Monday, 23 January 2017

பட்டதாரி நியமனம்கள் படிப்புக்கு உகந்தவாறு கொடுக்கப் படல் வேண்டும்கடந்த சில காலங்களாக கிழக்கில்  பட்டதாரி நியமனம்கள் அரசியல் செல்வாக்குடன் கொடுக்கப் பட்டு வருகின்றன. இது பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்களிடம் அவர் கருத்தைக் கேட்ட போது  இந் நியமனம்கள் கொடுக்கப் பட வேண்டியவைதான் , ஆனால் அதில் உள்ள தாத் பரிய தன்மைதான் பின் பற்றப் படாமை கேள்விக்குறியாய் நிற்கிறது.
 
அதாவது வர்த்தகத் துறையில் பட்டம் பெற்ற ஒரு பட்ட தாரி மாகான சபை ஒன்றில் விளையாட்டுத் துறை சார்ந்த பதவியும், அதே போல்  தமிழ் மொழியல் பட்டம் பெற்ற ஒரு பட்ட தாரி புள்ளி விவர திணைக் களத்திலும், புவியல் துறையில் பட்டம் பெற்ற ஒரு பட்ட தாரி நீதி மன்றம் ஒன்றில் ஒரு உதவி நிர்வாகத் துறை உத்தி யோக  துறையில் , இவ்வாறு அவர் அவர் துறை சார்பு இல்லா பணிகளில் அமர்த்தும் போது அப் பட்ட தாரிகளின் கல்வி அறிவு திசை திருப்பப் படுகின்றது. இதனால் அவர்களது திறமை , கற்ற கல்வி எல்லாம் பயனற்றுப் போவதைக் காணலாம். அத்துடன் அவர்களது வேலைத் திறனும் வலு அற்றுக் காணப் படுகின்றன
 
இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் மத்தியில் விரக்தியும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.அரசியல் தலையீடுகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்குகளே இதற்கு காரணமாவதாகப் பட்டதாரிகள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர். சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் தேவைக்காக பட்டதாரிகளை பயன்படுத்த முற்படுகின்றனர்.

மேலும் நியமன விடயத்தில் அரசியல் செல்வாக்குகள் பிரயோகிக்கப்பட்டு வருவதன் காரணமாகத் திறைமையுள்ள பட்டதாரிகள் நியாயமற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்படும் பட்டதாரிகள் மத்தியில் விசனமும் விரக்தியும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அனைத்துப் பட்டதாரிகளும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளும் நன்கு அறிவார்கள்

 இங்கு நோக்கப் பட வேண்டிய விடயம் என்ன வெனில் மனித வள மேலாண்மை. அதாவது நபர்களை வேலைக்கமர்த்துவது, அவர்களுடைய ஆற்றல்களை வளர்த்தெடுப்பது, பயன்படுத்துவது, பராமரிப்பது மற்றும் அவர்களின் சேவைகளுக்காகவும் வேலை மற்றும் நிறுவனத்தின் தேவைகளுக்கேற்பவும் ஊதியமளிப்பதாகும்.முறையாகச் செயல்படுத்தப்படும் திறன் மேலாண்மை, குறித்த பணிக்குத் தேவையான திறன்களை அடையாளம் காண்பதுடன், ஒவ்வொரு பணியாளினதும் திறனையும் இரண்டுக்கும் இடையிலான இடைவெளியையும் புரிந்துகொள்ள வேண்டும்.இன்றைய உலகில் முகாமைத்தவத்தில் மனிதவள முகாமைத்துவம் முக்கியமான பகுதியாக காணப்படுகிறது. ஏனைய வளங்களை முகாமை செய்யவேண்டிய பொறுப்பும், அதிகாரமும் மனிதவளத்தையே சார்ந்து  இருப்பதனால் இதனை பற்றிய அறிவு அத்தியாவசியமானதாகும்.
 
எனவே தான் இவ்வாறான குளறு  படிகள் நடப்பதினால் தான் நம் நாட்டின் மனித வளம் உரிய முறையில் பயன் படுத்தப் படாதுள்ளது. தேசத்தின் அரிய செல்வமான மனித வளத்தை எப்படியெல்லாம் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம் நாம்.

மேலும் அரசு உடனடியாக வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். அரசின் செலவைக் குறைக்க ஆள்குறைப்பு செய்வது, காலியிடங்களை நிரப்பாமல் பதவிகளையே காலிசெய்வது, துறை களைக் குறைப்பது, நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை சுருக்குவது போன்ற செயல்களில் இறங்கக் கூடாது. வேலைவாய்ப்பு பெருகினால் நுகர்வும் பெருகும்; அது தொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை வளர்ச்சிக்கு நேரடியாக உதவும். என  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா  கூறினார் 
Loading...