Sunday, 5 June 2016

காவி வன்முறை திரும்புகிறது?


                                    ஹில்மி அகமது
அம்பாறை மங்களராமய விகாரையின் வண. அம்பிட்டிய சுமணரத்ன தேரர், monks protestகிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமதுவின் வீட்டிற்குள் சென்று சம்பூர் பாடசாலை நிகழ்வில் இடம்பெற்ற வெறுக்கத்தக்க சம்பவம் தொடர்பாக அவரை அச்சுறுத்தி உள்ளார். பின்னர் வண.தேரர் அம்பாறையில் இஸ்லாமிய எதிர்ப்பினை வெளியிடும் வகையில் கத்திக்கூவி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளார்.
29 மே 2016, திவியின ஞ}யிறுப் பதிப்பில் அதன் ஆசிரியர் தனது ஆசிரியத் தலையங்கத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமதினை கொலை செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், அதை தற்செயலாக தாக்கப்பட்ட பிள்ளையின் தந்தையே செய்யவேண்டும் என்றும் மற்றும் அவரது தலையை கொய்து அதை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ விடம் கையளி;க்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார்.
ஒரு தேசம் என்கிற வகையில் ஸ்ரீலங்கா எதை நோக்கிச் செல்கிறது? காவியுடை படையணி புத்துயிர் பெறுகிறதா? யகபாலனயவின் சிற்பிகளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். ஆட்சி மாற்றத்துக்காக பலர் தங்கள் உயிரையே பணயம் வைத்திருந்தார்கள் மற்றும் அதே திராட்சை ரசத்தை வித்தியாசமான குவளைகளில் வழங்குவதை மக்கள் விரும்பவில்லை. 30 வருடங்களாக நாங்கள் கண்டுவரும் இனச் சச்சரவுகளைக் காட்டிலும் அதிக வன்முறை நமக்குத் தேவையா? இதுவரை வடபகுதி தமிழ் மக்களுடன் இணைந்து நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வரும் சர்வதேச சமூகம் மற்றும் ஸ்ரீலங்காவின் துடிப்பான சிவில் சமூகம் என்பன முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதலையிட்டு மௌனம் சாதிக்கின்றன. அழுத்கம மற்றும் பேருவளை என்பன மறக்கப்பட்;ட கதைகளாகி விட்டன.
ஜனவரி 2015ல் இடம்பெற்ற யகபாலன புரட்சி எதிர்க்கட்சியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு கொண்டுவந்ததின் மூலம், முஸ்லிம்கள் மற்றும் இவாஞ்சலிகன் கிறீஸ்தவர்கள்மீது தண்டனை விலக்குடன் வன்முறையை கட்டவிழ்த்து விடும் தீவிரவாத பௌத்த பிக்குகளை ஊட்டி வளர்த்த ராஜபக்ஸ ஆட்சியினரது இனவாதப் பிரச்சாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எனக் கொண்டாடப் பட்டது. ஒரு பெரும் எண்ணிக்கையிலான மிதவாத சிங்கள பௌத்தர்கள் மற்றும் கிட்டத்தட்ட முழு சிறுபான்மை சமூகமுமே மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்தார்கள். பௌத்த தீவிரவாதிகளின் தீய வழிகளுக்கு துணை செய்வதுடன் மற்றும் சிறுபான்மையினரை விலக்கி வைப்பதன் மூலம் தன்னால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்கிற மாயையில் ராஜபக்ஸ மூழ்கியிருந்தார். சந்தேகமின்றி அவரை தேசத்தின் மீட்பராக அநேகமாக (முஸ்லிம்கள் உட்பட) அனைத்து ஸ்ரீலங்காவாசிகளும் கருதியிருந்தார்கள் மற்றும் அவருடைய இரண்டாவது பதவிக் காலத்துக்காக அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் மற்றொரு ஹீரோவான சரத் பொன்சேகாவைக் காட்டிலும் முன்னொருபோதும் இல்லாத அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வைத்தார்கள். அவர் தனது கசப்பான பாடத்தை கற்றதுடன் மற்றும் நாட்டு மக்கள்மீது அவர் காண்பித்த இனவாதம் மற்றும் சர்வாதிகார நடத்தை காரணமாக ஜனவரி 9, 2015ல் அவரது மூன்றாவது பதவிக்காலத்துக்கான முயற்சியில் பரிதபகரமாக தோல்வியுற்றார்ஃ
ராஜபக்ஸ மேலாதிக்கத்தின் உருவாக்கமான பொதுபலசேனா(பிபிஎஸ்), தேர்தலுக்குப் பின் உடனடியாக பதுங்கிக் கொண்டது ஏனெனில் ராஜபக்ஸ ஆட்சியினரால் வழங்கப்பட்டு வந்த நோயெதிர்ப்பு சக்தியை அவர்கள் இழந்ததுதான் அதற்கான காரணம். வண.ஞ}னசார தேரர் மற்றும் பிபிஎஸ்க்கு எதிரான பல்வேறு வகையான நீதிமன்ற வழக்குகளும் அவர்களை தங்கள் சட்டப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட வைத்துள்ளன. விசேடமாக துணிவான ஹோமகம நீதவானின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்குப் பின்னர் மீள் குழுவாக இணையும் அவர்களது முயற்சி பரிதாபகரமாக தோற்றுப்போனது. இது காவியுடையணிந்த தீவிரவாத பிக்குகளின் புதிய குழு உருவாவதற்கு எழுச்சி ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் இனவாத நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதன் மூலம் வெளிச்சத்துக்கு வர முயற்சிக்கிறார்கள். பாராளுமன்றில் உள்ள நம்பிக்கையற்ற ராஜபக்ஸ பிரிவினர் தலைமையிலான பொது எதிர்க்கட்சி, பௌத்த தீவிரவாதத்துக்கு உயிர்கொடுத்து மீண்டும் ஒருமுறை இனவாத துருப்புச்சீட்டை விளையாட ஆரம்பித்துள்ளார்கள். அவர்களது படுமோசமான கிருலப்பனை மே தின பேரணிக்குப் பிறகு, தாங்கள் பௌத்தர்களின் வாக்கு வங்கியை சுரண்ட முடியும் உன்ற நம்பிக்கையுடன்;;;; சிறுபான்மையினரை விசேடமாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைத் தாக்குவதற்கு பல்வேறு முன்னணியினரையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த சக்திகள் இப்போது முஸ்லிம்கள் மற்றும் இவாஞ்சலிகன் கிறீஸ்தவர்கள் ஆகியோரை இலக்கு வைத்து அவர்கள்மீது வெறுப்பை உருவாக்கும் செயலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. விசேடமாக சர்வதேச சமூகம் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (ஓ.ஐ.சி) என்பன இதைக் கவனித்து ஸ்ரீலங்காமீது கட்டுப்பாடுகளை திணிக்கும் அதன்காரணமாக நமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்கிற நம்பிக்கையில் இதை மேற்கொண்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஸ்ரீலங்கன் தொழிலாளர்களை இறக்குமதி செய்வதன் மீது ஒரு தடை பிறப்பிக்கப்பட்டால், அது பெரும்பான்மையான எமது மக்களை வீதிக்கு கொண்டுவந்துவிடும் - உண்மையில் அவர்களது அடுத்தவேளை உணவுக்கு கையேந்தும் நிலைக்கு. வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தினால் கிடைக்கும் வருமானம் ஆண்டொன்றுக்கு சுமார் 6 – 7 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப் பட்டுள்ளது.
ஏராளமான எண்ணிக்கையிலான முஸ்லிம் நாடுகள் ராஜபக்ஸ ஆட்சியினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட யுத்தத்தின்போது ராஜபக்ஸவினருக்கு ஆதரவளிக்க முன்வந்ததை இந்த பௌத்த தீவிரவாதிகள் மறந்துவிடுகிறார்கள். லிபியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் என்பன இராணுவ வன்பொருட்களை வழங்குவதில் பிரதான பாத்திரத்தை வகித்தன. எல்.ரீ.ரீ.ஈயினது ஆயுதங்களை அழிப்பதற்கு பாகிஸ்தான் விமானிகள் விமானப் பறப்பில் ஈடுபட்டதாகவும் கூடச் சந்தேகிக்கப்படுகிறது. வேறு பல அராபிய முஸ்லிம் நாடுகள் நிதி உதவிகளையும் வழங்கின. அந்த நேரத்தில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஸ்ரீலங்காவுக்கு இருந்த நண்பர்கள் முஸ்லிம் நாடுகள் மாத்திரமே. இன்று சிங்கள பௌத்த தீவிரவாதிகள் அரசாங்கத்தின் யுத்த முயற்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பை மறந்துவிட்டதுடன் அவர்களை இந்த நாட்டுக்கு வந்த வேற்றுக் கிரகவாசிகள் என்றும் முத்திரை குத்துகிறார்கள். யுத்தம் முழுவதும் அநேக முஸ்லிம் புலனாய்வு அதிகாரிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். பாதுகாப்பு படையினர் மட்டுமே அவர்களின் பங்களிப்பை அறிவார்கள், ஏனென்றால் அவர்களில் பலரும் புலனாய்வு செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாக தங்களை வெளிக்காட்ட முடியாமலிருந்தார்கள்.
ஸ்ரீலங்காவின் முஸ்லிம் குடிமக்கள் சம்பந்தப்பட்ட ஒரு சில சம்பவங்கள்  முழு முஸ்லிம் சமூகத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட குற்றம் என்ற வகையில் பிரதானப் படுத்தப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமதுவின் பொறுப்பற்ற நடத்தையை முஸ்லிம் சமூகம் முற்றாகக் கண்டித்துள்ளது, அது ஒரு முஸ்லிம் நபர் சிங்கள நாட்டின் சிங்களப் படைகளை அவமதித்ததாகக் காட்டப்படுவது, முஸ்லிம் குடிமக்கள் இந்த நாட்டுக்கு சொந்தமில்லாதவர்கள் என்பதைப் போன்ற அர்த்தம் கொள்ள வைக்கிறது. இதில் மறந்துவிட்ட உண்மை, மகிந்த ராஜபக்ஸவின் இராணுவ படை சரத்பொன்சேகா மீது நடத்திய தாக்குதல், மேர்வின் சில்வா, விமல் வீரவன்ச மற்றும் நிசாந்த முத்துஹெட்டிகேகம போன்றவர்கள் (இன்னும் பலர்) அரசாங்க அதிகாரிகள் மற்றும் படைகள்மீது நடத்திய வன்முறை போன்றவை. காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை அவர்கள் அவமதித்தது சிங்கள பௌத்தர்களின் நடவடிக்கையாக ஒருபோதும் முத்திரை குத்தப்படவில்லை. முதலமைச்சர் நஸீர் அகமதுவின் செயல் மாத்திரம் ஒரு முஸ்லிமினால் மேற்கொள்ளப்பட்ட துரோகச் செயல் என முத்திரை குத்தப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் எண்ணிலடங்கா மோதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன, மடவெல முஸ்லிம் மகாவித்தியாலத்தில் ஒரு சிங்கள ஆசிரியர் அதிபருக்கு சார்பாக பேசியதை கண்டித்து ஒரு முஸ்லிம் நபர் அலறியது ஒரு சாதாரண சம்பவம். இது மதத்துடனோ அல்லது இனத்துடனோ சம்பந்தப்பட்ட ஒன்றல்ல ஆனால் இன்று சில செய்தி மற்றும் சமூக ஊடக மேடைகள் இதை பௌத்தர்மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதல் என்று திரித்து வெளியிட்டு வருகின்றன.
மகியங்கனையில் நடைபெற்ற பெரஹர ஒன்றின்போது, முஸ்லிம் குழப்பக்காரர் சிலர் குடித்திருந்ததால் தங்களின் குடிபோதையின் மயக்கத்தில் ஒரு பௌத்த கொடியை சேதப்படுத்தி விட்டார்கள். இந்தச் சம்பவம்கூட பௌத்தத்தின்மீது இனவெறி உந்துதலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று திரித்துக் கூறப்பட்டது. இந்த இளைஞர்களைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தது கூட முஸ்லிம்கள்தான். அவர்கள் இரண்டு வாரங்கள்வரை சிறைவாசம் அனுபவித்தார்கள் இருந்தும் தீவிரவாத பௌத்தர்கள் இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமுமே பௌத்தத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றம் என முத்திரை குத்தி வருகிறார்கள்.
முஸ்லிம்களிடம் சென்று அவர்களை மிரட்டிவரும் சில பௌத்த பிக்குகள் அவர்களைக் கொண்டு கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படியான குழு ஒன்று பஹாட்டியா மாவத்த, தெகிவளையில் உள்ள மசூதி ஒன்றினைப் புதுப்பதை நிறுத்தும்படி கோரி வருகிறார்கள். இந்த கட்டிட வரைபடங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கான அனுமதி என்பன உள்ளுர் அதிகார சபையான தெகிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையினால் அனுமதிக்கப் பட்டுள்ளன. சில உள்ளுர் அரசியல்வாதிகள் இந்த பிக்குகளுடன் சேர்ந்து காவல்துறையின் பாதுகாப்புடன் இந்த மசூதிக்குள் பேரணியாக வந்து மசூதி அறங்காவலர்களிடம் கட்டிட வேலையை நிறுத்தும்படி மிரட்டியுள்ளார்கள். சட்டம் மற்றும் ஒழங்கினைப் பாதுகாத்து நடைமுறைப் படுத்தவேண்டிய காவல்துறை இந்த கண்காணிப்பு குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழங்கப்பட்ட புகார் மதிக்கப்படவில்லை.
அனைத்து இனத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்காவாசிகளும் 2009ல் யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதி நல்லிணக்கமுள்ள ஸ்ரீலங்காவை உருவாக்க வழியமைப்பார் என எதிர்பார்த்தார்கள். வருந்தத் தக்க வகையில் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்திருப்பதற்கான பேராசை காரணமாக பௌத்த தீவிரவாதிகளுக்கு  அதிக செல்லம் கொடுத்து வந்தார். சிறுபான்மை சமூகத்தின் ஆதிக்கம் கண்டு பயந்து நியாயமானளவு எண்ணிக்கையிலான சிங்கள பௌத்தர்களிடம் இப்போது இனவாதம் வேரூன்றி வருகிறது. ஸ்ரீலங்காவை ஒரு முஸ்லிம் நாடாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் மூலோபாய ரீதியில் முஸ்லிம்கள் தங்கள் சனத்தொகையை பெருக்கி வருவதாகக்கூட அவர்கள்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. முஸ்லிம்களின் சனத்தொகை விகிதம் 1891 முதல் அதே அளவிலேயே இருந்து வருகிறது. பெரும்பான்மையான பௌத்தர்கள் சமாதானத்தை விரும்பும் குடிமக்கள் என்பதில் ஐயமில்லை, ஆனால் இந்த தீவிரவாதிகளின் இருப்பின் மத்தியில் அவர்களின் குரல்கள் எடுபடாது. இந்த குண்டர்கள் சிலரின் நடத்தைகள் புத்த பெருமானின் உன்னத போதனைக்கே அபகீர்த்தி ஏற்படுத்துகின்றன.
அரசாங்கம் இந்த காளைகளின் கொம்புகளை பிடுங்கவேண்டிய அவசியம் உள்ளது. எந்த ஒரு கண்காணிப்பு குழுவையும் யாரையும் அச்சுறுத்த அனுமதிக்க கூடாது. சட்டம் மற்றும் ஒழுங்கு உரியமுறையில் பேணப்பட வேண்டும். தவறினால் நாடு பிளவுபட்ட தேசமாக மாற நிர்ப்பந்திக்கப் படும், அது அனைத்து ஸ்ரீலங்காவாசிகளும் நம்பும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பனவற்றின்மீது கடுமையான விளைவுகளை எற்படுத்தும்.
மதம் என்பது ஒரு தனிப்பட்ட விவகாரம் மற்றும் அது அப்படியே இருக்கவேண்டும். ஒரு தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒரு மதத்தை விட இன்னொரு மதத்துக்கு சலுகை காட்டக்கூடாது. ஸ்ரீலங்காவின் மக்களாகிய நாங்கள் இன, மத, சாதி, அல்லது சமய வேறுபாடுகள் அற்ற ஒரு ஸ்ரீலங்கா தேசமாக மாற முன்வர வேண்டும். இந்தப் பொறுப்பு அரசாங்கத்தினுடையது மட்டுமல்ல ஆனால் ஒவ்வொரு தனிமனிதன், சமயம் மற்றும் அரசியல் தலைவர்களைச் சேர்ந்தது. ஒவ்வொரு குடிமகனும் இந்த உன்னத இலக்கை எய்தினால் இதை எளிதாக அடைய முடியும்.
புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தும் நடவடிக்கை, ஸ்ரீலங்காவிலுள்ள அனைத்து சமூகங்களும் சம உரிமை மற்றும் தங்கள் விருப்பத்திற்கேற்ற மதத்தை பின்பற்றும் மத சுதந்திரம் என்பன இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Loading...