Friday, 24 June 2016

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி முஸ்லிம் காங்கிஸுடன் இணையுமா?


அண்மைகாலமாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் போக்கை நோக்குமிடத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்கின்றன.

இக்கட்சியின் பல முக்கிய பிரமுகர்களினால்  சமூகவலைத் தலைங்களில் வலம் வரும் கருத்துக்களை அவதானிக்குமிடத்து இக்கூற்று ஊர்ஜிதப்படுத்துகின்றன, இதற்கு சிறந்ததொரு ஆதாரமாக அண்மையில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகரினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட கருத்துக்களின் பிறகாரம் மெய்பிக்கப்படுகிறது.
சமீப காலமாக கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸிற்கும், அதனுடைய தலைமைத்துவத்திற்கும் எதிராக சில குறுநில மன்னர்களாலால் கிழக்கின் எழுச்சி என்ற கோசமும் எதிர்ப்பலைகளும் எழுந்துள்ள நிலையில்  கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஒரு பின்னடைவை எதிர்கொள்ளும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது.

இன்னிலையில் குறுகிய காலத்திற்குள் கிழக்கின் பெரும்பாலான இளைஞர் யுவதிகளின் ஆதரவை பெற்றுவரும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சமீப கால நடவடிக்கைகள் முஸ்லிம் காங்கிரஸிற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கிவருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது

தற்போது பரவலாக கிழக்கின் எழுச்சி என்ற கோசம் எழுப்புபவர்களின் குடும்பிகளை உழுக்க கூடிய வல்லமை உள்ள கட்சியாக கிழக்கில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாது அக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக செயற்பட்டு வந்ததையும் நாம் அறிவோம்.

இருந்த போதிலும் அக்கட்சியின் திடீர் திருப்பமானது அரசியல் மட்டத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. உண்மையில் முஸ்லிம் காங்கிரஸுடன், தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இணையுமாக இருந்தால் தற்போது எழுந்துள்ள முஸ்லிம் காங்கிஸிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக கோசம் எழுப்பும் கிழக்கின் எழுச்சி காணமல் போகும்

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி முஸ்லிம் காங்கிஸுடன் இணையுமா?

இது குறித்து அக்கட்சியுனுடைய முக்கிய பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது அரசியலில் எவ்வேளையிலும்  எதுவும் நடக்கலாம் என்று பதிலளித்தார்.

எது எவ்வாறாயினும் பொருத்திருந்து பார்ப்போம்
-ஆப்தீன் அலாவுதீன்

Loading...