Friday, 6 May 2016

ஆசியாவின் சொர்க்கபூமியாக மாறும் இலங்கை


கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள உல்லாச பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதங்களை விடவும் 11.6% வீதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய ஏப்ரல் மாதத்தில் இந்த நாட்டிற்கு வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 136,367 என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதத்தில் அதிகளவான பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 25,890 ஆகும்.
சீனாவிலிருந்து 18,927 சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கமைய இந்த நாட்டிற்கு வந்துள்ள பயணிகளில் 1/3 வீதம் இந்தியா மற்றும் சீனாவில் இருந்தே வருகை தந்துள்ளனர்.
வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ள மொத்த பயணிகளின் எண்ணிக்கை 721,185 ஆகும். அவர்களில் இந்திய நாட்டை சேர்ந்த 111,514 பேரும் சீனா நாட்டவர்கள் 96,886 பேரும் வருகை தந்துள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் சுற்றுலா வர்த்தகத்தில் பெற்றுக்கொண்ட முழுமையான வருமானம் 969.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 22% வீத அதிகரிப்பாகும்.
கடந்த வருடத்தில் சுற்றுலா துறையில் கிடைத்துள்ள மொத்த வருமானம் 2.98 அமெரிக்க டொலர் பில்லியனாகும். 2014ஆம் ஆண்டில் 2.43 பில்லியன் பெறுமதி என பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வருடத்தில் 2.2 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதுடன், அதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இதேவேளை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளிருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
Loading...