Wednesday, 25 January 2017

இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படாது- அமெரிக்கா

இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படாது- அமெரிக்கா
இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படாது- அமெரிக்கா
அமெரிக்காவில் ஜனாதிபதிகள் மாறினாலும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் ஏற்ப டாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலராக நியமி க்கப்பட்டுள்ள ஏஞ்சலா அக்கேலர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலராக நியமிக்கப்ப ட்டுள்ள ஏஞ்சலா அக்கேலர், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் பதவிக்கு, ஏஞ்சலா அக்கேலர், கடந்த 20ஆம் திகதி நிய மிக்கப்பட்டார்.

இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதையடுத்து, முதல்முறையாக இலங்கை வந்துள்ள அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இங்கு தங்கியிருந்து நிலைமைகளை ஆராயவுள்ளார்.  

நேற்றையதினம் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்திய பிரதி இராஜாங்க செயலாளர் தெற்காசியா தொடர்பான அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றங்கள் இடம்பெறமாட்டாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் டரம்ப் நிர்வாகத்தில் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள் வரும் என எவரேனும் எதிர்பார்த்தால் அது ஏமா ற்றத்திலேயே முடியும் என சூசகமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் ஊடகவியலாளர்கள் குழுவினரையும்  ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரட்ண பரணவிதானவையும் தனித்த னியே சந்தித்து தகவல் உரிமைச் சட்டம் மற்றும் இலங்கையில் ஊடக சுதந்திரம் தொடர்பாக கேட்டறிந்தார்.

அதையடுத்து சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் ஏஞ்சலா அக்கேலர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இவர் தமது பயணத்தின் முடிவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பார் என்பது குறிப்பி டத்தக்கதாகும்.
Loading...