Friday, 21 August 2015

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நமது சமூகத்துக்கு வேண்டிய உதவிகளை முடிந்தவரை செய்ய முயற்சிக்கும் .


NDPHR ஸ்தாபகர் மொஹிடீன் பாவா 

இத்தேர்தலில் நான் படித்த பாடம் அரசன் இல்லாப் படை அரைப் படை என்பதை இத் தேர்தலில் நான் அனுபவரீதியாகக் கண்டறிந்தேன்
என்றாலும் தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியான எமது ஒட்டகக் கட்சி ஆட்சியை அமைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நமது சமூகத்துக்கு வேண்டிய உதவிகளை முடிந்தவரை செய்ய முயற்சிக்கும் . தோல்விதான் வெற்றியின் முதல் படி .அதற்காக நாங்கள் முதலைக் கண்ணீர் வடிக்கவில்லை ,மற்றவர்களை குற்றம் குறை சொல்லவில்லை .ஒரு நாள் வரும் மக்கள் நம்மை அங்கீகரிப்பர் என்ற திட நம்பிக்கை எம்மிடம் உண்டு . எமது கட்சியின் திட்டம்கள் ,செயல் முறை நடை முறைப் படுத்தல் என்பன உரிய முறைப் படி மக்களுக்கு உணர்த்தப்படும். 

எமது கட்சியின் நோக்கம் பதவி பெறுவதுக்காக அல்ல என்பதை மக்கள் முதலில் உணர வேண்டும். எமது அபிவிருத்தித் திட்டம்கள் மற்றும் அத்திட்டம் களின் பலாபலன்கள் பற்றி   உரிய முறையில் ஆட்சியாளர்களின் கவனதிக்குக் கொண்டுவரப்படும் ,

எதிர்வரும் மாநகர சபை தேர்தலில் எமது ஒட்டகக் கட்சி களம் இறங்கும் . முதல் படியில் விட்ட பிழைகள் யாவும் சரி செய்யப் படும் . வரும் தேர்தலில் கட்சியின் இஸ்தாபகரான நானே களம் இறங்கி மற்றோருக்கும் வழி காட்டுவேன். அரசன் இல்லாப் படை அரைப் படை என்பதை இத் தேர்தலில் நான் அனுபவரீதியாகக் கண்டறிந்தேன்



Loading...