Wednesday, 25 January 2017

உள்ளூராட்சி தேர்தல் தாமதம் : மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீமே காரணம்

ள்ளூராட்சி தேர்தல் தாமதம் : மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீமே காரணம்
உள்ளூராட்சி தேர்தல் தாமதம் : மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீமே காரணம்
உள்ளூராட்சிசபைத் தேர்தலை பிற்போடும் அரசின் தந்திரத்துக்கு துணை போவது அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்றோரின் கையாலாகாததனத்தை காட்டுவதாக உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்   தெரிவித்துள்ளார். 

உள்ளுராட்சி தேர்த‌லை நடத்தாம‌ல் தொடர்ந்தும் இழுத்த‌டிக்கும் அர‌சாங்க‌த்தின் ஜனநாயக விரோத போக்கிற்கு  சிறுபான்மை கட்சிகள்  சில விலை போவதாகவும்  அவர் குற்றஞ்சாட்டியுள்ள அவர், நல்லாட்சி அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு அஞ்சியே எல்லை நிர்ணய அறிக்கை தயாரிப்பதில் சிக்கல்கள் உள்ளதாக கூறவுதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.   

இவ்வாறான நிலையில், எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கை மிக விரைவில் அரசாங்கத்திட்டம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்றோர் தலைமையிலான சிறுபான்மை கட்சிகள் தெரிவிப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இவர்கள் எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்படும்போது அதில் சிறு பான்மை மக்களின் பாதக நிலைகளை முறையாக சுட்டிக்காட்டவில்லை  எனவும் முபாறக் அப்துல் மஜீத்  குறிப்பிட்டுள்ளார்.

அவ்வப்போது அரசுக்கு சார்பான ஓரிரு கட்சிகளை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் வட்டார முறைப்படியான தேர்தலும் எல்லை நிர்ணய அறிக்கையும் பாதகமானது என அமைச்சர் மனோ கணேசன் மற்றும் அப்துல் ரவூப் ஹக்கீம்  போன்றோர் தற்போதுதான்  புரிந்துகொண்டார்களா   எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விகிதாசரப்படி உடனடியாக தேர்தலை நடாத்துவதே ஜனநாயகத்தை மதிக்கும்  செயல் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.  
Loading...