Tuesday, 24 May 2016

முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை--ஹசனலி

 

முஸ்லிம் தேசியம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போதிலும்,கட்சியின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால்,இந்தக் கட்சியானது,இரண்டு – மூன்று எனப் பிரிந்து கூறுபோடப்பட்டுள்ளதே தவிர, கட்சியின் இலக்கு அடையப்படவில்லை என்றும்,

முஸ்லிம்களுக்கு நியாயங்களை பெற்றுக்கொடுக்கக் கூடிய புத்திஜீவிகள் நிறைந்துள்ள அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகள் தீரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோன்று அவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர்தான், அவர்கள் சார்ந்த சமூகத்தின் தீர்வு விடயங்களை யோசிக்க வேண்டும் என்றும் இல்லை.

எனவே, உடனடியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தலைமைத்துவத்தின் கீழ், வெளியில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளை இணைத்துக்கொண்டு, செயற்படவேண்டும. முஸ்லிம் சமூகத்துக்கு அதன் தனித்துவம், அடையாளம், இருப்பு மற்றும் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். 

எனவே, வேறுபாடுகள் எதுவுமின்றி முஸ்லிம் தேசியத்தை நிறுவுவதற்காக, புத்தி ஜீவிகள் ஓரணியில் திரள வேண்டும.முஸ்லிம்கள் தொடர்பில் ஆவணங்களை தயாரித்து அரசியலமைப்பு சபையிடம் புத்திஜீவிகள் கையளிக்க வேண்டும் என மு.காங்கிரசின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.
Loading...