Monday, 27 June 2016

ஐ.நாவின் பிரேரணைகள் நிறைவேற்றப்படுகின்றன

ஐக்கிய நாடுகள் சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையினை இலங்கை அரசாங்கம் முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி வருவதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் காணாமல் போனோர் தொடர்பான செயலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டமை, அத்துடன் தற்போது மிகுதியாகவுள்ள பொறிமுறைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாகவும் அந்த செவ்வியில் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்
1467012368_do
Loading...