Thursday, 22 December 2016

இலங்கைக்குள் குட்டி சீனாவை உருவாக்க முனைகிறது நல்லாட்சி -கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

இலங்கைக்குள் குட்டி சீனாவை உருவாக்க முனைகிறது நல்லாட்சி -கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
இலங்கைக்குள் குட்டி சீனாவை உருவாக்க முனைகிறது நல்லாட்சி -கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
சீன நிறுவனத்திற்கு 15,000 ஏக்கர் காணியை வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்குவதால் நாட்டிற்குள் இன்னொரு நாடு உருவாகு மென கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விவசாய நிலத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுமெனவும் தெரி வித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

நாட்டிற்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை மஹிந்த ராஜபக்ச வழங்குவார். அதில் அவருக்கு மகி ழ்ச்சியே. எனினும் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கும், முதலீடுகளை வரவேற்பதற்கும் இடையில் வித்தியாசம் காண ப்படுகின்றது.

இந்த திட்டம் தொடர்பில் அப்போதையை அரசாங்கத்தின் கொள்கையை மஹிந்த ராஜபக்ச மிகத் தெளிவாக சீன அதிகாரிளுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். இந்த திட்டத்தை 750 ஏக்கரிலேயே ஆரம்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.

எனினும் 15,000 ஏக்கரில் இந்த திட்டத்தை ஆரம்பித்தால் மக்கள் எதிர்ப்பினை வெளியிடுவார்கள் என நாங்கள் சீன நிறுவனத்திற்கு எச்சரித்திருந்தோம். இதனை தடுக்க முடியாது. ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களது நிலங்கள் இல்லாமல் போகும், அவர்கள் நிர்க்கதிக்குள்ளாவார்கள். 15,000 ஏக்கரும்  விவசாய நிலங்கள், அம்பாந்தோட்டை என்பது விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாவட்டம். ஆகவே மிகப்பெரிய சிக்கல் தோன்றும்.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வை புதிதாக ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். 40 சதுரகிலோமீற்றர் நிலப்பகுதி யின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சீன நிறுவனத்திற்கு உரித்தானதாக அமையும். ஆகவே நாட்டிற்குள் ஒரு நாடு உருவாகும். எனினும் அதற்கான தேவை இல்லைஎன அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...