Wednesday, 27 April 2016

எமக்கான யாப்புத்திருத்தமே எமக்கு முதல் பணி !

SLMC கட்சியின் உட்பூசல் என்பது அது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடைய  காலத்தில் சேகுஇஸ்ஸதீன் ஆரம்பித்ததில் இருந்து இன்று ஹசன்அலி வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவார்கள் அதற்க்கான  காரணங்களை இதுவரையும் அவர்களுக்கு வாக்களித்து பதவியில் அமர்த்திய மக்கள் முன் உண்மையான விளக்கங்களை கூறுவதும் இல்லை. அவர்களின் அரசியல் இருப்பையும் ஸ்திரத்தன்மையையும் தக்கவைததுக் கொள்வதற்காக அவர்களுக்கான ஆதரவாளர்களை ஒன்றிணைத்து  மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் பாசரையில் வளைந்தவர்கள் என்று  கெளரவத்துடன் கூறிக் கொண்டு தங்கள் அரசியல் இருப்பையும் பதவியையும் பாதுகாத்துக்கொள்ள புதிய கட்சிகளை உருவாக்கினார்களே தவிர அந்த மாமனிதரால் உருவாக்கப்பட்ட கட்சியை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப துண்டு துண்டாக்கி சமூக ஒற்றுமையை சீர் குளைப்பதில் யாருடைய முன்மாதிரிகளை பின்பற்றினார்கள் என்பது இது வரையும் தம் சமூகத்தில் கேள்விக் குறியான விடயம்தான்.

 அந்த வரலாற்றுப் பின்னணியுடன் பார்க்கும் போது SLMC கட்சிக்குள் உட்பூசல்கள் என்பது புதிய விடயமல்ல தலைவரின் மறைவுக்குப் பின்பு தொடராக சீசன் காலங்கள் போல் புதிய அரசு ஆட்சி அமைத்தால் SLMCக்குள்  பிளவும் உட்பூசளும் ஏற்படுவது விதியாகி விட்டது. இந்த பிளவுகளின் காரணங்களைப் பார்த்தல் தனக்கான பதவியும் அந்தஸ்த்தும் இலாபமும் சரியாக கிடைக்கவில்லை என்றால் தனி நபராக சென்று அரசுடன் பேச்சுக்களை நடாத்தி தனக்கான இலபங்களை பெற்றுக்கொண்டு கட்சியை விட்டு
பிரிந்து சென்று புதிய கட்சிகளை ஆரம்பித்த வரலாறுகள் தான் உண்டு இதற்கு
நிறையவே உதாரனங்கள் இருக்கின்றது .அந்த சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கும்போது இதுவும் பதவிக்கான  உட்பூசலாகவே இருக்கின்றது கடந்த தேர்தல் வெற்றியால் கிடைத்த இரு தேசிய பட்டியல் பதவியை பங்கு வைப்பதற்கு முன்  அந்த பதவியை தருவதாக கட்சியின் பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அதிகம் இப்போது இருப்பது ஒரு வெற்றிடம்தான் அதை பிரித்து பங்கு போடுவதில்தான்  உட்பூசலின் ஆரம்பம் வெடிக்கத் தொடங்குகிறது.

 இதனால் கட்சியின்  சட்ட யாப்பு குர்ஆன் ஹதீஸ் என்று மக்கள் முன் குறிப்பிட்டாலும்  அதில் உள்ள சட்டங்களை எல்லாம் மீறி தலைமை என்ற தனிநபர் அதிகாரமாக இருப்பதால் பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அதனை தீர்ப்பதற்கான வழிமுறை காண்பதை விட்டு விட்டு கட்சியின் யாப்பை தூக்கிக்கொண்டு நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையாளரையும் நாடுவதனால் (அதனால் முஸ்லிம் சமுகத்திற்கு அந்நிய சமுகத்தால் ஒரு வகையான பார்வையும்) கட்சிக்கான தடையும் இடைக்கால உத்தரவும் என நீதிமன்றம் தேர்தல் திணைக்களம் அலைந்து திரிந்து பிரச்சனையை பெரிதாக்கி மக்களை ஏமற்றுகின்ர விடையம் SLMCக்கு புதிதல்ல.

ஆகையால் மறந்த தலைவரின் பாசறையில் வளந்தவர்கள் என்று கூறிக்
கொண்டு கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்ட
அனைவரும் ஒரு மேசைக்கு வந்து இந்த பிரிவுகளுக்கும் உட்பூசலுக்கும்
முக்கிய காரணம் என்ன? யாப்பிள் உள்ள தலைவரின் அதி உச்ச அதிகாரம் என்ன ?
இந்த அதிகாரத்தால் எமது சமுகத்திற்கு ஏற்பட்ட சாதக பாதகம் என்ன ? இந்த
யாப்பானது எல்லா காலத்திற்கும் பொருத்தமா ? அல்லது மீள் பரிசிலித்து
திருத்தங்களை கொண்டு வந்து அதிகாரங்கள் எப்படி எவ்வாறு பிரிக்கப்பட
வேண்டும் என்ற குறை நிறைகளை கண்டு எமக்கான சட்ட யப்பானது அல் குர்ஆனில் கூறப்படுகின்ற சட்ட வாக்க அதிகாரங்கள் தலைமைத்துவ பண்புகள் கூட்டுத் தலைமைத்துவ கலந்தாலோசனை முறைகள் என்ற இஸ்லாமிய பண்புகளைக்கொண்ட புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரையும் ஒன்றிணைக்க
வேண்டும் .

நாட்டின்  அரசியல் யாப்பு சீர் திருத்தம் சம்மந்தமாக மகா நாடுகளும் செயலமர்வுகளும் நடத்தி மக்களை ஏமாற்றுவதை விட்டு விட்டு தன் கட்சிக்குள் இருக்கின்ற அடிப்படை பிரச்சைனைகள்,கட்சியின் யாப்புத்திருத்தம், வாக்குறுதிகளை செயற் படுத்துவதற்க்கான உண்மைதன்மை வெளிப்படை தன்மையாக செயற்பட அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் இன்றைய மக்களின் எதிர்பார்ப்பகும்..முகம்மட் அன்சார்
காத்தான்குடி


Loading...