Thursday, 29 October 2015

ஊழல் மோசடி விசாரணைகள் குறித்து நீதி அமைச்சரிடம் ஜே.வி.பி கேள்வி?

ஊழல், மோசடி விசாரணைகள் குறித்து நீதி அமைச்சரிடம், ஜே.வி.பி கேள்வி எழுப்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதி அமைச்சர், காவல்துறை மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோரிடம் கேள்வி எழுப்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவன்ட் கார்ட் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் பற்றி கேள்வி எழுப்பப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் தமது கட்சி வருட ஆரம்பத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுவரையில் இந்த விசாரணைகள் பூர்த்தியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளுக்கான கால தாமதத்தை அறிந்து கொள்ள வேண்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது கட்சியின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைகள் கால தாமதமடைவதற்கு நீதி அமைச்சரே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


Loading...