Wednesday, 14 December 2016

சில அரசியல் வாதிகள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அவர்களது பாட்டன் வீட்டுப் பட்டுக் குஞ்சம் என்று நினைத்து விட்டார்கள். -பிரதியமைச்சர் அமீர் அலி
சில அரசியல் வாதிகள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அவர்களது 
பாட்டன் வீட்டுப் பட்டுக் குஞ்சம் 
என்று நினைத்து விட்டார்கள். -பிரதியமைச்சர் அமீர் அலி

ஊடகப் பிரிவு

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய இரண்டாம் நாள் தலைமையுரை
யின் போது 

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் ஆய்வுப் பொன் விழாவில் இரண்டாம் நாள் அரங்கினை தலைமையேற்று வழிநடாத்துவதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன். 
என்னை இங்கு அழைத்த இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடி பேராசிரியர் அல்லாமா உவைஸ் அவர்களை இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் செய்து வைத்த சுவாமி விபுலானந்தா அடிகளை ஞாபகமூட்டும் இவ்வரங்கினை நான் சங்கை செய்யக் கடைமைப் பட்டிருக்கிறேன். 
ஞானம் நிறைந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் அவர்கள் இஸ்லாமியத் தத்துவ ஞானத்தின்பால் ஈர்கப்பட்டமை இதற்கொரு சான்று. 

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஏன் நடாத்தப்பட வேண்டும் என்பதற்கு இது ஓர் ஆதாரம். அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸூம், சுவாமி விபுலானந்தரும் சமகால ஆளுமைகளாக உறவாடிய பொழுதுகளையும் இன ஐக்கியத்திற்கான  உறவுப் பாலமாகக் நான் எடுத்துக் கொள்கிறேன்.

இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் இக்காலத் தறுவாயில் இந்த மாநாடு இடம் பெறுகிறது. 
இஸ்லாம் எங்களை நடுநிலைச் சமுதாயம் என்கிறது. இலக்கியம் நமது இதயங்களை இணைக்கிறது. 

தமிழ் மொழியின் சாரம் உறிஞ்சி ஞான மோட்சம் கண்ட படைப்பாளிகளைக் கொண்டாடுவதும், இன்றைய வெறுமைக்கு 
பழமையின் பெட்டகத்தில் பண்டம் தேடுவதும் இவ்வாறான மாநாடுகளின் அடைவுகளாகக் கொள்ளலாம். 

இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் தற்போது இந்திய முஸ்லிம்கள் சந்தித்த ஆரம்பகால சாவால்களையொத்த நிகழ்வுகளைச் சந்திக்கத் தொடங்குகின்றோம். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் இந்திய, மலேசிய, சிங்கபூர் ஆளுமைகள் இலங்கையின் இனப்பிரச்சினைகள் பற்றிய கூர்மையான பார்வைகளைப்  பதித்துச் செல்லும் தூதுவர்களாய்த் திகழ வேண்டும் என்பது... 
என் பேரவா.

இந்தநாட்டின் பிரதான மூன்று தேசிய இனங்கள் சுதந்திரமாக வாழும் உரிமையைப் பெற்றதன் பின்னரும் உலக வரை படத்தில் இந்தத் தேசத்தின் கேந்திரஸ்தலம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்குத் தடையாக இருக்கிறது. 

சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் பிராந்திய வல்லரசுகளும் ஏதோ ஒரு வகையில் இலங்கையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே ஆசைப்படுகின்றன. 
தனிமனித ஆசைகளும் வல்லரசுகளின் பேராசைகளும் தணியாத கேள்வித் தீயை மூட்டிக் கிடப்பதால் அணையா நெருப்பாய் இங்கிருப்பதுதான் இனப்பிரச்சினை.

 இலங்கையில் முஸ்லிம் தேசியம் தமிழ் தேசியத்துடன் இணங்கிப் போவது ஒருபிரச்சினை அல்ல. ஆனால் சர்வதேச முஸ்லிம் எதிர்ப்பு அசைவியக்கம் இலங்கை முஸ்லிம்களின் இருப்பை அடித்துச் செல்லும் ஒரு சூனியப் புள்ளிக்குத் திசைதிருப்புவதில் இருந்து தமிழ் தேசியத்தையும் சிங்கள பௌத்த தேசியத்தையும் கையாள்வது எப்படி? என்பதுதான் எமது இன்றைய பிரிச்சினை.

மாநாடுகள் நடாத்தப்படுவது சில செய்திகளை உலகறியச் சொல்வதற்காகத்தான்.  அதற்கு ஒரு ஊடகமாக இந்த ஆய்வுப் பொன்விழா அமைந்ததும் இறைவனின் கிருபை என்றே சொல்ல வேண்டும்
உதுமானிய சாம்ராஜ்ஜியத்தை இந்த முஸ்லிம் உம்மத்து இழந்த நாள் முதலாய் காலனித்துவமும் பின்னர் உலகமயமாக்கலும் எம்மைக் கூறுபோட்டு விட்டன. இப்போது விடை கானா வினாக்களுடன் அவை தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 

முஸ்லிம்களின் தேசங்கள் ஒவ்வொன்றும் யா! நப்சி யா! நப்சி என்று பிதற்றித் திரிகையிலே பக்கத்து தேசத்தை சிந்திப்பது அசாத்தியமாகின்றது. இந்த நிர்மூலத்தினை ஏற்படுத்தியதில் சியோனிசம் வெற்றி கண்டிருக்கிறது. இதனை முறியடிப்பது சிரமமானதுதான் என்றாலும் குறைந்த பட்சம் அறிந்து வைத்திருப்பதில் நாமும் நமது தலைமைகளும் கோட்டை விட்டிருக்கிறோம்.
மாகாகவி அல்லாமா இக்பால் இத்தகைய நுண்ணிய அணுகுமுறைகளுடன் கூடிய இலக்கியப் படைப்புகளை இறவா வரமாய் நமக்களித்துவிட்டுச் சென்றிருக்கிறார். 

இலங்கைச் சூழலில் குறிப்பாக  உள்நாட்டு யுத்தச் சூழலில் எமது இலக்கிய ஆளுமைகள் தமது உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 

தேசிய சர்வதேச முஸ்லிம் அரசியல் சூழ்நிலைகள் அவற்றின் பல்வகைப் பரிமாணங்கள் அனைத்தையும் ஆய்வதும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதும் நம்மனைவர் மீதும் கடமையாகிறது. 
இத்தகைய ஒரு பணியினைத்தான் இலங்கை இஸ்லாமிய இலக்கியஆய்வகம் மேற்கொள்கிறது.

ஆய்வக உறுப்பினர்கள் என்னை இந்த மாநாடு தொடர்பாக அனுகியபோது அனைவரையும் இணைத்து அனைத்து அமைச்சர்களும் சேர்ந்து ஒரு உலகமாநாடாகச் செய்யலாம் என்றுதான் ஆலோசனை கூறியிருந்தேன். 
ஆனால் சில அரசியல் வாதிகள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அவர்களது 
பாட்டன் வீட்டுப் பட்டுக் குஞ்சம் 
என்று நினைத்து விட்டார்கள். 

2002ம் ஆண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகப் பணிகளை ஒரு தொண்டனாய் இணைந்துஆற்றியிருந்தேன்.

அதற்கான வெகுமானமாக இந்த மாநாட்டை முன்நின்று நடத்தும் வர்த்தக வாணிபத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான இந்த மாநாட்டுத் தலைவர் அமைச்சர் றிஷhத் பதியுத்தீன் அவர்களோடு ஒத்துழைக்கும் அரும்பணியையும் ஆற்றக் கிடைத்தமையை நான் கருதுகிறேன். 

இலக்கியம், ஆன்மீகம், அரசியல் இவை எப்போதும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தே செயற்படும். மாமேதைகளும் தத்துவ ஞானிகளும் ஆலிம் கவிஞர்களும் தொடங்கி வைத்த அரும்பணியே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம். 

உமறுப் புலவர் அவரது இலக்கிய ஆளுமையைப் பெருமானாரைப் புகழ்ந்து வடிக்கும் சீறாப் புறாணத்தில் பதித்ததன் மூலம் அழியாப் புகழைத் தனதாக்கிக் கொண்டார்.
தென்னிலங்கையின் முதல் முஸ்லிம் குடியேற்றம் பேருவளை நகரில் ஸ்தாபிக்கப் பட்டதில் தொடங்கி அறபுத் தமிழும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியமும் இலங்கையில் ஆரம்பமாகின்றன. 
இன்று அதன் உச்சநிலையை ஆவணப்படுத்தும் உன்னதப் பணியை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இனிதே செய்கிறது. அதன் எதிர்காலப் பணிகளுக்கு நானும் எமது கட்சியும் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த மாநாட்டிற்காக உழைத்து ஒத்துழைத்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னா சரிபுத்தீன், செயலாளர் அஷ்றப் சிஹாப்தீன் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன். மேலும் இதில் கலந்து கொண்ட உள்நாட்டு வெளிநாட்டுப் பேராசிரியர்கள், இலக்கிய ஆளுமைகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
என்று தனதுரையை முடித்துக் கொண்டார்.
Attachments area
Click here to Reply or Forward
3.07 GB (20%) of 15 GB used
Last account activity: Nov 25
Details
Loading...