இது தொடர்பான அறிவிப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள விடுத்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் ஊடாக சரியான தகவல்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொழில் மோசடி வர்த்தகர்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு முகவர்களிடம் சிக்கி கஸ்டப்பட நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தின் 6 மாத காலப் பகுதியினுள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் 56 சுற்றி வளைப்புக்கள் மேற் கொள்ளப் பட்டுள்ளதாகவும், இதன் போது பல போலி முகவர்களை கைது செய்துள்ளதாகவும் அமைச்சர் தலதா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி செய்யப்படும் மோசடி வர்த்தகத்தினால் பலர் நிர்க்கதிக்குள்ளாகியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
 .625.256.560.350.160.300.053.800.461.160.90 (2)