்கத்தின் கீழ் மிகவும் செயற்கையான ஒரு அமைப்பாகத் தெரியலாம். அத்தகைய ஒரு அமைப்புக்கான நியாயப்படுத்தல் காலப்போக்கில் உங்கள் தலைவர்கள் மத்தியில் மாற்றமடையலாம்: இனரீதியான தாயகம், ஒரு மொழியியல் பிரிவு, பாதுகாப்பு தேவை போன்றவை.

கூட்டாட்சி முறையிலும் கூட, எல்லைகள் கட்டாயமாக இன அல்லது மொழியியல் வரிசையில் இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு விதிகள் இல்லை. அதற்கு சுவிட்சலாந்து ஒரு சிறந்த உதாரணம். அங்கு நான்கு பிரதான இனக் குழுக்கள் மட்டுமே உள்ளன. ஆனால் மண்டலங்களின் எண்ணிக்கை 26. எல்லைகள் தூய்மையான இன வரிசையில் மட்டுமே இருக்க வேண்டுமாயின் அது இன பெடரலிசம் அல்லது இன அதிகாரப் பகிர்வு என்றிருக்க வேண்டும். அது ஒரு நாட்டுககு நல்லதல்ல. இதனால் முனைவாக்கம் அதிகரிக்க முடியுமே தவிர குறையாது. அது ஸ்ரீலங்கா தவிர்க்க வேண்டிய ஒன்று. நான் இந்தக் கருத்தை நீண்ட நாட்களாகவே கொண்டிருக்கிறேன். எனது பொதுவான கருத்துரு (சித்தாந்தப்படி அல்ல) நோக்கு நிலையில் நான் ஒரு தாராண்மை சோஷலிசவாதி மற்றும் கடுமையான இன அடையாளங்களில் நம்பிக்கையற்றவன். இருப்பினும் புரிந்துகொள்ள, ஏற்றுக்கொள்ள மற்றும் இன அடையாளங்களுக்கு அச்சுறுத்தல் அல்லது வேறு ஏதாவது ஏற்படாமல் பாதுகாக்க முழவதுமாக தயாராக உள்ளேன். எனினும் சாத்தியமான அளவுக்கு கடுமையான  அடையாளங்களையம் மீறி எங்கள் சிறந்த முயற்சிகள் அமைய வேண்டும்.

நிருவாகஃஅரசியல் அதிகாரப்பரவல் சிறந்த ஒன்று, அதன் மூலம் இன அடையாளங்களை அவசியமான ஒன்றாகக் கூட இடமளிக்க முடியும். தற்போது உள்ள மாகாண எல்லைகளின் கீழ் தமிழர்களால் வட மாகாணசபையை பிரத்தியேக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும், அது நிச்சயமாக அதிகாரப்பரவல் மேற்கொள்ளப்பட்ட கோளத்துக்குள். மறுபக்கத்தில் கிழக்கு மாகாணம் அனைத்து மூன்று சமூகங்களிடையேயும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேற்கொள்வதற்கான பரீட்சாத்த நிலையில் வைத்து அதனை அடைய முடியும். ஒரு இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு அதற்கு எதிராகப் போக முடியும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரது நலன்கள் காரணமாக என்று நான் நினைக்கிறேன். அந்த மாகாணத்திற்குள்ளே அல்லது அதற்கு வெளியே உள்ள முஸ்லிம் சமூகத்தினரது நலன்களை நாங்கள் புறக்கணிக்க முடியாது. ஆகவே நான் உங்களிடம் வேண்டுவது வடக்கு - மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான உங்கள் கோரிக்கைகளை மீள்பரிசீலனை செய்யும்படி.

13வது திருத்தத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும்கூட,அந்த இணைப்பை ஒரு பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் முடிவு செய்யும்படி வேண்டுகோள் விடுப்பதுகூட பரிந்துரைக்கத் தக்க ஒன்றல்ல. அது மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக அவர்களைப் பிரித்து விடும். அப்படியான ஒரு பொது வாக்கெடுப்பு வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் அது ஏனைய மாகாணங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் அது இணைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டால், அது அதேபோல வேறு பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இது குழப்பத்துக்கு வழிவகுக்கும். பிரிவினை பற்றி பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதும் இதே போன்ற ஒரு கோரிக்கைதான். நாட்டின் ஐக்கியத்துக்கும் மற்றும் இறையாண்மைக்கும் சவால் ஏற்படுத்தும் எந்த விடயம் பற்றிய பொது வாக்கெடுப்பையும் புதிய அரசியலமைப்பு அனுமதிக்கக்கூடாது. அதுதான் சமூக ஒப்பந்தம,; புதிய அரசியலமைப்பு பற்றி கருத்தியலாளர்கள் என்னதான் சொன்னாலும் எங்களுக்கு; ஒரு புதிய அரசியலமைப்பு நிச்சயமாக வேண்டும். புதிய அரசியலமைப்பில் அப்படியான ஒரு பொது வாக்கெடுப்பு சேர்க்கப்பட்டால், அது சாதாரணமாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மூலமாக அனுமதிக்கப்படாது.

பௌத்தத்துக்கு முதன்மையான இடம்

மிகவும் வரவேற்புடன் நான் குறிப்பிட விரும்புவது, அநேக தமிழ் தலைவர்களுக்கு பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்குவது பற்றி அதிக ஆட்சேபணைகள் கிடையாது. தற்போதைய அரசியலமைப்பில் கூட வழங்கப்பட்டுள்ள அந்த முதன்மை ஸ்தானம் அரச மதமாக கணிக்கப்படவில்லை. விசேடமாக இந்த விடயத்தில் அரசியலமைப்பில் எழுதப்பட்டிருப்பதைக் காட்டிலும் நடைமுறையில் உள்ளதிலேயே அதிகமாக தங்கியுள்ளது. அது ஒரு வரலாற்று உண்மையை அங்கீகரிக்கிறதே தவிர ஒரு மதம் தனது இடத்தை ஏனைய மதங்களின் இடத்தைவிட மேலோங்கியதாக வைத்திருப்பதாக இல்லை. எப்படியானாலும் பௌத்தம் என்பது இந்து சமயத்தின் அதே மரபு வழிவந்தது மற்றும் வரலாற்றுக் காரணங்களுக்காக அது இந்த நாட்டில் ஒரு விசேட இடத்தைப் பெற்றுள்ளது. அதை அங்கீகரிப்பதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அத்தகைய அங்கீகரிப்பு கூட தீவிரவாதப் போக்குகளை சமாதானப்படுத்தவும் கூடும்.

நான் முற்றாக ஒரு மதச்சார்பற்றவன் மற்றும் ஒரு மதவாதியாக ஒருபோதும் இருந்ததில்லை. எனினும் முடிந்த வரை,எல்லா மதங்களும் ஐக்கியமாக முன்னோக்கி வரவேண்டிய ஒரு வளரும் தேவை இருப்பதை நான் அங்கீகரிக்கிறேன், அத்துடன்  முற்றாக அரசியலை விட்டு விலகியிருந்து தார்மீக மற்றும் சமூக பிரச்சினைகளில் ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டும். புதிய அரசியலமைப்பு எவ்வித ஐயமுமின்றி அனைத்து மதங்களுக்கும் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் என்றால் தற்போதைய நிலமைக்கு அது பயன்தரக்கூடிய ஒரு தீர்வு என்று நான் நம்புகிறேன். அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயத்தின் நிலையையும் அது மேலும் வலுப்படுத்த முடியும்.

மற்றைய பிரச்சினைகள்

அரசியலமைப்பு வடிவாக்கம் தொடர்பான உப குழுக்களில் பங்கு பற்றும் அநேக தமிழ் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரியோ அல்லது இல்லையோ தீவிரமான பிரேரணைகளை முன் வைக்கிறார்கள் என்று நான் உணர்கிறேன். ஒரு காரணத்துக்கோ அல்லது வேறொன்றுக்காகவோ இந்த நிகழ்வுகளுக்கு உதவும் நிபுணர்களில் சிலர்கூட இந்தப் பிரேரணைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். சில நிபுணர்களின் போக்கு தீவிரமானதாக அல்லது கருத்தியல் ரீதியானதாக உள்ளது. சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒரு நிபுணர் இருந்தால்  கூடுதலாக ஆதரிக்கும் ஒரு போக்கு நிலவுகிறது. அது சரியான ஒரு அணுகுமுறை என்று நான் நினைக்கவில்வை. நான் விஷயங்களை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதையே விரும்புகிறேன்.

இந்த பிரேரணைகளில் சில உப குழுவின் அறிக்கைகளில் கூடச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் பாராளுமன்றில் ஏன் சமர்ப்பிக்கப் படவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஏனைய காரணங்களுக்கு மத்தியில் வழிகாட்டும் குழு ஒரு விரிவான அரசியலமைப்பு பிரேரணைக்கு வர இயலாமல் இருப்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது. மேலும் புதிய அரசியலமைப்பை எதிர்க்க திட்டமிட்டிருப்பவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்காமல் பிரேரணைகள் தீவிரமடைவதற்காக வெளிப்படையாகவே கீழான பொய்களைச் சொல்லி வருகிறார்கள். மற்றும் சிலர் நியாயமாகவே தெளிவற்றவர்களாக இருந்து வருகிறார்கள்.

எனினும் அரசியலமைப்பை தயாரிக்கும் முழு நடவடிக்கைகளும் ஏமாற்றமாக மாறிவருவதற்கு இது ஒரு காரணமல்ல. அரசியலமைப்பை தயாரிக்கும் பேச்சு வார்த்தைகள்,யுத்த சூழ்நிலையில் சமாதானப் பேச்சு வார்த்தைகளை நடத்துவது போல மிகவும் கடினமான பேச்சுவார்த்தைகளில் ஒன்றாகும். வெளிப்படையாக தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் தமிழ் தலைவர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது பழி சொல்வதுகூட எனக்கு கஷ்டமாக உள்ளது. எனினும் அவர்களது வெளிப்படையான நிலைப்பாடுகள் சிலவற்றை அவர்கள் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த தீவிர நிலைப்பாடுகளில் சில உப குழு அறிக்கையின்  முக்கிய அம்சமாக பிரதிபலித்துள்ளது. மற்றைய அறிக்கைகளில் வேறு சிலவும் உள்ளன. அந்த பிரேரணைகளில் சிலவற்றை நடைமுறைப் படுத்தினால் மிகவும் முக்கியமாக ஸ்ரீலங்கா ஒரு ஒரு செயல்படாத ஆட்சி அல்லது நாடு ஆக மாறிவிடும். அது எந்த சமூகத்துக்கும் உதவப் போவதில்லை.

ஒரு யதார்த்தமான பார்வையை நோக்கி

நாங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளவேண்டியது,ஒரு புதிய அரசியலமைப்பு தீவளாவிய ரீதியில் ஒரு பொதுசன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டி உள்ளது என்பதை. 2015ல் நடைபெற்ற இரு தேர்தல்களிலும் நாட்டில் ஜனநாயகத்தை திரும்பவும் கொண்டு வருவதற்கு தமிழ் சமூகம் ஒரு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது என்பது உண்மை. அது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் அது அளவுக்கு அதிகமாக மதிப்பிடப்படக் கூடாது. மற்றவர்களும் கூட ஒரு பங்களிப்பைச் செய்துள்ளார்கள். அரசியலமைப்பு பிரச்சினைகளில் சில மிகவம் உணர்வுபூர்வமானவை அந்தப் பிரச்சினைகளை அடிப்படையாக்கி பல பள்ளங்கள் தோண்ட முடியும் அது தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ளே மட்டுமல்ல ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளே இருப்பவர்களும் சேர்ந்துதான் செய்வார்கள். நான் இங்கு குறிப்பிடுவது முற்றாக கூட்டு எதிர்க்கட்சியை அல்ல ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐதேக என்பனவற்றை சேர்ந்த தலைவர்கள் கூட சில தீவிர மாற்றங்களுக்கு சம்மதிப்பார்கள்(எப்படியாயினும் அதில் எனக்கு சந்தேகமே), ஆனால் அவர்களது சொந்த ஆதரவாளர்கள் நிச்சயமாக மாட்டார்கள்.

ஒரு புதிய அரசியலமைப்பை வரைவு செய்யும்போது, நாங்கள் நினைவில் கொள்ளவேண்டியது பல தலைமுறைகளுக்கான எதிர்காலத்தை நாங்கள் பெருமளவு தீர்மானிக்கிறோம் என்று. முடிந்துவிட்ட கடந்தகாலம் வழங்கிய நிகழ்வுகள் காரணமாக எங்கள் உணர்வுகள் இப்போது மிகவும் கசப்பானதாக இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தை அல்லது எதிர்கால தலைமுறையை பொறுத்தவரை நிலமை அப்படி இருக்காது இருக்கவும் முடியாது. கடந்த காலத்தில் இரு தரப்பினதும் தீவிரவாதம் காரணமாக ஏற்பட்ட பேரழிவுகளை நாம் கண்கூடாக கண்டுள்ளோம். இன்று அரசியலமைப்பு உருவாக்கும் செயல்முறைக்கு அப்படியான ஒரு நிலை வரக்கூடாது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தோற்றுப்போன ஒரு முயற்சி அல்லது குற்றங் குறையுள்ள ஒரு புதிய அரசியலமைப்பு என்பன நாட்டுக்கு சம அளவிலான சேதத்தையே ஏற்படுத்தும்.

சில இலட்சிய ரீதியான பிரேரணைகளை முன்மொழியும் சிலபேர் சர்வதேச சமூகங்களைச் சார்ந்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது. எப்படியும் விஷயம் அப்படி இருக்கக் கூடாது. மோதல்கள் அதற்குள்ளேயே தீர்க்கப்படுவதுதான் சிறந்தது. இல்லாவிட்டால் அந்த பிரேரணைகள் நிலைத்து நிற்காது. உள்ளகப் பிரச்சினைகள்ஃமோதல்கள் போன்றவற்றை தீர்ப்பதில் பாடங்கள் ஏன் உதவிகள் கூட வெளியில் இருந்து பெறப்படுவதற்கான தேவைகள் உள்ளன. எனினும் அதை பெறுவதில் ஒரு அளவுக்கு மேல் தீவிரம் காட்டக்கூடாது. பிரதானமான முயற்சிகள் நாட்டுக்கு உள்ளேயும் மற்றும் சமூகங்களுக்கு இடையேயும் மேற்கொள்ளப்பட வேண்டும். எப்படியாயினும் சர்வதேச நிலைகள் இப்போது கணிசமானளவுக்கு மாறிவிட்டன மற்றும் வழங்கப்பட்ட சர்வதேச முயற்சிகள் மற்றும் யோசனைகள்(அல்லது மக்கிய கயிறுகள்) என்பனவற்றின் நொருங்கக்கூடிய தன்மை இப்போது அம்பலமாகி வருகின்றன.

இந்த முறையீட்டை அளவுக்கு அதிகமாக நீட்டாமல், புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயல்முறையினை அணுகும் முறையில் சாத்தியமான அளவுக்கு கடந்த காலத்தின் கருத்தியல் பொதியில் இருந்து நீங்கள் விடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்கள் பக்கத்தில் எதிர்மறையான சிலவற்றுக்கு மத்தியில் பல சாதகமான விஷயங்களும் உள்ளன, மற்றும் அவை அனைத்தையும் பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல. நீங்கள் தமிழ் சமூகத்தின் நலன்களை முதன்மையாக மனதில் கொண்டு அரசியலமைப்பு பிரச்சினைகளை அணுகுவதில் தவறு எதுவுமில்லை. ஆனால் விரைவிலேயே அது நாட்டினதும் மற்றும் அனைத்து சமூகங்களினதும் பெருமளவு பொதுவான நலன்களுக்கானதாக இருக்க வேண்டும். எங்கள் பொதுவான முயற்சியின் அடிப்படை ஆதாரங்கள் ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி என்பனவற்றுக்கானதாக இருக்க வேண்டும். கட்டமைப்பு பதத்தில் சொன்னால், கூட்டுறவான அதிகாரப்பரவல்தான் சிறந்ததாக இருக்கும் அதை நாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பு மூலம் அடையலாம்.
 மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Loading...