Tuesday, 31 January 2017

சர்வாதிகாரத்தை நோக்கி நல்லாட்சி-மகிந்த

சர்வாதிகாரத்தை நோக்கி நல்லாட்சி-மகிந்த
சர்வாதிகாரத்தை நோக்கி நல்லாட்சி-மகிந்த
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்கும் கைங்கரியத்தில் மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கமும் தற்போது சர்வாதிகாரத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்துகொண்டார்.

மல்வத்துபீட மகாநாயக்கரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட மஹிந்த, பின்னர்  ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. வழக்கும் அவர்களதுதான் பொருட்களும் அவர்களு டையதுதான் என்று சிங்களத்தில் கூறுகின்ற பழமொழியைப் போன்று அரசாங்கத்தின் செயற்பாடு காணப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகளை அப்படியே விட்டுவிடுவதற்கு தயாராகி வருகின்றனர். அவற்றை மூடிமறைக்கவே முயற்சிக்கின்றனர். இந்த நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடி மத்திய வங்கி பிணை, முறிகள் விற்பனையில் இடம்பெற்ற கொள்ளையாகும். அவை தொடர்பான விடயங்களை வெளியிட்டால் நாட்டு மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றார்.
Loading...