Sunday, 8 November 2015

வீட்டுத்திட்ட குழப்பங்களுக்கு றிசாட் பதியுதீனே பொறுப்பேற்க வேண்டும்

வீட்டுத்திட்ட குழப்பங்களுக்கு றிசாட் பதியுதீனே பொறுப்பேற்க வேண்டும்
வீட்டுத்திட்ட குழப்பங்களுக்கு றிசாட் பதியுதீனே பொறுப்பேற்க வேண்டும்
கடந்த கால வீட்டுத்திட்ட குழப்பங்களுக்கும், முறைகேடுகளுக்கும் அப்போதைய புனர்வாழ்வு அமைச்சரும் தற்போதைய அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே இதனைத் தெரிவித்தார். 

கடந்த காலத்தில் இந்திய வீட்டுத்திட்டம் வடமாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டது. இது புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு இன்றைய அமைச்சரும் முன்னாள் புனர்வாழ்வு அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் பொறுப்பாக இருந்தார். அந்த காலப்பகுதியில் வீட்டுத் திட்டம் வழங்குவதில் பல குறைபாடுகள், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது. சிலர் பல வீடுகளை கூட பெற்றுள்ளார்கள்.

புள்ளித்திட்டம் அடிப்படையில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் புள்ளித் திட்டம் கூட தவறானதே. பாதிக்கப்பட்ட பலருக்கு வீடுகள் வழங்கப்படாது அவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறான குழப்பங்களுக்கு அப்போதைய புனர்வாழ்வு அமைச்சர் அவர்களே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாத வகையில் சாதி, மத, இன பேதமின்றி மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வடமாகாண புனர்வாழ்வு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.  இதேவேளை, அமைச்சர் ஒருவர் வீட்டுத் திட்ட மோசடிகளுக்கு காரணம் எனக் கூறுகிறீர்கள். அரச அதிகாரிகள் கூட புளியங்குளம் வடக்கில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறதே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது,

கடந்த காலத்தில் வீட்டுத் திட்டம் வழங்கலின் போது அரசியல் ரீதியாகவும், அரச நிர்வாக ரீதியாகவும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் கூறுகின்றார்கள். இவ்வாறான குறைபாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது இருக்கும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
Loading...