Sunday, 24 January 2016

வடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு

வடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு
வடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு
வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு , சட்டவிரோத மற்றும் குடியேற்றம் குறித்து ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட குழுவிற்கு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கிங்ஸ்லி பெர்ணான்டோ தலைமை வகிக்கின்றார். காணி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்களும், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதானிகளும் இந்தக் குழுவில் அங்கம் வகித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் என்பன குறித்து இந்த விசேட குழுவினால் ஆரயப்படவுள்ளது. மேலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் குறித்தும் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Loading...