Friday, 24 June 2016

மக்களின் நம்பிக்கையை இழக்கும் நல்லாட்சி அரசு

மக்களின் நம்பிக்கையை இழக்கும் நல்லாட்சி அரசு
மக்களின் நம்பிக்கையை இழக்கும் நல்லாட்சி அரசு

சட்டத்தை மதிக்கக்கூடிய பொறுப்பான ஒருவராக நியமிக்கப்பட்ட புதிய பொலிஸ் மா அதிபரின் சேவைக்காலத்திலும் கூட  மாணவர் மீதான தாக்குதல் இடம்பெறுவது வேதனைக்குரியதென முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் சமீர கொஸ்வத்த தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் இவ்வாறான பாதுகாப்பு சார்ந்தவர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் குறுகிய காலத்தில் மக்களின் மதிப்பு, நம்பிக்கை மற்றும் எதிர்பார்பை இழந்த அரசாங்கமாக இந்த நல்லாட்சி அரசாங்கம் மாறிவருவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் சமீர கொஸ்வத்த இதன்போது தெரிவித்தார்.
Loading...