Sunday, 24 January 2016

மாகாண சபை உறுப்பினரின் காட்டமான உரை

முஹம்மட் வஹாப்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களுக்கு  தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை தருவதாக அப்போது சத்தியம் செய்து வாக்களித்து வாக்குமாறினார். இதன் விளைவாகவே இன்று கட்சி நீதிமன்றம் வரை சென்று பேசுபொருளாக மாறியிருக்கிறது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கட்சியின் இன்றைய புதிய நகர்வும்இ பொய்ப்பிரச்சாரங்களும் தொடர்பாக கட்சிப் போராளிகளுக்கு எடுத்துக் கூறும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இத் தேர்தலுக்கு முன்பிருந்தே கட்சிக்கு ஓர் கொள்கையிருந்தது.அது பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றால் கிடைக்கின்ற தேசியப்பட்டியல் கட்சியின் செயலாளருக்கே வழங்கப்பட வேண்டும் என்பதாகும். அந்த அடிப்படையிலேயே தலைவர் றிஷாட் ஹமீட்டிற்கு தேசியப் பட்டியல் தருவதாக வாக்களித்தார். அம்பாறை முழுக்க பிரச்சாரம் செய்தார். வன்னியைச் சேர்ந்த முஸலி பிரதேச சபை தலைவர் யஹ்யா பாயை அழைத்து 10 நபர்கள் முன்னிலையில் 20 கண்களை சாட்சியாகக் கொண்டு தேசியப் பட்டியல் தருவதாக சத்தியம் செய்தார். எனக்கும் தேசியப் பட்டியல் தருவதாக கூறினார். ஆனால் கட்சிக்குக் கிடைத்தது ஒரு தேசியப் பட்டியல் மாத்திரமே.

இந்தத் தேசியப் பட்டியலை மிக நிதானமாக நீதியாக கட்சியினுடைய உயர் பீடத்தை அழைத்து கலந்து ஆலோசனை செய்து தீர்க்கமான முடிவு எடுத்திருந்தால் இப்பிரச்சினையானது மிக இலகுவாக முடிந்திருக்கும். இதில் தலைமைத்துவம் சரியாக செயற்படவில்லை. இதைவிடுத்து கட்சிச் செயலாளரை நீக்கி நீதிமன்றம் செல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. எமது கட்சியானது இன்றைய நிலையில் பல சவால்களைக் கொண்டு காணப்படுகின்றது.

கடந்த 2005 ம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வெளியேற்றத்துடன் நானும் வெளியேறினேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவறுகளை மக்கள் மத்தியில் சுட்டிக் காட்டுகின்ற அந்தப் பணியில் அப்போது தலைவர் ரிஷாட்டுடன் ஈடுபட்டேன். 2005ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளை பெற்று எதிர்கட்சித் தலைவரானேன். அக் காலப் பகுதியில் ஸ்ரீ.ல.மு.கா. இன் தவறுகளை தைரியத்துடன் தலைமையுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தேன்.
கட்சி சிறிதாக இருந்தாலும் அப்போதைய நிலையில் தலைவர் ரிஷாட்¸ அமைச்சர் அமீர் அலிஇ செயலாளர் நாயகம்வை.எல்.எஸ். ஹமீட்இ என்.எம் சஹீட் போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் வெற்றி¸ வளர்ச்சிக்காக பாடுபட்டேன்.

அதை தொடர்ந்து 2008 ம் ஆண்டு நடை பெற்ற மாகாண சபைத் தேர்தலில் எனது ஊரில் எவரும் முன் வராத நிலையில் கட்சியினுடைய நிர்ப்பந்தந்தின் பேரில் மாகாண சபையில் போட்டியிட்டேன் வெற்றியும் பெற்றேன்.
அக்காலப் பகுதியில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைவு பலமாக இருந்ததால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை கிழக்கு முதலமைச்சராக்கும் நோக்கில் இறக்கி மாவட்டத்தில் 3 மாகாண சபை உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் போராட்டத்தில் வெற்றியும் பெற்றோம். இது கிழக்கில் கட்சிக்கு கிடைத்த வெற்றி. இந் நிலையில் முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லாவிற்கு மறுக்கப்பட்டிருந்ததால் மாகாண சபையில் நடுநிலையாக செயற்பட அறிவித்தோம்.

இவ்வாறான சூழ்நிலையில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னோடு சுகாதார அமைச்சர் பதவியை பொறுப்பெடுக்குமாறு கூறினார். அதற்கு நான் மண்னிக்க வேண்டும் ஜனாதிபதி அவர்களே இது பற்றி எனது தலைமையுடன் பேசுங்கள் என்றேன். அதன் பின்னரே ஹிஸ்புல்லா அவர்களுக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதை நான் ஏன் சுட்டிக் காட்டுகின்றேன் என்றால் என்னை சிலர் பதவி ஆசை கொண்டவன் எனக் கூறுகின்றனர். எனக்கு பதவி ஆசை இல்லை அவ்வாறு இருந்திருந்தால் நான் அன்றே சுகாதார அமைச்சராகியிருப்பேன். நான் அவ்வாறு செய்யாததன் காரணமாக கட்சியின் நன் மதிப்பையும்¸பாராட்டுக்களையும் பெற்றேன்.

அதை தொடர்ந்து அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியதன் காரணமாக ஏற்பட்ட சுகாதார அமைச்சர் வெற்றிடத்திற்கு சகோதரர் ஜவாகிர் ஸாலியை நியமிக்க வேண்டும் என்ற கோசம் எழும்பியது. அக்காலப் பகுதியில் அமைச்சர் அமீர் அலி ஜவாகிர் ஸாலியினுடைய அரசியலில் நம்பகத் தன்மையில்லை எனக் கூறினார்.

அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவன் நான். கல்குடா மக்களில் சிலர் மாகாண சபை உறுப்பினர் சுபைர் 2 தடவை கல்குடா மண்ணின் பாராளுமன்ற வெற்றிக்கு பங்களிப்பு செய்ததால் அவருக்கே இப் பதவி வழங்க வேண்டும் என்ற கோசம் எழும்பினர். இதன் மூலம் கிடைக்கப்பெற்ற சுகாதார அமைச்சினால்; 2 வருடங்கள் கிழக்கு மாகாணத்தில் கட்சியின் வளர்ச்சிக்காகவும்¸ மாகாண அபிவிருத்திக்காகவும் பாடுபட்டேன். அத்தோடு அந்தக் காலத்தில் கல்குடாவில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை முழுமையாக நிரப்பியதுடன்¸ எனது பங்களிப்பை கல்குடா மக்களுக்கு முழுமையாக வழங்கி இருந்தேன். இதை அம் மக்களும் நன்கறிவர். அதே போன்று கிழக்கிற்கு வெளியிலும் கட்சியின் வளர்ச்சிக்காக பங்களிப்புச் செய்தேன்.

ஆனால் அண்மையில் எனது மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதி எனது வளர்ச்சியை தாங்க முடியாமல் என்னை ஓரங்கட்ட முயற்சி செய்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தலைமையிடம் நீதி வேண்டினேன். எனக்கு நடந்த அநீதிக்கு கட்சியிலுள்ள உயர் பீட உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்கள். நான் அதை என்றும் மறக்கவில்லை. ஆனால் தலைவர் தனி நபரை திருப்திப் படுத்த என்னை கட்சியை விட்டு வெளியேற்றினார். இதன் உண்மைத் தன்மையை கட்சியினுடைய செயலாளர் நாயகம்வை.எல்.எஸ். ஹமீட் பத்திரிகையின் வாயிலாக விவரமாக கூறியதை அறிந்திருப்பீர்கள். பதவி ஆசையினால் கட்சியை விட்டு வெளியேறியதாகவே சிலர் குறிப்பிடுகின்றனர். அதில் எவ்வித உண்மையுமில்லை.

கிழக்கு மாகாண சபையில் புதிய முதலமைச்சர் தெரிவு வந்த போது தற்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் என்னுடைய உறவினர்¸ ஊரவர் அவ்வாறு இருந்தும் தலைமைத்துவத்தின் அனுமதியில்லாமல் கைச்சாத்திட முடியாது என உரக்கச் சொன்னவன் நான். இதனால் நான் வகித்த கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பதவி கூட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் கிழக்கு மாகாண முதலமைச்சரால் பறிக்கப்பட்டது.

என் மீது சிலர் முகநூலில் அவதூறு பேசுகின்றார்கள். இந்த முக நூல் அவதூறுகளெல்லாம்; எங்கிருந்து வருகின்றது¸இதற்கு நியமிக்கப்பட்ட நபரும் எனக்குத் தெரியும். அதற்காகத்தான் அவர்களுடைய மரணத்தறுவாய் மிகக் கடினமானதாக இருக்கும் என அறிக்கை விட்டு இருக்கின்றேன்.

கட்சிக்கு கிடைத்த 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி ஆராயும் பொழுது அமைச்சர் ரிஷாட் வெறும் 26¸000வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார். அதிலும் யஹ்யா பாயினுடைய வாக்கு¸ தமிழ் மக்களின் வாக்கு¸ வில்பத்து பிரச்சினை¸ பொதுபால சேன பிரச்சினை போன்றவைகளினாவேயே தப்பி பிழைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் அமீர் அலி தமிழர்களின் 127வாக்குகளினால் தப்பிப் பிழைத்தார். இதே போன்று கிண்ணியாவிலும்¸ அநுராதபுரத்திலும் வேட்பாளர்கள் ஐ.தே.கட்சியின் முகத்தைக் காட்டி வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் கட்சிக்கு கிடைத்த 4 சீட்டுக்களும் உறுதிமிக்கது என்று எந்தப் போராளியும் கூறமுடியாது. மீண்டும் தேர்தல் வந்தால் கட்சியின் நிலைமை என்ன என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் சொல்லி இருக்கின்றார் வாக்கும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களின் பாசறையில் வளர்ந்தவர்கள் நாங்கள். சில கேவலமான அரசியல் வாதிகள் முகநூலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றார்கள். இவர்கள் மிக விரைவில் மக்களால் தோற்கடிக்கப் படுவார்கள். உண்மை எப்போதும் ஜெயிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Loading...