Monday, 24 August 2015

நல்லாட்சிக்கு அர்பணித்த ஆசாத் சாலிக்கு கௌரவத்தை உரியமுறையில் வழங்குங்கள்


எமது இலங்கை திருநாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சியை தற்போது சிறந்த முறையில் முன்னெடுக்க நடவடிக்கைகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் முஸ்லிம் மக்களின் வாழ்வியலுக்கும், உரிமைகளுக்கும், பகிரங்கமாக குரல் எழுப்பி வந்த எம் சமூக இளைஞர் சமுதாயத்தின் தளபதியாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில்  அதிக செல்வாக்கு நிறைந்த ஒருவரான மத்திய  மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஆசாத் சாலி அவர்களுக்கு எமது நல்லாட்சியில் உரிய இடத்தை வழங்க எமது நல்லாட்சி அரசு மறந்து விட்டது என்பது  மனவேதனையான ஒரு விடயமாகும்.

கடந்த காலங்களில் சர்வதிகார போக்குடைய மஹிந்த அரசுக்கும், இனவாதத்தையும் மதவாத்தையும் சிறுபான்மையர் சமுகத்தின் மீது வெச ஜந்துக்கலாக கொப்பளித்த பொதுபல சேனாவிட்கும் எதிராக தைரியமாக தனது எதிர்ப்பையும் அவர்களுக்கு எதிராக, மிகப் பகிரங்கமாக  உயிரச்சுருத்தலையும் தாண்டி குரல் கொடுத்ததன் காரணமாக அன்று மஹிந்தவின் அரசால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டு சிறைவாசமும் சென்றார்.

மட்டுமின்றி நாட்டின் சாபக் கொகேடான மஹிந்தவின் கொடூர ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்க காரணமாக இருந்தவர்களில் சகோதரர் ஆசாத் சாலி அவர்கள் பாரிய பங்காற்றி அதில்  வெற்றியும் கண்டார்.இன்று எம் நாட்டில் மலர்ந்துள்ள  நல்லாட்சியின் பங்குதாரர்களில் சகோதரர் ஆசாத் சாலியும் ஒருவர் என்பதில் யாரும் மறுப்புத் தெரிவித்து விட முடியாது.


முஸ்லிம் சமூகத்தின் சகல பிரச்சினைகளின் போதும் முகம் கொடுத்து  நடு வீதியில்  இறங்கி போராடியவர். என்ற வகையிலும் உள்நாட்டு ,வெளிநாட்டு ஊடகங்கள் வரை துணிந்து சென்று மக்களின் பிரச்சினையை தீர்க்க வழிவகுத்தவர்களில் முதன்மையானவர் என்கின்ற வகையிலும் இவரது குரல் தொடர்ந்தும் எம் சமூக விடுதலைக்காக ஒலிக்க வேண்டும் என்பதினாலும் குறிப்பாக பேசா மடந்தைகளாக இருக்கின்ற முஸ்லிம் தலைமைத்துங்களின் மத்தியில் எமது உரிமைகளுக்காக இவர் தொடர்ந்தும் இவர் அரசியலில் இருக்க வேண்டிய தேவையை உணர்த்துகின்றது.

மேலும் அன்று எமது நாட்டில் மஹிந்த அரசின் சால்வைக்குள் ஒழிந்துகொண்டு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோதும் முஸ்லிம் மக்களின் உரிமைகள்,உடமைகள் நசுக்கபட்டபோதும் மௌனமாக இருந்தவர்கள் இப்போதும் தனது பதவிகளை காக்கவே இந்த நல்லாட்சியில் இணைத்துள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.


கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டால் சிலரின் அரசியல் இருப்பு கேள்விக்குறி ஆகிவிடும்  என்பதை நன்றாக உணர்ந்து அவரை இந்த பொதுத்தேர்தலை சந்திக்க முடியாமல் தடுத்து தேசியபட்டியல் கொடுப்போம் எனும் சதி வலையை பின்னியவர்கள்  மனசாட்சி உள்ளவர்களாக  இருந்தால் கடந்த காலங்களில் சமூகத்திற்காக அவரின் குரல் ஓங்கியபோது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சிந்திக்க  கடமை பட்டுள்ளீர்கள்.

சகோதரர் ஆசாத் ஸாலி அவர்களுடன் தேர்தலில்  போட்டியிட்டு தம்மால்  வெற்றியை அடைய முடியாது என்பதை நன்றாக அறிந்த கண்டி மாவட்ட  முஸ்லிம் வேட்பாளர்கள் அவருக்கு பின்னிய வலையால்  கை சேதப்படுவது முஸ்லிம் சமூகமே இதனை நன்றாக இந்த நல்லாட்சி குழுவும் அறியாமலில்லை சில வேளை இன்று மஹிந்த ராஜபக்ஷ வெற்றி கொண்டு ஆட்சியை  பெற்றிருந்தால்  ஆசாத் சாலி உயிருடன் இருந்திருப்பாரா? என்பது கேள்விக் குறிதான்


எனவே இவ்வாறான தைரியமான முதுகெலும்புள்ள திறமையான   எமது இளம் தலைமுறையின் தளதிபதி சகோதரர் ஆசாத் சாலியின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்  ஆனால் சில வங்குரோத்து அரசியல் வாதிகளின் சூழ்ச்சிகளுக்குள் நல்லாட்சியும் சிக்குன்டு போய்விட்டதோ என்ற கேள்வியும் சமீப கால நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றது.


எது எவ்வாறானாலும் சகோதரர் ஆஸாத் சாலி அவர்களை கௌரவப்படுத்த வேண்டிய கடப்பாடு நல்லாட்சிக்கு உண்டு என்கின்ற வகையில் முஸ்லிம் சமூகம்  செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவியையாவது கொடுத்து அவரையும் முஸ்லிம் சமுகத்தையும் கௌரவ படுத்த வேண்டும் என  நல்லாட்சிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

தேசியப் பட்டியல் விடயத்தில் ஏமாற்றப்பட்ட  அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவியையாவது தந்து கௌரவபடுத்துமாறு எமது முஸ்லிம் சமுகத்தின் சார்பில் இந்த கௌரவ அரசையும் நல்லாட்சியின் பங்காளிகளையும் வினையமாக வேண்டி கொள்கிறேன்.

என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் மீசான் அறக்கட்டளை நிறுவுனருமான அல் -ஹாஜ்  ஹுதா உமர் தமது வேண்டுகோளை விடுத்தார்.

Loading...