Sunday, 23 August 2015

கட்சி கோரினால் பதவியை இராஜினாமா செய்யத் தயார்










ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யி­னூ­டாக எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள தேசி­யப்­பட்­டியல் மூலமான பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வ­மானது ஒரு குறு­கிய காலத்­துக்­கா­னது எனத் தெரி­விக்கும் மு.கா.வின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் கட்­சித்­த­லைமை கோரு­கின்ற பட்­சத்தில் அப்­ப­த­வியை இரா­ஜி­னாமாச் செய்­வ­தற்கும் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் கூறினார்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குறித்து எழுந்­துள்ள சர்ச்சை தொடர்­பாக அவர் கருத்­துத்­தெ­ரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் கூறு­கையில் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்கு தேசி­யப்­பட்­டி­ய­லூ­டாக இரண்டு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் கிடைத்­துள்­ளது. இந்­நி­லையில் குறு­கிய காலப்­ப­கு­திக்குள் நாட­ளா­விய ரீதி­யி­லி­ருந்து அப்­ப­த­விக்கு யாரைத்­தேர்ந்­தெ­டுப்­பது என்­பது கட்­சிக்கு சிக்கல் நிலையை தோற்­று­வித்­தது.

காரணம் தேர்தல் செய­லகம் தேசி­யப்­பட்­டியல் விப­ரங்­களை அவ­ச­ர­மாக சமர்ப்­பிக்­கு­மாறு கோரி­யி­ருந்­த­மை­யாகும். இந்­நி­லையில் கட்­சித்­த­லைமை நாட­ளா­விய ரீதி­யி­லி­ருந்து அப்­ப­த­விக்கு ஏற்ற தகு­தி­யான ஒரு­வரை தேர்ந்­தெ­டுக்கும் வரை தலை­மைக்கு மிகவும் விசு­வா­ச­மான இரு­வரை தெரிவு செய்து தேசி­யப்­பட்­டி­ய­லுக்கு கட்­சித்­த­லை­மை­யி­னூ­டாக சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. அவ்­வி­ரு­வர்­களுள் நானும் ஒருவர். முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி தலைமை இதற்கு முன்னர் நடந்த தேர்­தல்­க­ளிலும் எனது பெயரை உள்­ள­டக்­கி­யி­ருந்­த­மையை இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யி­னூ­டாக எனக்கு தேசி­யப்­பட்­டியல் எம்.பி.பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இப்பதவியானது ஒரு குறுகிய காலத்துக்கானது. கட்சிக்கு விசுவாசமான மற்றும் தகுதியானவர்கள் அப்பதவிக்கு இனங்காணப்படுமிடத்து எனக்கு வழங்கப்பட்டுள்ள எம்.பி. பதவியை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளேன்.
Loading...