Sunday, 16 August 2015

தேர்தல் முடிவுகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் கணிப்பீட்டு ஆய்வறிக்கை


புலனாய்வுப் பிரிவினர் கணிப்பீட்டு ஆய்வறிக்கை பிரகாரம் மகிந்த ராஜபக்ச அணியினரைவிடவும் ரணில் விக்ரமசிங்க அணியினர் பலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு, மற்றும் மாத்தளை, கேககாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் நிச்சயமற்றிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி 88 ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும்,

13 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெறும் வாய்ப்புள்ளதாகவும், இதேவேளை மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 75 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, 10 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெறும் நிலை இருப்பதாகவும், இந்நிலையில் ஜே.வி.பி 13 ஆசனங்களைப் பெறும் அதேவேளை, 3 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெறும் நிலை இருக்கிறது.

வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 15 ஆசனங்களைக் கைப்பற்றுவதுடன் 2 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெறும். ஐக்கிய தேசியக் கட்சி 10 மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு மாவட்டங்களிலும் வெற்றிபெறும் எனவும் புலனாய்வுப் பிரிவினர் கணித்துள்ளனர்.
 
Loading...