Tuesday, 3 November 2015

கொழும்பில் இருந்து நாடு கடத்தப்பட்ட மாலைதீவு இளைஞர்


மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் பயணித்த படகில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். மாலைதீவு தூதரகம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு எழுத்து மூலம் விடுத்த கோரிக்கையை அடுத்து, நேற்று முன்தினம் இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவின் நெதிமாலை பகுதியில் உள்ள வீட்டிலிருந்து 18 வயதுடைய அஷ்ரப் மொஹம்மட் என்ற குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

நேற்று காலை 7.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் மாலைதீவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நெதிமாலையில் உள்ள வீடொன்றில் அஷ்ரப்பும் அவரது தாயார் மற்றும் காதலி ஆகியோர் தங்கியிருந்துள்ள நிலையிலேயே நேற்று முன்தினம் அங்கு சென்ற பொலிஸார் தலைமையிலான குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அஷ்ரப்பை கைது செய்து நாடு கடத்தியதாக குடிவரவு–குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.


Loading...