Thursday, 29 October 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமே எமது தீர்வு தங்கியுள்ளது தமிழ் அரசியல் கைதிகள்














தமது விடுதலை விடயத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் பொறுமை காக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.

தமது விடுதலை தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி தீர்வு அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தனின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டேஇ தமிழ் அரசியல் கைதிகளும் தமது 6 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

எனினும் நேற்று முன்தினம் பிரதமருடன் அமைச்சர் மனோ கணேசன் மேற்கொண்டதாக கூறப்படும் சந்திப்பின்போதுஇ அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
Loading...