Thursday, 30 June 2016

பிரித்தானிய வெளியேற்றம் தொடர்பான ஸ்ரீலங்காவின் வெளிப்பாடு

           
                   -         கித்மினா ஹேவகே, சந்தல் சிறிசேன, சுவேந்திரனி ஜயரட்ன
ஒரு பதட்டமான பொதுசன வாக்கெடுப்பு மற்றும் இரு பகுதியினரதும் தீவிரமானchanta பிரச்சாரம் என்பனவற்றைத் தொடர்ந்து ஜூன் 23ல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்த முதல் நாடாக பிரித்தானியா மாறியுள்ளது. இறுதி முடிவுகளின்படி விலகும் பிரச்சாரம் ஒரு சிறிய பெரும்பான்மையால் (51.9 விகிதம்  : 48.1 விகிதம்) வெற்றி பெற்றது, மற்றும் அதற்கு சில மணித்தியாலங்களின் பின்னர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரூன் தனது பதவியை ஒக்ரோபர் 2016ல் இராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்வதில் முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார கிளர்ச்சிகள் ஏற்படும். 59 வருட இந்த முகாமின் வரலாற்றில் இது ஒரு திருப்பு முனையான கணமாகவும் மற்றும் இந்த பிளவு எந்த வகையான வடிவத்தை எடுக்கப் போகிறது என்பது அதிகம் நிச்சயமற்றதாகவும் உள்ளது மற்றும் இதன் நடைமுறைகள் காரணமாக ஐக்கிய இராச்சியத்துக்கு மட்டுமன்றி ஆனால் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகள் உட்பட அநேக வர்த்தக பங்காளிகளுக்கும் இதன் தாக்கங்கள் பிரதிபலிக்கும்.
ஒரு துயரமான பிளவு
ஐரோப்பிய ஒன்றிய கருத்துக்கணிப்பு, டேவிட் கமரூன் பிரதமாராக தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கு வருவதற்கு வழங்கிய வாக்குறுதியின் விளைவாக ஏற்பட்டது. அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை மறுசீரமைப்பு செய்வேன் என்றும் அதை 2017 இறுதிக்குள் ஒரு பொதுசன வாக்கெடுப்பிற்கு விடுவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். தொடர்ச்சியாக அதிகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மாற்றுவது, குடிவரவு பிரச்சினைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டு அதிலிருந்து வெளியேற போராடும் ஒரு பிரதேசத்துக்கு நிதி பங்களிப்பு செய்வது போன்றவற்றையிட்டு பல வருடங்களாக வாக்காளர்கள் அதிருப்தி அடைந்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினை ஐக்கிய இராச்சியத்தில் கணிசமான பிடிப்பை பெற்றதுடன் மே 2014ல் நடந்த ஐரோப்பிய தேர்தல்களில் அதிகமான வாக்குகளை வென்ற ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (யுகேஐபி) தனது பலத்தை அதிகரிக்க வழி வகுத்தது மற்றும் இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான போரிஸ் ஜோண்சன் மற்றும் மைக்கல் கோவிக் போன்றவர்களே ‘விலகும்’ பிரச்சாரத்திற்கு தலைமையேற்று அதனுடன் இணைந்து கொண்டார்கள்.
இந்த வருடம் பெப்ரவரியில் கமரூன் இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார், அது பிரித்தானியாவின் அங்கத்துவ பதங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதற்கு சாதமாக வாக்களித்தால் அது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தம,; நான்கு வருடங்களுக்கு குடியேறிகளுக்கான வேலை நலன்களை மறுப்பது மற்றும் ‘எப்போதும் நெருக்கமான ஒன்றியத்திற்கு’ விதிவிலக்கு வழங்குவது போன்ற பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இந்த ஒப்பந்தம் பற்றி விமர்சிப்பவர்கள், அது வாக்குறுதியளிக்கப் பட்டதிலும் குறைவாக உள்ளதாகவும் மற்றும் உயர்வான குடிவரவு மற்றும் பிரஸ்ஸல்சிடம் இருந்து அதிகாரத்தை மீளப் பெறுதல் போன்றவற்றை சமாளிப்பதில் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்கள். இறுதியில் அது மிகவும் சிறியதாகவும் மிகவும் காலதாமதமானதாகவும் இருந்தது.
இறுதி முடிவுகள் ஐக்கிய இராச்சியத்தின் பல பாகங்களிலும் வாக்கெடுப்பின் விளைவுகளில் ஒரு பிளவு இருப்பதை காண்பித்தன, ஸ்கொட்லாந்து(62.0மூ), வட அயர்லாந்து (55.8மூ) மற்றும் லண்டன்(59.9மூ) என்பன ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. எதிர்பார்த்தபடி 24 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவாக பெருமளவு(75மூ) வாக்களித்தார்கள், 25மூ விலகுவதற்கு வாக்களித்தார்கள். உயர்வான வருவாய் மற்றும்; உயர்மட்ட கல்வியறிவு உள்ளவர்களில் தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவாக வாக்களிக்கும் ஒரு பாரிய போக்கு காணப்பட்டது.
வெளியேறுவதற்கான விதிகள் - லிஸ்பன் உடன்படிக்கையின் உபவிதி 50ல் தெரிவிக்கப் பட்டதின்படி – மிகவும் சுருக்கமாக உள்ளன. அதன் பிரிவுகளின்படி அங்கத்துவ நாடு ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விருப்பத்தை அறிவிக்க வேண்டும் மற்றும் இரு கட்சியினரும் வெளியேற்றம் தொடர்பான உடன்படிக்கை பற்றி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். லண்டன் நகர நிதி கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகள், வர்த்தக வரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மற்றும் ஐக்கிய இராச்சிய நாடுகள் ஆகியவற்றின் நகரும் உரிமைகள் என்பனவற்றை பற்றிய விடயங்கள் இந்த உடன்படிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய சாத்தியம் உள்ளது. இந்த உடன்படிக்கை ஐக்கிய இராச்சிய பாராளுமன்றம் அதேபோல ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் என்பனவற்றின் ஒப்புதலைப் பெறவேண்டும் மற்றும் எந்த ஒரு அங்கத்தவரும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வில்லையானால் அவர்கள் உடன்படிக்கையை தடுத்து நிறுத்த முடியும்.
ஐக்கிய இராச்சியம் தொடர்பாக ஒன்றியத்தில் ஆட்சிசெலுத்தும் ஒப்பந்தங்கள், விலகும் உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தினத்தில் அல்லது விலக விருப்பம் தெரிவித்ததை அறிவித்ததில் இருந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு நிறுத்தப்படும். உண்மையில் ஐரோப்பிய ஆணைத்தின் தலைவரான ஜீன் குளோட் ஜங்கர், வெளியேறுவது என்றால் வெளியேறுவதுதான் மற்றும் ஒரு பொதுசன வாக்கெடுப்பு மூலம் ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கு முடிவெடுத்தால் அதன் அந்தஸ்து பற்றி மேலதிக பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்பட மாட்டாது என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார். ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியத்திற்குள்ள அந்தஸ்து தொடர்பாக சில கொள்கை விதிகள் வழங்கி மற்றும் அது சம்பந்தமான சந்தேகங்களை குறைப்பதற்காக பிரதமர் கமரூன் உபவிதி 50 இனை உடனடியாக அமல்படுத்தும்படி கேட்கும் சாத்தியம் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தக நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சிய அதிகாரிகள் இடையேயான விலகல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். விலகும்போது ஐக்கிய இராச்சியம் மீதமுள்ள 27 நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவேண்டிய தேவை உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் கடினமானதாகவும் மற்றும் விசேடமாக ஐக்கிய இராச்சியத்தின் பக்கமிருந்து கணிசமான அளவு அரசியல் முதலீடு வழங்கவேண்டிய தேவையும் இருக்கும் போலத் தெரிகிறது. விலகும் பிரச்சாரம் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய விதிகள் மற்றும் உற்பத்தி தரத்துக்கான தேவைகள் என்பனவற்றை விமர்சிப்பதாக இருந்தது. அதனால் ஒரு புதிய ஐக்கிய இராச்சியம் - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக உடன்படிக்கை  இந்தப் பிரச்சினையை மீண்டும் உட்புகுத்தும், ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகத்தை தொடர விரும்பினால் அநேகமாக குறைந்தபட்சம் அவர்கள் முந்தைய நிபந்தனைகளை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. 2014ல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான  ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தகப் பெறுமதி கிட்டத்தட்ட 900 பில்லியன் ஈரோக்கள் ஆகும், இதில் 53 விகிதம் ஐக்கிய இராச்சியத்தின் இறக்குமதியும் மற்றும் 48 விகிதம் ஐக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதியும் அடங்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கைகள் பற்றி ஐக்கிய இராச்சியம் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மேலதிகமாக அது இருதரப்பு அடிப்படையில் ஏனைய வர்த்தக பங்காளிகளுடனும் புதிய உடன்படிக்கைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய தேவையும் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஐக்கிய இராச்சியத்தின் மொத்த வாணிபத்தில் 15 விகிதம் மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்கள் அல்லாத மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக உடன்படிக்கைக்கு உட்படாத பிற நாடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் 52 நாடுகளுடன் விருப்பத்துக்குரிய வர்த்தக உடன்படிக்கையை (பி.ரி.ஏ) வைத்துள்ளது மற்றும் இன்னும் 72 நாடுகளுடன் உடன்படிக்கைக்காக பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆகவே ஐக்கிய இராச்சியம் 124 நாடுகளுடன் திறமையாக மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அல்லது பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டி உள்ளது. பிரச்சார சமயத்தில் பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பதற்கு சார்பான இயக்கம், உடன்படிக்கைகளின் தேவைகள் இல்லாமல் ஐக்கிய இராச்சியம் உலக வர்த்தக அமைப்பின் கீழ் (டபிள்யு.ரி.ஓ) உள்ள விதிகளின்படி தொடர்ந்தும் வர்த்தகம் செய்யலாம் எனக் குறிப்பிட்டது. எனினும் ஐக்கிய இராச்சியம் அதன் சொந்த வரி அட்டவணைகள், சேவைகளுக்கான கடமைகள் மற்றும் விவசாய மானியங்கள் எனபனவற்றை உலக வர்த்தக அமைப்பின் கீழ் கொண்டிருக்கவில்லை. அதனால், சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு உடன்படிக்கைகள் தேவையில்லாத அதேவேளை, மற்ற நாடுகளுடனான சர்ச்சைகள் மற்றும் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் என்பனவற்றில் இருந்து ஐக்கிய இராச்சிய நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக விதிகளையும் மற்றும் கட்டுப்பாடுகளை அமைக்க வேண்டிய தேவை உள்ளது.
பிரதமர் டேவிட் கமரூன் தனது பதவியில் இருந்து ஒக்ரோபர் மாதம் விலகுவதாக அறித்ததை தொடர்ந்து பொது வாக்கெடுப்பின் விளைவிற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகி உள்ளன. பிரதமரின் இராஜினாமா, காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் ஒரு தலைமைத்துவ போராட்டம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது, லண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜோண்சன் அதைக் கைப்பற்றக்கூடிய ஒருவரின் நிலையிலுள்ளார். டேவிட்கமரூன் பொதுசன வாக்கெடுப்பை நடத்தி விளையாடிய சூதாட்டம் அவருக்கு திருப்பியடித்த அதேவேளை போரிஸ் ஜோண்சன் தனது கட்சித் தலைவரின் பதவியை உடைப்பதற்காக விலகும் பிரச்சாரத்துக்கு ஆதரவாக நடத்திய சூதாட்டம் அவருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது என்று தெரிகிறது. புதிய பிரதமர்தான் ஐக்கிய இராச்சிய  வெளியேற்ற பேச்சு வர்த்தைகளுக்கு தலைமை ஏற்கவேண்டி உள்ளதால் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இந்த தலைமைத்துவ போராட்டத்தை உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.
தலைமைத்துவ போராட்டத்துக்கு மேலதிகமாக ஐக்கிய இராச்சியத்தில் பிராந்திய அரசியல் இந்த கருத்துக்கணிப்பை தொடர்ந்து  புதிய வாழ்வுரிமைக்கான குத்தகையைப் பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்திலுள்ள  32 உள்ளுராட்சி அதிகார சபைகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவது தொடர்பான பிரச்சினை சந்தேகமின்றி மீண்டும் ஆரம்பிக்கும். ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை நோக்கிய ஒரு இயக்கத்தின் சாத்தியம் பற்றி இந்த முடிவுகள் பற்றி பதிலளிக்கையில் மேலும் பிரதானப்படுத்திச் சொல்லப்பட்டது, ஸ்கொட்லாந்து முதலமைச்சர்; மற்றும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்.என்.பி) தலைவர் இதைப்பற்றி குறிப்பிடுகையில் “ஸ்கொட்லாந்து மக்கள் தங்கள் எதிர்காலத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகக் காண்பார்கள்” என்று கூறியுள்ளார். வட அயர்லாந்தின் பிரதி முதல் அமைச்சர் மார்ட்டின் மக்கினஸ் வட அயர்லாந்தையும் மற்றும் அயர்லாந்து குடியரசையும் இணைப்பதைப் பற்றியும் ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து, இதேபோல ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஒட்டு மொத்த விளைவு
இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது, செப்ரெம்பர் 2014ல் ஸ்கொட்லாந்து அதன் சொந்த சுதந்திரத்துக்காக ஒரு வாக்கெடுப்பை நடத்தியது மற்றும் மிகக் குறுகிய பெரும்பான்மையால் அது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்து இருக்க முடிவெடுத்தது. எனினும் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஸ்கொட்லாந்து என்பன கற்பனை செய்யாத வகையில் அரசியல் உணர்வுகள் கணிசமான அளவுக்கு வெவ்வேறு திசைகளில் பெருமளவுக்கு விரிசலடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நகர்வுகளின் திசைகள் உடனடியாக தெளிவாகாத அதேவேளை, அவை சுதந்திரம் கோருவதை நோக்கி நகருவதைப் போலவே தெரிகிறது.
பிரித்தானிய வெளியேற்றம் தொடர்பான ஸ்ரீலங்காவின் வெளிப்பாடு
பிரித்தானிய வெளியேற்றம் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய அங்கத்துவ நாடுகள் ஆகிய இரு தரப்பினதும் பொருளாதார செயற்பாடுகளை குறைவடைய செய்வதற்கான சாத்தியம் உள்ளது. ஸ்ரீலங்கா ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டிலுமே தங்கியுள்ளதால் இது ஸ்ரீலங்காவின் ஏற்றமதியில் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் பெரிய ஏற்றுமதி இடமாக தற்போது ஐரோப்பிய ஒன்றியம் திகழ்கிறது, ஸ்ரீலங்காவின் மொத்த ஏற்றுமதியில் 28.8 விகிதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்கிறது (3 பில்லியன் அமெரிக்க டொலர்). ஐக்கிய இராச்சியம் தனது மொத்த இறக்குமதியின் 10 விகிதத்தை (1பில்லியன் அமெரிக்க டொலர்) ஸ்ரீலங்காவிடம் இருந்து பெறுகிறது மற்றும் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 34 விகிதம் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கே செல்கிறது. இறக்குமதிகளைப் பொறுத்தமட்டில் ஸ்ரீலங்காவின் மொத்த இறக்குமதியில் ஐக்கிய இராச்சியத்தின் பங்கு 1.9 விகிதம் மட்டுமே மற்றும் அதன்படி ஸ்ரீலங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மேலதிக வாணிபத்தை அனுபவிக்கிறது. தைத்த ஆடைகள்தான்(எச்எஸ் 61 மற்றும் எச்எஸ் 62) ஸ்ரீலங்காவிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு செல்லும் பிரதான ஏற்றுமதி, ஸ்ரீலங்காவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 80 விகிதம் ஐக்கிய இராச்சியத்திற்கானது.
மேலும் ஸ்ரீலங்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை திரும்பவும் பெறுமானால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் வரை மட்டுமே நாடு இந்த சலுகையை பயன்படுத்த முடியும். அதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா ஐக்கிய இராச்சிய சந்தைகளின் முன்னுரிமை பெற விரும்பினால் அது ஐக்கிய இராச்சியத்துடன் இருதரப்பு உடன்படிக்கைக்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அதற்கு பல வருடங்கள் பிடிக்கும் சாத்தியம் உள்ளது, ஏனென்றால் எல்லா பேச்சு வார்த்தைகளும் வெளியேற்றத்துக்கு பின்புதான் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
முதலீட்டு சந்தைகளின் ஏற்ற இறக்கம் ஊடாகவும் ஸ்ரீலங்கா பாதிப்படைய நேரிடும். நாடு சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் முதலீட்டை பார்த்துக் கொண்டிருந்தால், முதலீட்டாளரின் நம்பிக்கை வீழ்ச்சியடைவதால் நிதியை தேடும் இயல்புக்கு குந்தகம் எற்படலாம். இரண்டு வருடங்களில் தங்கத்தின் விலை அதன் உச்சபட்ச விலைக்கு உயாந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்கம் மற்றும் டொலர் முதலீடுகளை தேடிப் போய்விட்டார்கள்.
தற்போதைய அரசியல் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள், பிரித்தானியா மற்றும் ஐரோப்பா என்பன பிரித்தானிய வெளியேற்றம் தொடர்பான நடைமுறைகளுக்கு தெளிவவான பாதையை வழங்க இருப்பதால், வரும் வாரங்களில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு பரிமாணத் தன்மை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானிய சந்தையின் முக்கியத்துவம் என்பன உலகளாவிய அரசியல் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தும் சாத்தியம் உள்ளது. ஆகவே பிரித்தானிய வெளியேற்றத்துக்குப் பின் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டிலும் ஏற்படவுள்ள முன்னேற்றங்களை ஸ்ரீலங்கா உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது அவசியம் மற்றும் அதற்கு ஏற்ப நாட்டிற்கு உயர்ந்தபட்ச ஆதாயம் தரக்கூடிய வகையில் கொள்கைகளை சரி செய்யவேண்டும்.
( ஸ்ரீலங்கா கொள்கைகள் ஆய்வு நிறுவனத்தில் கித்துமினா ஹேவகே மற்றும் சந்தல் சிறிசேன ஆகிய இருவரும் ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் சுவேந்திரனி ஜயரட்ன ஒரு ஆராய்ச்சி உத்தியோகத்தர்)
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 
Loading...