Thursday, 29 December 2016

அடேல், எல்.ரீ.ரீ.ஈ பிரதிநிதிகளின் முகத்திரையை கிழிக்கிறார்


                                             மனெக்ஷா

எல்.ரீ.ரீ.ஈ சார்பான ஒரு புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்றின் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார், அந்த அமைப்பு காலஞ்சென்ற கோட்பாட்டாளரின் உடல் எரிக்கப்பட்ட சாம்பல் கொண்ட எல்.ரீ.ரீ.ஈ கோட்பாட்டாளரான மறைந்த அன்ரன் பாலசிங்கத்தின் விதவையான அடேல் ஆன், தாழியை வைத்துக்கொண்டு அadel1வரின் ஞ}பகார்த்தமாக அதை வைத்து லண்டனில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதற்காக அவர் அந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தனது முதல் மனைவியின் மரணத்தை தொடர்ந்து அன்ரன் பாலசிங்கம் அவுஸ்திரேலியாவில் பிறந்தவரான அடேல் ஆனை 1978ல் லண்டனில் வைத்து திருமணம் செய்து கொண்டார். எந்தவித பிரிவும் இல்லாமல் வாழ்ந்த அந்த ஜோடியின் வாழ்க்கை,1983ல் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் "பாதுகாவல் தேவதூதர்களாக" மாறியதிலிருந்து மூன்று தசாப்தங்களாக தீவிர சாகசம் நிறைந்ததாக மாறியிருந்தது.

அடேல் பாலசிங்கம் தனது கணவர் உயிரோடிருந்தபோதே எழுதிய தனது சுயசரிதையில், மூன்று தசாப்பதங்களாக தாங்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக இருந்ததினால் இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் தாங்கள் அனுபவித்த இடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அன்ரன் பாலசிங்கம், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வே.பிரபாகரனுக்கு ஒரு ஞ}னத் தந்தையிலும் மேலானவராக இருந்தார், மற்றும் பாலசிங்கத்தின் வற்புறுத்தலின் பேரில்தான் எல்.ரீ.ரீ.ஈ தலைவர், தனது இறுதி இலக்கான ஈழத்தை அடையும்வரை திருமணம் செய்யாமல் பிரமச்சாரியாகவே வாழ்வது என்கிற தனது உறுதிப்பாட்டை கைவிட்டு திருமணம் செய்ய சம்மதித்தார். எனினும் பிரபாகரன் அவரது உயர் சகாக்களான  அமைப்பின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் போன்றவர்களின் ஆலோசனையின் பெயரில் சுயமாக எடுத்த சில முடிவுகள் அன்ரன் பாலசிங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கின.

லண்டனில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ சார்பான ஒரு அமைப்பான தமிழர் பாரம்பரிய மையம் என்பது சில நாட்களுக்கு முன்பு எல்.ரீ.ரீ.ஈயின் கோட்பாட்டாளரின் சாம்பலைக் கொண்ட தாழி தங்களிடம் உள்ளதாகவும், மற்றும் அன்ரன் பாலசிங்கத்தின் 10ம் வருட நினைவை அடையாளப் படுத்தும் விதமாக அவரின் ஞ}பகமாக ஒரு நினைவுச் சின்னத்தை நிறுவி அதில் அந்த தாழியை வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்திருந்தது.

அந்த லண்டன் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பைக் கேள்வியுற்ற தற்போது அவுஸ்திரேலியாவில் தனது உறவினர்களுடன் வசிக்கும் அடேல் பாலசிங்கம், உடனடியாக தனது கணவரின் சாம்பல் தொடர்பான பொய்யான கோரிக்கையைப் பற்றி மறுப்பு தெரிவித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது அறிவிப்பில் அடேல் குறிப்பிட்டிருப்பது, மறைந்த தனது கணவரின் விருப்பம் அவரது சாம்பலை இயற்கையில் மூழ்கடித்துவிட வேண்டும் என்பதே மற்றும் பாலசிங்கம், தன்னிடம் தனது சாம்பல் எங்கெல்லாம் கலக்கவேண்டும் என்றுகூட தெளிவாகக் கூறியிருந்ததாகவும், அவரது விருப்பத்தின்படி தான் அந்த சாம்பலை பெரிய மரங்களின் கீழ், சலசலத்து ஓடும் ஆறுகளில் மற்றும் மலர்படுக்கைகளில் போட்டு விட்டதாக கூறியுள்ள அடேல், பாலசிங்கத்தின் சாம்பல் தங்களிடம் உள்ளதாக தமிழ் அமைப்பு மேற்கொண்டுவரும் பிரச்சாரத்தை முற்றாக நிராகரித்ததுடன், இத்தகைய பிரச்சாரங்கள் தனது உணர்வுகளையும் மற்றும் அன்ரன் பாலசிங்கத்தை மதிப்பவர்களையும் புண்படுத்தவே செய்யும் என்று.

அவர் மேலும் குறிப்பிட்டிருப்பது, அப்பாவி பொதுமக்களை  ஈர்ப்பதற்காக நாகரிகமற்ற வழிகளில் பணம் செலவழித்து வெறும் கல் கட்டிடம் அமைப்பதற்குப் பதிலாக, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தப் பணத்தை வழங்கினால் அது ஒரு அமைதியான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று.

 "சுதந்திரத்துக்கான விருப்பம்" என்கிற தலைப்பில் அடேல் எழுதியுள்ள அவரது சுயசரிதையில், எல்.ரீ.ரீ.ஈ தலைவரின் நிழலில் தங்கள் வாழ்க்கையை வழி நடத்தியபோது தானும் தனது கணவரும் எதிர்கொண்ட போராட்டங்கள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நன்கு படித்த ஊடகவியலாளராக இருந்த பாலசிங்கம், தத்துவாசிரியர் ஜிட்டு கிருஸ்ணமூர்த்தியின்பால் அதிக ஈர்ப்புக் கொண்டவராக இருந்ததுடன் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவருக்கு துணையாக இருந்து ஒரு நடைமுறைச் சாத்தியமான வாழ்க்கையை வாழ்ந்தவர். பாலசிங்கம் மற்றும் அடேல் ஆகியோர், எல்.ரீ.ரீ.ஈ க்கும் ஆயுதப்படைகளுக்கும் இடையில் மோதல் வெடித்த இடங்களில் அவர்கள் அடைபட்டிருந்த வேளைகளில் பல சந்தர்ப்பங்களில் மரணத்தின் வாயிலில் இருந்து தப்பியுள்ளார்கள்.

அடேல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதின்படி, இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொண்ட செயற்பாடுகளின்போது கூட தானும் தனது கணவரும் யாழ்ப்பாணத்தில் மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் இருந்ததாகவும் மற்றும் ஒரு வெள்ளைத்தோல் கொண்ட ஆளாக இருந்தபடியால் இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் சமயத்தில் அங்கிருந்து தப்பி ஓடும்போது அடேல் தன்னை மறைத்துக்கொள்ள மிகவும் கஷ்டபடபட்டாராம். சுதந்திரப் பறவைகள் என ஆரம்பிக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈயின் பெண்கள் பிரிவினை வளர்த்தெடுப்பதில் அடேல் பாலசிங்கம், ஒரு கருவியாக இருந்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈ சார்பாக அவரது கணவர் பேச்சுவார்த்தைகளின் தலைமை பொறுப்பில் இருந்தபோது, பேச்சு வார்த்தைகளுக்கு உதவி செய்வதில் அடேலும் முக்கிய பங்கினை வகித்துள்ளார்.

ஏமாற்றம்adel-1

எனினும் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளின் இறுதிக் கட்டத்தில் அவர்கள் முற்றாக ஏமாற்றம் அடைந்தார்கள் மற்றும் அன்ரன் பாலசிங்கம் பிரபாகரன்மீது நம்பிக்கை இழந்து எல்.ரீ.ரீ.ஈயின் மொத்த அழிவு மற்றும் பிரபாகரனின் மறைவு என்பன நடக்கப்போவதாக தன்னுடன் நெருக்கமான தோழர்களுக்கு, பிரபாகரனுக்கு எதுவும் தெரியாது மற்றும் முழ உலகமும் ஒன்றுசேர்ந்து அவரை அடித்து நொறுக்கப் போகிறது என்று கணித்துக் கூறினாராம்.

மறுபக்கத்தில் அன்ரன் பாலசிங்கம் தனது உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் அந்தச் சாம்பல் எங்கு அடக்கப்பட வேண்டும் என்று தனது மனைவியிடம் சொன்ன அதேசமயம், லண்டனில் தனது மரணச்சடங்கு ஏற்பாடுகள் பற்றிக் கூட அவரது நீண்ட நாள் நண்பரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் புதிய தமிழ் பத்திரிகை ஆசிரியருமான என்.வித்தியாதரன் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

எனவே அன்ரன் பாலசிங்கத்தின் சாம்பல் தன்னிடம் உள்ளதாக பொய்யாக அறிவித்த தமிழ் புலம்பெயர் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்ததின் மூலம் இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டத்துக்கு உதவுபவர்களாக கூறிக்கொண்டு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பல்வேறு அமைப்புகளினதும் முகத்திரையை அடேல் கிழித்துள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ செயற்பட்டு வந்தபோது, அநேக தமிழ் அமைப்புகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தாங்கள் எல்.ரீ.ரீ.ஈயின் ஆதரவாளர்கள் என்றுகூறி நிதி சேகரிப்பதில் ஈடபட்டிருந்தன. வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, மேற்கத்தைய தலைநகரங்கள் பலவற்றிலும் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தி நிதி சேரிக்கும் செயற்பாடு மும்முரமாக நடைபெற்றது.

எனினும் எல்.ரீ.ரீ.ஈயின் தோல்விக்குப் பின்னர், இறுதிக்கட்ட போரின்போது எல்.ரீ.ரீ.ஈ அனுதாபிகளால் வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட பெருந்தொகையான பணத்துக்கு என்ன நடந்தது என்று ஒருவருக்குமே தெரியாது. வெளி உலகம் அன்ரன் மற்றும் அடேல் பாலசிங்கத்தை எல்.ரீ.ரீ.ஈயின் காவல் தெய்வங்களாகவே பார்த்தது. ஆனால் உண்மையில் பாலசிங்கம், பாரிய நோய்வாய்ப்பட்டு தனது கடைசி நாட்களை லண்டனில் கழிப்பதற்கு முடிவு செய்யும் வரையில் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ தலைவரின் இரும்புப் பிடிக்குள் சூழ்நிலைக் கைதிகளாக அடைபட்டிருந்தார்கள்.

அன்ரன் பாலசிங்கம் தனது 68ம் வயதில் 2006 டிசம்பர் 14ல் மரணமடைந்தார்.

அவரது விதவையான அடேல் ஆனினால்; வெளியிடப்பட்டுள்ள சமீபத்தைய அறிக்கை, அவரது கணவரின் 10வது மரண நினைவு தினத்தில் அவரது சாம்பல் பற்றிய பொய்யான கோரிக்கை தொடர்பாக அவரது மௌனத்தை உடைத்திருப்பதுடன்; தாங்கள்தான் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு இன்னமும் செயற்பட்டு வரும் நேர்மையற்ற சக்திகளின் முகத்திரையை கிழித்து அதை வெளிப்படுத்தவும் செய்துள்ளது.

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Loading...