Tuesday, 27 October 2015

சோளம் – பட்டாணி ரைஸ்

சோளம் – பட்டாணி ரைஸ்

தேவையான பொருட்கள்:

1. பாஸ்மதி அரிசி – 1 கப்
2. உதிர்த்த சோளம் – 1 கப்
3. பச்சைப் பட்டாணி – 1 கப்
4. மிளகாய்த்தூள் – 1 தே.க
5. சாம்பார் பொடி – 1 தே.க
6.மசாலா தூள் – 1/2 தே.க
7. மஞ்சள்தூள் – 1/4 தே.க
8. எலுமிச்சை சாறு – 1 மே.க
9. நெய் அல்லது எண்ணெய் – 2 மே.க
10. கடுகு, சீரகம் –  1/2 தே.க
11. கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
• பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும்.
• பிறகு, சோளம், பட்டாணி, அரிசி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, கரம்மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
• நன்கு வதங்கியதும், 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடவும். 3 விசில் வந்ததும், வெந்த சாத கலவையைக் கடாயில் கொட்டி எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடம் கிளறி, தயிருடன் பரிமாறவும்.
Loading...