Thursday, 29 October 2015

நீதிமன்ற உத்தரவை மீறிய ஐ.ஆர்.சி. காரர்களுக்கு சட்ட நடவடிக்கை

கொழும்பிலுள்ள பதிவு செய்யப்பட்ட 110 குற்றவாளிகளுக்கு (ஐ.ஆர்.சி.) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்பை அதிகமானோர் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகைப்படம், விரல் அடையாளம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக இவர்களுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இவ்வாறு அழைப்பை ஏற்று 23 பேர் மாத்திரமே வருகை தந்திருத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பைச் சூழவுள்ள பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளாக காணப்படும் 610 பேரில் 110 பேர் நேற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் அதிகமானோர் நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்துள்ளனர்.

இவ்வாறு நீதிமன்ற உத்தரவைப் மீறியுள்ளவர்கள் தொர்டர்பில் அடுத்துவரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் விரல் அடையாளம் பெறப்படக் கூடியதான குற்றத்தை இரு முறை செய்து, நீதிமன்றத்தினால் தண்டனை பெற்றவரும், அதில் ஒருமுறை சிறைத்தண்டனை அனுபவித்தவரும், பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Loading...