Wednesday, 13 April 2016

வடக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு!

வடக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு!
வடக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு!
வடக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு அவசர அழைப்பு அனுப்பியுள்ளார். இதனடிப்படையில் இந்தச் சந்திப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. 

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களால் மிகக் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 
வடக்கு மாகாணத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்குபற்றவுள்ளார். கொழும்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தச் சந்திப்பு நடைபெறும். 

எனவே, உறுப்பினர்கள் தமக்குத் தெரிந்த காணிப் பிரச்சினைகள் தொடர்பான விபரத்தை எனக்கு தந்தால், ஜனாதிபதியுடன் பேசுவதற்கு இலகுவாக இருக்கும் என்று குறிப்பிட்டார். 

வடக்கில் காணி விவகாரம் தற்போது சர்சைக்குரியதாக மாறியுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரால் அடையாளப் படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 108 இடங்கள் சுவீகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணி சுவீகரிப்புக்கு முன்னோடியாக நில அளவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை அரசியல்வாதிகள் பொதுமக்களுடன் இணைந்து தடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக யாழ்.மாவட்ட அரச அதிபரை, அலுவலகத்தினுள் பூட்டி நேற்றுமுன்தினம் போராட்டமும் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே, ஜனாதிபதியால் இந்த அவசர சந்திப்புக்கான அழைப்பு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Loading...