Thursday, 29 October 2015

முன்னாள் அமைச்சரிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை











ஸ்ரீ லங்கா கேடரின் கம்பனியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன நேற்று சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. ஜனாதிபதி ஆணைக் குழுவுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்விசாரணைகள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அறையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது


Loading...