Wednesday, 4 November 2015

அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினரே முதற்கட்டமாக விடுவிக்கப்படுவர்: யாழில் நீதி அமைச்சர்

அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினரே முதற்கட்டமாக விடுவிக்கப்படுவர்: யாழில் நீதி அமைச்சர்
அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினரே முதற்கட்டமாக விடுவிக்கப்படுவர்: யாழில் நீதி அமைச்சர்
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் முதற்கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாகவும், ஏனையவர்களின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுக்கும் எனவும், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணத்திற்கு நேற்று காலை விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் முன்னதாக நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிப்பட்டார். அதனை தொடர்ந்து யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நீதி அமைச்சரிடம் கேள்வியொன்றை எழுப்பியபோது அதற்கு பதில் அளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Loading...