Thursday, 29 December 2016

அரசை உடைக்க முயல்கிறார் டிலான்-அமைச்சர் மனோ குற்றச்சாட்டு

அரசை உடைக்க முயல்கிறார் டிலான்-அமைச்சர் மனோ குற்றச்சாட்டு
அரசை உடைக்க  முயல்கிறார் டிலான்-அமைச்சர் மனோ குற்றச்சாட்டு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டு வர, முற்போக்கு சக்திகளுடன் தானும் பெரும் பங்காற்றியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அப்போது,எதிரணியில் இருந்து மிக அண்மையில் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டவர்கள் தமது கட்சியை சேர்ந்தவர்களுக்கு தாக்குதல் தொடுத்து கதைகளை பேசி வருகின்றனர் எனவும், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக வந்தவர்கள் பாவம் செய்த, புண்ணியத்திற்கு அமைச்சரானவர்கள் என அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருந்தார். இந்த கதை புண்ணியத்தில் அமைச்சரான டிலான் பெரேராவுக்கே பொருந்தும். நான் தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் வாக்குகளின் வந்தவன் எனவும் மனோ கணேசன் இதன்போது கூறினார். 

மேலும், ஞானசார தேரர், விமல் வீரவங்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் டிலான் பெரேரா, அவர்களுக்கு தேவையானவற்றையே நிறைவேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அரசாங்கத்தை இரண்டாக உடைக்கும் வேலையையே அமைச்சர் டிலான் பெரேரா செய்து வருவதாகவும் அமைச்சர் மனோ கணேசன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்
Loading...