Wednesday, 22 June 2016

மு.கா தலைவர் ஹக்கீம் மக்களை என்ன மடையர்கள் என்று நினைத்து விட்டார் போல"

எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் மக்களை மீண்டும் ஹக்கீம் ஏமாற்றுவதற்கு புதிய அவதாரம் எடுத்து வருவது எந்த வகையில் நியாயம்??
அம்பாறை மாவட்டத்தில் மு.கா தலைவர்  ஹக்கீம் எப்படியாவது வெற்றிகரமான மாநாடாக  தேசிய மாநாட்டை நடாத்திக் காட்டுவதற்கு பல பிராயத்தனங்களை மேற்கொண்டிருந்தார். இதனால் பிராந்திய தளபதிகளும்,கட்டளைத் தளபதிகளும் சிப்பாய்களும் பல ஊர்களுக்கும் சென்று இளைஞர்களுக்கு ஆசை காட்டி மறுபுறத்தில் கட்சியின் எழுச்சிப்பாடல்கள் அடங்கிய சீடிக்களையும்  விநியோகித்து கட்சியின் கொள்கைகளும் மீள தூசி தட்டப்பட்டு முதியோர்களையும்,பெண்களையும் திசை திருப்பி ஏதோ ஒரு வகையில் வந்த மக்களுக்கோ அல்லது சமூதாயத்துக்கோ ஒரு கடுகளவு நன்மையும் கிடைக்காமல் தனக்கும் கட்சிக்கும் வாசியாக நடாத்தி முடித்தார் அந்த மாநாட்டை.கட்சியின் தேசியமாநாடு என்பது மக்கள் நலன்கள்,காலத்தின் தேவைப்பாடு,சமூகத்தின் எதிர்காலம் என்பதை அடிப்படையாக கொண்டு நடாத்தப்படுவதாக இருக்க வேண்டுமே ஒழிய. சின்ன சின்ன சச்சரவாளர்களுக்கு தலைவர் தம் பலத்தை காட்டும் ஆயுதமாக இருக்க கூடாது.


ஆனால் அன்று பல ஊர்களுக்கும் தலைவர் ஹக்கீம் சென்று பலதரப்பட்ட வாக்குறுதிகளையும் கொடுத்தது நாம் அறிந்ததே.

அந்த வகையில் ஒலுவில் கடற்கரைக்கு சென்ற அமைச்சர் ஹக்கீம் அங்குள்ள மீனவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி பிரச்சினைகளை மிக விரைவில் தீர்த்து தருவதாக செல்லிவிட்டு சென்றார். அது இதுவரை நடக்கவில்லை.

கிழக்கு பிராந்தியத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு வலயமாக ஒலுவில் துறைமுகத்தை மாற்ற நடவடிக்கை மிகவிரைவாக எடுப்பதாக சொன்னார். இதுவரை என்ன செய்துள்ளார் நடவடிக்கை எடுத்தாரா? அப்படி எடுத்ததாக தெரியவில்லை.

 கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவது தொடர்பில் துறைமுகங்கள் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணத்துங்காவுடன் கலந்துரையாடவுள்ளேன் என்று சொன்னார். இதுவரைக்கும் உரையாடிக்கொண்டுதான் இருக்கார் போல அதுக்கு ஒரு விடையும் இல்லை.

# இழந்த காணி உரிமையாளருக்கு மிக விரைவாக நஸ்ட ஈடு வழங்குவது தொடர்பிலும் உரியவரிடம் பேசி பெற்றுத்தருவதாக சொன்னார். இதுவரை யாருடனும் பேசியதும் இல்லை நஸ்ட ஈடு கிடைப்பதாகவும் இல்லை.

கடல் அரிப்பை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு சென்றார். ஆனால் அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் கடலில் விழுந்து விட்டது போல இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

# அது மட்டுமா ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலயத்தை அண்மித்த பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இணைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். அதுமட்டுமா?மாநாட்டில் பிரதமரிடம் நான் விடுக்கும் ஒரேயொரு கோரிக்கை இதுதான் என்றார். இத்தனை நாளும் பேசிகொண்டுதான் இருக்கார் பிரதமருடன். இன்னும் முடியவில்லை போல. இப்போது அண்மித்த பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில் அல்- ஹம்றா இல்லை என்றே ஆகி விட்டது. என்ன நடந்தது என்று கூட விளங்கவில்லை.


இப்படியெல்லாம் தனது பேச்சாற்றல் மாயத்தினால் மக்களை ஏமாத்தி தனது காரியங்களை கச்சிதமாக சாதித்துவிட்டு."ஏழை மக்களை பாதாளத்தில் தள்ளி விட்டது போதாது போல"மீண்டும் தனது திறமையினால் மாயஜாலத்தை காட்டி திசை திருப்புவதற்காக.

மாநாட்டோடு சென்றவர் அண்மையில்  (19.06.2016) வந்து கடலரிப்பினால் ஒலுவில் பிரதேசத்தில் பன் பயிர்ச் செய்கையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கேட்டறிந்து அதற்கு நஷ்ட ஈடு தருவதாகவும் சொல்லியுள்ளார்.தலா 5000/- வும் கொடுத்துள்ளார்.


மக்களே நஷ்ட ஈடு எடுக்கத்தான் வேண்டும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இதற்குமுன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இழக்கப்பட்ட வளங்கள் இதுவரை என்ன நடந்தது?? சிந்திக்க மாட்டீர்களா? இந்த 5000/- பித்ரா உங்களுக்கு போதுமா? நிரந்தர தீர்வு இதுதானா?

துறைமுகத்துக்கு எடுக்கப்பட்ட காணிக்கு நஸ்ட ஈடு, கடலரிப்பை நிரந்தரமாக தடைசெய்தல், மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு, அல்-ஹம்றா பாடசாலையை அபிவிருத்தி செய்தல் இதெல்லாம் குப்பையில் போட்டது போல் கிடக்க.மீண்டும் இப்போது வந்து பன் பயிர்செய்கைக்கு நஸ்ட ஈடாக ஒரு சிறு தொகைகளை கொடுத்து மக்களை ஏமாத்தி திசை திருப்ப பார்க்கிறார் இந்த சாணக்கிய தலைவர் ஹக்கீம்.

"மக்களை என்ன மடையர்கள் என்று நினைத்து விட்டார் போல" சகோதர்களே இளைஞர்களே நன்றாக சிந்தித்து பாருங்கள். கடல் அரிப்புக்கு ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல் வெறும் நஸ்ட ஈடாக ஒரு தொகை பணமாக 5000 ரூபாவோ அல்லது 10000 ரூபாவோ கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா ? அல்லது கஸ்டங்களாவது நீங்கி விடுமா என்ன? நாம் இல்லாவிட்டாலும் நமது வருங்கால சந்ததியினராவது சந்தோசமாக வாழ வேண்டும் இல்லையா?

எத்தனையோ குடும்பங்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்திக்கொண்டு இருந்தார்கள் . பன் செய்கை , தென்னை வளர்ப்பு , மீன் பிடித்தல் , கிடுகு பின்னுதல் என்றெல்லாம் சந்தோசமாக இருந்தார்கள் மக்கள்.

ஆனால் கடலரிப்பு வந்து அத்தனையும் இழந்தது மட்டுமல்ல எஞ்சியுள்ள நிலத்தையும் கூட ஒவ்வொரு நாளும் கடலோடு உள்வாங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்த தலைவர் ஹக்கீம் போடும் சிறு பிச்சையோடு எல்லாம் தீர்ந்து விடுமா?  கொடுத்த வாக்குதியின்படி நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் அல்லவா!


உடன் பிறப்புக்களே புத்திஜீவிகளே தயவு செய்து ஊரின் நிலமையையும் மக்கள் படும் கஸ்டங்களை பத்தி சிந்தியுங்கள் பொய்யான போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும் இனி மேலும் இப்படிபட்ட பொய் வாக்குறுதிகளை கொடுத்து இந்த ஊரையும் மக்களையும் அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு

அதன் மூலம் அரசியல் இலாபம் அடையும் இப்படிபட்ட தலைவர்களிடம் இருந்து மக்களையும் நிலத்தையும் காப்போம் முன்வாருங்கள் ஓரணியில் ஒன்று திரண்டு மாற்றத்தை உருவாக்குவோம்.

ஒலுவில் ஜெலில்

Loading...