Thursday, 30 June 2016

எட்கா உடன்பாடு கைச்சாத்திட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!

எட்கா உடன்பாடு கைச்சாத்திட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!
எட்கா உடன்பாடு கைச்சாத்திட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!
இந்திய – இலங்கை வர்த்தக தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டால் நாடுதழுவிய ரீதியில் பாரிய போராட்டம் மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம அதிகாரி வைத்தியர் சமந்த ஆனந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நல்லாட்சி அரசாங்கம் இம்மாத இறுதியில் இந்திய இலங்கை வர்த்தக தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம் என குறிப்பிட்ட நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட நாட்டின் முன்னனி தொழிற்சங்கங்கள் பலவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் எதேச்சாதிகாரமாக குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முற்படுமானால் நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்துக் கொண்டு நாட்டை ஸ்தம்பிதமடைய செய்ய நேரிடும்.

இதன்மூலம் குறித்த போராட்டம் நாடு தழுவிய ரீதியான பணிப் புறக்கணிப்பாகவும் வெடிக்கலாம். இவ்வாறு நாடு ஸ்தம்பிதம் அடைந்தால் அதன் முழுப் பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்பதையும் கூறிக்கொள்கின்றோம்’ என தெரிவித்துள்ளார்.
Loading...