Monday, 24 August 2015

அடங்கிப்போன போர் வெற்றி அலை! வெடிக்கப்போகும் போர்க்குற்ற அலை


சிங்கள் ம்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த போர் வெற்றி அலை ஓத் தொடங்கியுள்ளதை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் இருந்து உணரக் கூடியதாக இருக்கிறது.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போர் வெற்றி வாதம், விடுதலைப் புலிகள், போர்க்குற்ற விசாரணை விவகாரங்களை முதலீடாகப் பயன்படுத்தி பிரசாரங்களை முன்னெடுத்த கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் வெற்றிபெற முடியாது போயுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெ்றி கொண்டது தானே என்ற இறுமாப்புடன் மேடைகளில் முழங்கி வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தனக்கென ஒரு பாராளுமன்ற ஆசனத்தைத் தான் கைப்பற்ற முடிந்திருக்கிறதே தவிர பிரதமர் ஆசனத்தை எட்ட முடியவில்லை.அவர் தனது வெற்றிக்காக போர் வெற்றி வாதத்தை முன்னிலைப்படுத்தினார்.

விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்கும் ஆபத்து உள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிங்கள மக்களுக்கு அச்சமூட்ட முயன்றார்.சிங்கள மக்கள் வடக்கிற்குச் செல்ல முடியாதுள்ளதாகவும் அவர்கள் அங்கு தாக்கப்படுவதாகவும் கூட மகிந்தவின் மேடைகளில் பொயப்பிரசாரம் செய்யப்பட்டது.

அதைவிட, சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ரணில் அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும், போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களை சர்வதேச நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தரப்பினால் பிரசாரங்கள் செய்யப்பட்டன.

ஆனாலும் இந்தப் பிரசாரங்கள் பெரியளவிலான ஆதரவு அலையை மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்படுத்தித் தரவில்லை.மகிந்த ராஜபக்ச 2005ல் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு தேர்தலலிலும் போர் வெற்றி வாதத்தை முன்னிலைப்படுத்தி வெற்றி பெற்று வந்தார்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னர் நடத்தப்பட்ட தேர்தல்களில் இந்தப் போர் வெற்றி அலை கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் மெல்ல மெல்ல அடங்கிப் போகத் தொடங்கியுள்ளது.

போரை வென்று கொடுத்தவர் என்ற ஒரே காரணியை வைத்துக் கொண்டு மகிந்த ராஜபக்சலை அதிகாரத்தில் அமர வைக்க முடியாது என்று சிங்கள மக்களில் கணிசமானோர் தீர்மானித்து விட்டனர்.

அதனால் தான் அவரால் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் துழுவ நேரிட்டது எனபதுடன், பாராளுமன்றத் தேர்தலிலும் அதிகாரத்தைப் பிடிக்க முடியாமல் போனது.மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட பின்னடைவை மட்டும் வைத்துக்கொண்டு தெற்கில் போர் வெற்றி வாதம் ஓயத் தொடங்கியுள்ளதாக கணிக்க முடியாது.அதற்கு மேலும் சல உதாரணங்கள் உள்ளன.

அரசியல் ரீதியாக மகிந்த ராஜபக்ச போருக்கு தலைமை தாங்கியது போலவே இராணுவ ரீதியாக போருக்குத் தலைமை தாங்கியவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. அவரையும் இந்தத் தேர்தலில் மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்திருக்கிறார்கள்.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுடன் போட்டியிட்டுத் தோல்வியுற்ற சரத் பொன்சேகா 2010 ஏப்ரலில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்.ஜே.வி.பியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போது அவரது அணிக்கு 7 ஆசனங்கள் கிடைத்திருந்தன.

கொழும்பு மாவட்டத்தில் சரத் பொன்சேகாவுக்கு அப்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகள் கிடைத்திருந்தன.ஆனால் இம்முறை தனித்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியால் நாடு முழுவதிலும் போட்டியிட்டு மொத்தம் 28,587 வாக்குகளைத் தான் பெற முடிந்திருக்கிறது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தன்னை ஒரு நியாயமான அரசியல் வாதியாக காட்டிக் கொண்டாலும் போருக்குத் தலைமையேற்ற பெருமை தனக்கே உரியது என்பதை தேர்தல் மேடைகளில் வெளிப்படுத்தி வந்தவர்.

அதுமட்டுமன்றி, தன் மீது மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், சேதமடைந்த காரையும் தனது பிரசாரக் கூட்டங்களுக்கெல்லாம் கொண்டு சென்று காட்சிப்படுத்தினார்.

இதன் மூலம் சிங்கள மக்களிடையே அவர் அனுதாபத்தையும் ஆதரவையும் தேட முனைந்தார்.போர் வெற்றிவாத அலை இன்னமும் வீசுகிறது என்றால், சரத் பொன்சேகாவுக்கு சார்பான அலை சற்றேனும் வீசியிருக்க வேண்டும். மகிந்த ராஜபக்சவுக்குத் தான் முன்னர் அதிகாரத்தில் இருந்தவர் என்ற அதிருப்தி அலை ஒன்று இருந்தது.ஆனால் சரத் பொன்சேகாவுக்கு அப்படியான அதிருப்தி அலை இருக்க வாய்ப்பில்லை.

போர் வெற்றி வாத அலை இன்னமும் தீவிரமாக உயிர்ப்புடன் இருக்கிறது எனக் கருதினால் சரத் பொன்சேகாவுக்கு குறைந்த பட்சம் ஓர் ஆசனமாவது கிடைத்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை.இந்தத் தேர்தலில் போர் வெற்றி வாதத்தை முன்னிலைப்படுத்தி போட்டியிட்டவர்களில் மற்றொருவர் வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர.

போருடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என்ற வகையில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் இந்த மூவரும் தான்.கடற்படையின் தலைமை அதிகாரியாக இருந்து சிவில் பாதுகாப்பு படையின் தளபதியாக இருந்து 2010 பாராளுமன்றத் தேர்தலின் மூலம் அரசியலுக்கு வந்தவர் வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர.

அப்போது அவர் அம்பாறை மாவட்டத்தில் க்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு அதிகபட்சமாக 54, 373 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். மகிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசி.

19வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்த ஒரே உறுப்பினரும் இர் தான்.ஆனால் இவரால் இந்த முறை அம்பாறையில் வெற்றிபெற முடியவில்லை. கடந்த முறை அதிகப்டச் விருப்பு வாக்குகளை இவருக்கு அளித்த மக்கள் இம்முறை தூக்கியெறிந்திருக்கிறார்கள்.

சரத் பொன்சேகாவும், வைஸ் அட்மிரல் சரத் வீரசேகரவும், தூக்கியெறிப்பட்டதன் மூல6ம், போர் வெற்றி அலை ஓயத் தொடங்கியுள்ளது என்பது மட்டும் வெளிப்படவில்லை. இராணுவப் பின்னணி கொண்டவர்கள் பாராளுமன்றம் செல்லும் அண்மைக்காலப் பாரம்பரியமும் மாற்றப்பட்டுள்ளது.

போருடன் நேரடித் தொடர்புடையவர்களாயிருந்த மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா, சரத் வீரசேகர ஆகிய மூவருக்கும் போர் வெற்றி அலை கைகொடுத்திருக்கவில்லை.இது இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்பட்டுள்ள முக்கியமானதொரு விடயம்.

அதேவேளை, இந்தப் போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐநா விசாரணை அறிக்கை இந்தப் பத்தி வெளியாகும் போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருக்கும்.அந்த அறிக்கையில் இரு அரசியல் வாதிகள் மற்றும் 41 இராணுவ அதிகாரிகள் என்று 43 பேர் மீது பேர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனினும் அதன் அதிகாரபூர்வ உள்ளடக்கம் இந்தப் பத்தி எழுதப்படும் வரை வெளிவரவில்லை.இந்த விசாரணை அறிக்கை அடுத்த மாதம் ஜெனிவாவில் பெரும் பூகம்பமாக வெடிக்கப் போகிறது.அதில் அரசாங்கம் என்ன நகர்வுகளை எடுக்கப் போகிறது.

சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலக சமூகம் என்ன நகர்வை எடுக்கப் போகிறது என்பன கேள்விக்குறியாக உள்ளன.ஐநா அறிக்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தாலும் நாட்டைப் பாதுகாத்தவர்களைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை எ்று சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.சம்பிக்க ரணவக்கவும் பேர்க்குற்றவாளிகளை விசாரிக்க விடமாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் இலங்கை அரசு போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே இறங்ப் போவது உறுதியாகியுள்ளது.அதேவேளை தமக்குச் சாதகமான ஒரு அரசாங்கம் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்குலகின் நிலைப்பாடு என்னவென்ற கேள்வி எழுகிறது.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை கவசமாக பயன்படுத்தியதால் பொதுமக்களை மீட்க அரசபடைகள் நடத்திய போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அது போர்க்குற்றமல்ல என்று அமெரிக்கா ஓர் அறிக்கையை முன்வைக்கும் என்றும் தகவல்கள் சில வெளியாகியுள்ளன.அதற்குச் சாதகமாக ஐநா பிரகடனம் ஒன்றையும் பயன்படுத்த முனைவதாகவும் கூறப்படுகிறது.

இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏற்கனவே இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என்று கிளம்பியது அமெரிக்கா தான்.இப்போது அது போர்க்குற்றமில்லை என்ற வாதத்தை முன்வைத்தால் அமெரிக்காவின் பெயரும் சர்வதேச அரங்கில் கெட்டுப்போகும்.

எனவே இனி இது சூடான விவகாரமாகவே மாறப் போகிறது.தேர்தல் அலையும், போர் வெற்றி வாத அலையும் ஓயத் தொடங்கியிருந்தாலும், போர்க்குற்ற அலை இித் தீவிரமாகவே அடிக்கப் போகிறது என்பது உறுதியாகியிருக்கிறது.
Loading...