Wednesday, 6 April 2016

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதனால் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 
Loading...