Tuesday, 31 January 2017

டிரம்பின் அடுத்த அதிரடி



அமெரிக்காவுக்குள் நுழைய ஏழு நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அட்டர்னி ஜெனரலை பதவிநீக்கம் செய்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஈராக், சிரியா உட்பட ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

டிரம்பின் இந்த அறிவிப்பை சட்டவிரோதம் என கண்டித்த அட்டர்னி ஜெனரல் Sally Yates-யை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

டிரம்புக்கு எதிராக செயல்பட்டதாக கூறி Sally Yates மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Loading...