Sunday, 26 June 2016

பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது: ஃபிரான்ஸ் வங்கி ஆளுநர்

பிரிட்டன் வெளியேறும் நடைமுறை: மாறுபட்ட சமிக்ஞைகளை அனுப்பும் ஜெர்மனி
பி.பி.சி
பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டிஷ் வangela-merkelங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது என பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிரான்சிஸ் வில்லேராய் டி கல்ஓ தெரிவித்துள்ளார்.

எல்லை கடந்த சேவைகளில் வங்கி பாஸ்போர்ட் அமைப்புகளை அணுக, ஒருங்கிணைந்த சந்தையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி பிரிட்டன் உறுப்பினராக இருப்பதை சார்ந்தே இருக்கும் என வில்லேராய் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள் பெர்லினில் கூட்டம்
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்திருக்கும் நிலைமையில், ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள், கூடிய சீக்கிரம் பெர்லினில் கூட்டம் நடத்தயிருக்கின்றன.
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒன்றுகூடி, பிரிட்டன் வெளியேறுகின்ற வழிமுறை மற்றும் விரைவாக விலகுவது பற்றி விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரிட்டன் பிரதமர் பதவி ஏற்பதற்காக காத்திராமல் பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் தொடங்க விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடு யுன்கர் தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள தேசியவாத மற்றும் ஜனரஞ்சகக் கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை வரவேற்றுள்ளன.

இந்நிலைமையில், பிரிட்டனின் இந்த மாதிரியை பிற நாடுகள் பின்பற்றாமல் தடுப்பது எவ்வாறு என்பதை இந்த அமைச்சர்கள் கருத்தில் கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் வெளியேறும் நடைமுறை: மாறுபட்ட சமிக்ஞைகளை அனுப்பும் ஜெர்மனி
வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சியூட்டிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகுவதற்கான வழிமுறையை பிரிட்டன் எவ்வளவு விரைவாக தொடங்க வேண்டும் என்பதற்கு விரைவாக எனவும் மெதுவாக எனவும் கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது.
Iஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற விரைவாக, மெதுவாக என கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது

வெளியேறுவதற்கான வழிமுறையை தூண்டுவதற்கு பிரிட்டன் அவசரப்பட வேண்டாம். ஆனால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என ஜெர்மானிய அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார்.
வெகு சீக்கிரமாக பிரிட்டன் வெளியேற வேண்டுமென பிராங்-வால்டர் ஸ்டெயின்மெயர் தெரிவித்திருக்கிறார்

முன்னதாக, வெகு சீக்கிரமாக பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆவன செய்ய வேண்டுமென ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் பிராங்-வால்டர் ஸ்டெயின்மெயர் கேட்டு கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய உறுப்பு நாடுகளின் ஐந்து சகாக்களுடன் நடத்திய கூட்டத்திற்கு பின்னர் பெர்லினில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
பூனையும் ஏலியும் விளையாட்டு விளையாட வேண்டாமென ஜீன்-மார்க் ஐரவுட்டு தெரிவித்திருக்கிறார்

பிரிட்டன் மக்கள் முடிவெடுத்த பிறகு, பூனை - எலி விளையாட்டு தேவையற்றது என ஃபிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-மார்க் ஐரவுட்டு தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனின் இந்த வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும், ஆனால், அந்தத் தாக்கங்கள் பிரிட்டனுக்கு மேலும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
Loading...