Monday, 2 November 2015

பொன்னான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது-- சந்திரிகா













அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு பொன்னான சந்தர்ப்பம் உருவாகியள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.பிரதான அரசியல் கட்சிகள் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டுவது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடிய சாத்தியம் எழுந்துள்ளது.இந்த நிலைமையானது மிகவும் ஆரோக் கியமானது என்றார்
Loading...