Monday, 19 October 2015

ஐ.நா தீர்மானத்தினை எதிர்த்து இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம்










அண்மையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளின் சிலரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தப்படும். நாடு முழுவதிலும் இவ்வாறான தெளிவுபடுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் என அ வர் குறிப்பிட்டுள்ளார். தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ. குணசேகர மற்றும் டலஸ் அழப்பெரும உள்ளிட்ட தலைவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், ஜெனிவா தீர்மானத்தினை சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்வதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...